“Love is the adjective of unconditional Gratitude, appropriated by itself”
could be a better sentence formation.

அன்பு நிபந்தனை இல்லாத நன்றியின் தொடர்ச்சி, தானாக எடுத்துக் கொண்டது.

Appropriate என்ற சொல்லுக்கு, தானாக எடுத்துக் கொள்வது என்பது பொருள்.

Government appropriates the property towards penalty or tax arrears.

Appropriate action என்பது, ” சரியான நடவடிக்கை ” என தவறாக பலரால் புரிந்து கொள்ளப்படுகிறது.

‘காதலாகி கசிந்து உள் உருகி ..’ என்று சிவனைப் பற்றி தேவாரத்தில் பாடுகிறார்கள்.

நாம் கடவுளை நேசிக்கும் போது, அல்லது கடவுள் நம்மை நேசிக்கும் போது, அங்கே நிபந்தனைகள் இல்லை.

அதற்காக சுந்தரேசன் தன் தோழி பிரியாவுடன் .. தன் மீனாட்சியிடம் கல்யாணம் நடக்கும் போது வந்தது தவறு தான்.

திருமணம் முடிந்து தேர் பவனி வரும் போதும், பிரியாவை பெரிய தேரில், உடன் வைத்துக் கொள்கிறார்.
மீனாட்சி சிறிய தேரில் பின்னால் வருகிறார்.

பின்னாளில் மீனாட்சி வைக்கிறார் ஆப்பு. மதுரை ஆட்சிப் பொறுப்பை கையில் எடுத்து, மதுரை அரசாளும் மீனாட்சி ஆகிறார். முதல் பூஜையும் மரியாதையும் எங்கள் தாய் மீனாட்சிக்கு.

கட்டிய கணவன் அப்படி என்றால், உடன் பிறந்த அண்ணன் கதை வேறு மாதிரி.

அந்த கள்ளழகன், ஆடி அசைந்து, வேட்டை ஆடி, துலுக்க நாச்சியார் வீட்டுக்கு போய் ஜல்சா செய்து விட்டு, கொக்கு வேட்டை ஆடி, நிதானமாக வரும் போது, தங்கை மீனாட்சியின் கல்யாணம் நடந்து முடிந்து விட்டது. அந்த ஆள் பாதி வழியிலேயே திரும்ப போகிறார். அங்கே வீட்டுக்குள் நுழைய விடவில்லை. சுத்தமில்லாமல் துலுக்க நாச்சியார் வீட்டுக்கு எல்லாம் போய், கொக்கு சுட்டு தின்று வந்ததால், தீட்டு கழிக்க, கொரோனா கிருமி சாக, வீட்டுக்கு வெளியே நிறுத்தப் படுகிறார்.

இதையே பாண்டிய நாடெங்கும் சித்திரை திருவிழா என கொண்டாடுகிறோம்.

இது உணர்த்துவது என்ன?

கணவன் தவறு செய்தால் அங்கே மனைவியின் கை ஓங்கி அதிகாரம் பறிக்கப் படும்.
முதலாளி தவறு செய்தால், வேலையாட்கள் கூட, முதலாளியை வீட்டுக்கு வெளியே நிற்க வைத்து விடுவார்கள்.

மதுரை மக்களான நாங்கள் சூப்பர். மீனாட்சி கல்யாணத்தில் அறுசுவை விருந்து சாப்பிடுவோம். பிரியாவிடை தாயாரின் அருள் வேண்டி தெருவில் நின்று வணங்குவோம். துலுக்க நாச்சியார் அவர்களது தூரத்தில் நின்று கும்பிடுவோம். கள்ளழகன் தன் வீட்டு அழகர் கோவில் வாசலில் காக்க வைக்கப் படும் போது, ஆகா.. எங்கள் பெருமாள் எங்களுடன் வெளியே தங்கி இருக்கிறான் என்று பெருமைப் பட்டு, விழா எடுப்போம்… பாட்டுப் பாடி, ஆட்டம் போட்டு .. கொண்டாடுவோம். எல்லாம் முடிந்து பவ்யமாக போய் மீனாட்சி அரசியிடம் சரணாகதி அடைவோம். தாயே நீயே துணை. என்று.

அந்த அம்மாவும், சரி போங்கடா.. என்று எங்களை திரும்பவும் பணிக்கு சேர்த்து படி அளப்பார்…

இது வெறும் மதுரை அல்ல… மாமதுரை. மானாமதுரை. எங்க மாமாமதுரை.

அந்நாளில் சோழ மன்னன் படையெடுத்து எங்கள் மதுரை நகரை தீக்கிரையாக்கி, மதுராந்தகன் என பெயரெடுத்தான். ஒரு வணிகன் மனைவி, கண்ணகியும், தன் கணவன் கொள்ளப் பட்டதுக்கு நீதி கேட்டு, எங்கள் மதுரை நகருக்கு தீ வைத்தாள். போனால் போகட்டும் என்று விட்டு விட்டு, அந்தக் கண்ணகிக்கும் கோயில் கட்டினோம்.

பின்னாளில் எங்கள் பாண்டிய மன்னன் சோழ நாட்டை வென்று துவம்சம் செய்த போது, நாங்கள் எங்கள் எதிரி கட்டிய தஞ்சை பெரிய கோயிலை தகர்க்க வில்லை. மாறாக அதற்கு அருகில் இன்னொரு கோயில் கட்டிக் கொடுத்து விட்டு வந்தோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>