This is not my view. Part of message forwarded in Vivekananda speeches. I have opposite view.
பங்காளிகள் ஆனாலும் பகைவர்கள் ஆன பாண்டவர்களின் தாய், குந்தியை தங்கள் மாளிகையில் வைத்து கண் போல பாதுகாத்தான் துரியோதனன் மற்றும் அவன் தாய் காந்தாரி.
என்னுடன் வாழ வேண்டும் என்றால், இன்னுடைய மீனவ குடிசைக்கு வந்துவிடு. நான் உன்னை காப்பாற்றுகிறேன். நான் உன்னோடு வாழ வேண்டுமென்றால், உனக்கும் எனக்கும் பிறக்கும் பிள்ளை ராஜா ஆகவேண்டும். அதற்கு உறுதி கொடு. என்கிறாள் பீஷ்மானின் தந்தை சாந்தனு மஹாராஜாவிடம் மீனவப்பெண்.
தன்னையே இழந்தபின், என்னை வைத்து சூதாட உனக்கு உரிமை இல்லை என்கிறாள், பாஞ்சாலி, தர்மனிடம்.
நள்ளிரவில், நடுக்காட்டில், என்னை விட்டு பிரிந்தாய். கணவன் என்ற பொறுப்பில் இருந்து நீ தவறி விட்டாய். எனவே நான் இன்னொரு மறுமணம் செய்து கொள்ள, சுயம்வரம் நடத்த துணிந்தேன். என்கிறாள், தமயந்தி, நளனிடம்.
என்னுடைய காதலனை மனம் முடிக்க நான் சுயம்வரம் நடத்தினேன். நீ குறுக்கே வந்து தடுத்து விட்டாய். அடே பீஸ்மா, நீ என்னை மணந்ததாக வேண்டும். இல்லையேல் உன்னை கொன்று விடுவேன். என்று சூளுரைத்து எடுத்த சபதம் முடிக்கிறாள் அம்பை.
மஹாபாரதம் முழுதும் பெண் உரிமைக்குரல்கள்.
சுவாமி விவேகானந்தரின் கருத்தில் இருந்து இங்கே கொஞ்சம் மாறுபடுகிறோம்.