குறள்:
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை
விளக்கம்: நிலையில்லாத பொருட்களை இது நிலைக்கும் என்று கருதி உணர்வோரின் அறிவானது இழிவே தரும். இதையே கம்பன் தனது ராமாயனத்தில் கும்பகர்ணனை நீ ஏன் ராமர் பக்கம் வந்து சேரக் கூடாது என விபீஷணன் அழைத்த போது,
‘நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிதுநாள் வளர்த்துப் பின்னைப்
போர்குகோலம் செய்துவிட்டாற்கு உயிர்கொடாது அங்குப் போகேன்…….’
பொருள்:
நீரில் கோலம் போட்டால் நிலைக்காது. வாழ்க்கையும் நீரில் கோலம் போட்டது போன்று நிலையற்றது. அப்படிப்பட்ட வாழ்வைபெரிதென நினைத்து என்னை நெடுநாள் வளர்த்து காப்பாற்றிய என் அண்ணன் இராவணனுக்காக போர்கோலம் பூண்டு உயிர் விடாமல் நான் இராமன் பக்கம் சேரமாட்டேன் என்று வாழ்வின் நிலையற்ற தன்மை குறித்து கூறியதாக கம்பர் கவி விளக்குகிறது.
Our further comments:
அருமை. கம்ப இராமாயணத்தில் எவ்வளவுதான் பொய் போலி நடை போட்டாலும், உண்மை இன்மை இன்றி ஆகாது. விபீஷணன், பீடன் என்று தமிழில் அழைக்கப்படுவான். சொந்த சகோதரனுக்கு துரோகம் செய்த தரித்திரம் பிடித்தவன் என்று பொருள்.