ஹாஹ…
அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே… இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லயே.. ஏன்,ஏன்,ஏன்?
என்ற பாடல் வரிகள் உண்டு…
அட சோம்பேறி… அந்தநாள் உன் அப்பன் சம்பாதிக்க நீ செலவு பண்ணுன… இன்பமா இருந்தது… இப்போ, நீ சம்பாதிக்க, உன் பிள்ளை செலவு பண்ணுறான்.. இன்பமா இல்ல…
இதுக்கு ஒரு பாட்டு வேற… ஹ்ம்ம்
எனக்கு தெரிய இளமை என்பது போராட்ட குணம் பொறுத்த விசயம். லஞ்சம் ஊழல் ஜாதி அடிப்படையில் ஏற்ற தாழ்வு போன்றவற்றை எதிர்த்து நிற்கும் வரையில், முன்னேற துடிக்கும் வரையில் ஒருவர் இளைஞர் தான்.
என்னால் முடியாது என்று ஒதுங்கும் போது, சமூக அவலங்களை கண்டு அஞ்சும் போது, வயோதிகம் ஏற்படுகிறது.
அம்பா சகோதரிகளை வாள் முனையில் தூக்கிக் கொண்டு வந்து தன் ஒன்று விட்ட சகோதரனுக்கு கட்டி வைக்கும் போது பீஷ்மன் இளைஞன். கௌரவர் சபையில் பாஞ்சாலி துகில் உரியும் போது தடுக்க இயலாத முதியவர் பீஷ்மர்.
கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாமல் வெறுமனே போரிட்டு தோற்றவர் துரோணர். மரணப் படுக்கையில் இருந்த துரியோதனுக்கு,, பாண்டவர் வம்சம் அழிந்தது என்ற நற்செய்தி சொல்லி மகிழ்வுடன் இறக்க வைத்தவன் துரோணரின் மகன் அசுவத்தாமன்.