முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற போதிலும் கூட, சரி செய்ய முடியாத தவறுகளே இல்லை. Better late than never. ஒரு போதும் இல்லை என்பதை விட தாமதம் சிறந்தது.
தவறுவது மானுடம். தவறுகளுக்கு இடம் கொடுக்காத வாழ்வு உடைந்து போகும். எந்த அளவுக்கு தவறு செய்யலாம் என்பதற்கு அளவுகோல் வைக்கலம். இதை இந்து மத தத்துவம் அறிந்தவர்கள் மற்றும் இன்ஜினியர்கள் நன்கு அறிவார்கள்.
உலகில் உள்ள அனைத்தும், (இது உயிர் உள்ள, உயிர் அற்ற அனைத்துக்கும் பொருந்தும்) பஞ்ச பூதங்களால் பாதிக்கப் படுபவை.
பெரிய ரயில் என்ஜின் மற்றும் பெட்டிகளின் பாரத்தை தாங்கும் தண்டவாள பெரு இரும்பு, சாதாரண சூரிய வெப்பத்தால் பாதிக்கப்பட்டு நீளம் அதிகமாக மாறும். அப்போது அந்த நீட்டத்தை பொறுத்துக் கொள்ளும் அளவுக்கு இடைவெளி விட்டு பொருத்த வேண்டும் அடுத்த தண்டவாளத்தை. அப்படி செய்ய வில்லை என்றால், அவை ஒன்றோடு ஒன்று இடித்து, இடம் பத்தாமல் மேல் எழும்பி, அந்த ரயிலை கவிழ்த்து விடும்.
மானுட வாழ்வும் அவ்வாறே. காதல் ஜோடியான கணவன் மனைவியாக இருந்தாலும், அவரவர் தனித்துவத்துக்கு கொஞ்சம் இடம் வேண்டும். அந்த இடைவெளி இல்லாத போது காதல் கசந்து பிரிவை நோக்கி செல்லும். கவனித்து பார்த்தால், சபரி மலைக்கு ஆண்கள் மாலை போட்டு விரதம் இருந்து செல்லும் போது, அதை கடைபிடிக்கும் குடும்பங்களில் கணவன் மனைவி பிரிவு என்பது பெரும்பாலும் இருக்காது. அதே போல, பெண்கள் தங்களுக்காக விரதம் இருந்து விழா எடுக்கும் நவராத்திரி போன்றவற்றாலும்.
யானையை அங்குசத்தால் கட்டுவோம். அது சிறு கயிறு தான். யானைக்கும் தெரியும் அதை அறுக்க முடியும் என்று. பாகனுக்கும் தெரியும். ஆனால் அது ஒத்துக்கொண்ட கட்டுப்பாட்டை குறிக்கும். அதே போல தான் இந்து பெண்கள் ஏற்றுக் கொள்ளும் மங்கள நாண் எனப்படும் தாலி. பிராமணர்கள் மற்றும் வைசியர்கள் ஏற்றுக்கொள்ளும் பூணூல். தாலி ஏற்றுக்கொண்ட பெண்ணும், பூணூல் ஏற்றுக்கொண்ட ஆணும், தங்களுக்கான கட்டுப்பாட்டை ஏற்றுக் கொள்கிறார்கள்.
எனவே தவறுகளுக்கு அறிவியல் பூர்வமான அளவான இடம் அளிக்காமல் பெரிய கட்டுமானங்களை உருவாக்க முடியாது. இது பொறியியலில் அறிவியல் தத்துவம்.
அதுவே மனித வாழ்வுக்கும். இது அறிவியலே இந்து மதம் என்பதின் மற்றொரு ஆதாரம்.