சுவாசமே உயிர்களின் சக்தி. விரும்பிய சுவாசம் விசுவாசம்.
தேவனை விசுவாசி .. நல்ல விசயங்கள் நடக்கும். – கிருத்துவம்.
சுவாசிப்பது சக்திக்காக. சக்தி இருக்க வேண்டிய இடம் சிவம். சிவமாகிய உடல். சக்தியின்றி சவமாகும். எனவே சக்தியும் சிவமும் ஒன்றோடு ஒன்று இணைந்தவவை. சக்தியை பெண் வடிவமாக, சிவம் ஆண் வடிவமாக பார்க்கிறோம். எனவே உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக வைத்து ஆராதனை செய்கிறோம். அவற்றுக்கு விரும்பிய வடிவில் சிலை எடுத்து ஆராதனை செய்கிறோம். – இது இந்து தர்மம்.
அல்லாஹு எல்லாம் படைத்து, அதாவது காற்றும் படைத்து, உடலும் படைத்து, உயிரும் படைத்து, சுவாசிக்க மூக்கும் படைத்து, சொர்க்கத்தில் இருக்க இடம் வைத்து இருக்கிறான். மானுட வாழ்வில் அல்லாஹுக்கு பிரியமான செயல்கள் செய்து, விரைவில் சொர்க்கம் வந்து சேர். இல்லாவிட்டால் நீண்ட மானுட வாழ்வு பெற்று கஷ்டப்படு. அல்லாஹுக்கு பிடித்தமானது என்ன? எல்லாரையும் இறை நம்பிக்கை உள்ளவர்களாக, அதாவது முஸ்லீம் ஆக மாற்று. அதற்கு எந்த வழியானாலும் சரி. – இது இஸ்லாம்.
தன்னுடைய பார்வையின் எல்லையே உலகத்தின் எல்லை என பலர் நினைக்கிறார்கள்.
உண்மைதான். பொதுவாக மதுரைக் காரர்களுக்கு இந்த எண்ணம் உண்டு. மதுரை உலகின் மிக சிறந்த ஊர். மீனாட்சி அம்மன் ஆலயம் உலகின் மிகப்பெரிய மிக பழைய கோயில். தாங்கள் மட்டுமே வீரர்கள், அசகாய சூரர்கள் என்ற எண்ணம் உண்டு. தமிழ் மட்டுமே உலகின் பழைய மொழி. இதே எண்ணம் அனைத்து மக்களுக்கும் அவரவர் பகுதியில் உண்டு.
இந்த எண்ணங்கள் சிறு வயது முதல் விதைக்கப்படுபவை.
இதே போல தான் கடவுளை பற்றிய எண்ணம். இஸ்லாமும் கிருதுவமுமும் கடவுளுக்கு ஒரு வடிவம் கொடுத்து அதில் இருந்து மாறுபட்டு சிந்திக்க கூடாது என தடை செய்கின்றன. இஸ்லாத்தின் அல்லாஹ் (அந்த பெயரில் மட்டுமே சொல்ல வேண்டும். மற்ற வார்த்தை பயன் படுத்த கூடாது) மேற்கு திசையில் இருக்கும் கற்பனைக்கும் சிந்தனைக்கும் விபரிப்புக்கும் அப்பாற்பட்ட விசயம். பணிவதும் தொழுவதும் மட்டுமே மானுட வேலை. அந்த அல்லாஹ் வை, தானும் நம்பி, மற்றவர்களையும் நம்ப வைக்க வேண்டும். இது வடிவமைக்க கூடாத வடிவம். விவாதிக்க கூடாத விசயம். எப்படி ஜெயில் தண்டனை கைதிகளுக்கு விவாதிக்க, எதிர்த்து பேச உரிமை இல்லையோ, அதே போல.
கிருத்துவம், இஸ்லாத்தை விட அதிக சுதந்திரம் … .. கடவுளை பற்றிய சிந்தனை செய்ய.
பெண் தெய்வ மேரி வழிபாடு. நேரடி இயேசு வழிபாடு. இயேசு ஒரு தூதர், இறைவன் அல்ல. இயேசு வழிகாட்டும் வழியில் பாவ மன்னிப்பு பெற்று பரலோக சாம்ராஜ்யத்தில் இடம் பிடிக்கும் முறை. பரிசுத்த ஆவி. ஆவியே எல்லாம் என்ற முறை. பல உட்பிரிவுகள் கொண்டது கிருத்துவம்.
கண்கள் சிறியவை. அந்த சிறிய கண்களால் அகண்ட உலகத்தை காணலாம் என்பது போல , கடவுளை எங்கெங்கும் காணலாம், எந்த வடிவத்திலும், வடிவம் இல்லாமலும் காணலாம். ஒரு இந்துவின் பார்வை பரந்து விரிந்தது. கண்களால் காணும் காட்சி போல.
மற்றவர்களின் பார்வை குறுகியது. கண்கள் போல. அதுவும் இமை மூடிய கண்கள் போல.