தமயந்தி கதையில் வருவது.
பேரழகி தமயந்திக்கு சுயம்வரம். அவள் நளனை ஏற்கனவே தேர்ந்து எடுத்து உள்ளார். இருவருக்கும் காதல் கோட்டை சினிமா போல காணாமலே காதல்.
பேரழகி தமயந்தி அடைய பெரும்பாலும் பெண் பித்தர்களான தேவர்களும் துடிக்கின்றனர். அவர்களும் நளன் போட உருவெடுத்து வருகின்றனர்.
புத்திசாலி தமயந்தி உண்மையான நளன் கண்டு பிடித்து மாலை இடுகிறாள்.
ஏமாந்த தேவர்கள் திரும்ப போகும் போது, நோண்டிக் கொண்டே மெதுவாக வரும் சனி வருகிறான். தானும் தமயந்தி சுயம்வரத்தில் கலந்து அவளை அடைவதாக சொல்கிறான்.
சுயம்வரம் முடிந்தது. தமயந்தி உண்மையான நளன் கண்டு பிடித்து மாலை அணிவித்து மணம் செய்து கொண்டார் என்பதை அறிந்து சனி கொக்கரிக்கிறான்.
அப்போது தேவர்கள் சொல்கிறார்கள்.
அடேய், நொண்டி சனி… உன்னால் புத்திசாலிகளை பிடிக்க இயலாது. தமயந்தி புத்திசாலி. நளன் போல நால்வர் இருக்க உண்மையான நளன் கண்டு பிடித்த புத்திசாலி அவள். நளன் நல்லவன். நேர்மை நியாயம் அறிந்தவன். அவனையும் உன்னால் பிடிக்க இயலாது. எனவே பொத்திக் கொண்டு வா.. என்று சனியை அழைத்துச் சென்றனர்.
பின்னாளில் ஒரு சிறு தவறு செய்தலால் சனி பிடித்தான் என்பது தனிக் கதை.
Let difficulties know that you are difficult. Correct.
எதிரி உனக்கு துன்பத்தை பரிசாக கொடுத்தால் அந்த துன்பத்தை அவனுக்கு திருப்பி கொடு, என்று சொன்ன மாவீரன் பிரபாகரன் நினைவும் வருகிறது.