பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார், இறைவனடி சேராதவர். திருக்குறள். திருக்குறள் என்பது இந்து நூலாகாது என்று சொல்லுபவர்கள், இந்து தத்துவத்திலே, இது எவ்வளவு பொருத்தமாக அமைந்திருக்கிறது. பிறவி, எனும் பெருங்கடலை, இறைவனை பிடித்து கொண்டு நீத்துபவர்கள் நீந்துவார்கள். மற்றவர்கள் நீந்த மாட்டார்கள்! அப்படினு சொல்லுறாங்க.

சிவவாக்கியர் பாடல்ல என்ன சொல்லுறாங்கன்னா,

ஓடி, ஓடி,ஓடி ஓடி,உட்கலந்த ஜோதியை,

நாடி நாடி நாடி கலந்து போய்,

வாடி, வாடி, வாடி, மாண்டு போன மாந்தர்கள்.

கோடி, கோடி, கோடி,கோடி, எண்ணிறந்த கோடியே!

கோடிக்கணக்காக மக்கள் வந்து வந்துகிட்டே இருக்கிறாங்க. மண்கலம் கவிந்த போது வைத்து, அடுக்குவார். வெண்கலம் கவிந்த போது வேணுமென்றே பேணுவார். நம் கலம் கவிந்த போது, நாறுமென்று போடுவார். என் கலந்து நின்ற மாயம், என்ன மாயம் ஈசனே!

மண்பாத்திரம் கூட கவிந்திடுச்சினா அடுக்கி வைப்பாங்க. வெண்கலப் பாத்திரத்தைக் கூட தொடச்சி வைப்பாங்க. நம்முடைய கலம் நம்முடைய உடல் கவிழும் போது, இறந்து போகும் போது, அய்ய இது, என்னென்று வீச ஆரம்பிச்சிடும். குயிக்கா டிஸ்போஸ் பண்ணனும்னு சொல்லுவாங்க. ஈசனே என்னோடு கலந்து நில்லு, அப்படினு சொல்லுறாங்க.

நடராஜர் பத்து. கொஞ்சம் புரட்சிகரமான பக்திப் பாடல், புரட்சி, புரட்சின்னு சொல்லுறவங்களுக்கு நடராஜர் பத்துல என்ன புரட்சி சொல்லப் பட்டிருக்கிறது. என்பதை கவனிக்க வேண்டும்.

கடலென்ற புவிமீதில் அலையென்ற உருக்கொண்டு

கனவென்ற வாழ்வை நம்பி

காற்றென்ற மூவாசை மாருதச் சுழலிலே

கட்டுண்டு நித்த நித்தம்

உடலென்ற கும்பிக்கு உணவென்ற இரைதேடி

ஓயாமலிரவு பகலும்

உண்டுண்டுறங்குவதைக் கண்டதே யல்லாது

ஒருபயனுமடைந்திலேனை

தடமென்ற மிடிகரையில் பந்தபாசங்களெனும்

தாவரம் பின்னலிட்டு

தாயென்று சேயென்று நீயென்று நானென்று

தமியேனை இவ்வண்ணமாய்

இடையென்று கடைநின்று ஏனென்று கேளாது

இருப்பதுனக்கழகாகுமா?

ஈசனே சிவகாமி நேசனே

எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!

பிறவி பெருங்கடல், அப்படிண்னு திருவள்ளுவர் சொல்லுகிறார். ஒரு வெண்கலத்தைவிட, மண்கலத்தை விட மோசமான இந்த உடல், நாறிப்போயிடும், தூக்கிப் போடு அப்படிண்னு, சிவவாக்யத்துல, சொல்லுறாங்க. நடராஜர் பத்துல, இந்த உலகமே கடல் போல இருக்கு. அதுல நான் அலையா இருக்குறேன். ஒரு கனவு போல எல்லாம் நடக்குது. இதுல ஒரு சின்ன குச்சியை வச்சிகிட்டு, அடுத்தவன் இதுல போக முடியுமா. என்னோட உடம்புக்கு வந்து உணவை தேடுறேன். புள்ள, அப்பா, அம்மா, அப்படினு, போய் கேட்டே இருக்கிறேன். நானு, டெய்லியும், சாப்பிடுறேன், தூங்குறேன், ஆனால் எனக்கு வந்து என்ன கடைசியா கிடைக்கிறது? ஈசனே, உன்னுடைய அருளை கொடு.முக்தியை கொடுன்னு சொல்றாங்க.

அதுயென்ன முக்தி? முக்தி, பக்தி என்பது ரெண்டு விஷயங்களில் காணப்படுகிறது. பக்தி என்பது ஆண்டவன் மீது நாம் வைத்துள்ள அபிமானம், காதல். முக்தி அப்படினு சொல்லும்போது, மற்ற மதங்களில் இல்லாத ஒரு கூற்று. திரும்ப, திரும்ப பிறப்பெடுக்குறோம். இந்த திரும்ப திரும்ப பிறப்பெடுப்பதில் இருந்து விடுதலை வேண்டும். பேரானந்தப் பெருங்கடலை அடைய வேண்டும். அப்படின்றாங்க. இது கொஞ்சம் தத்துவார்த்தமான விஷயம்தான். திரும்ப, திரும்ப பிறப்பெடுக்குறோமே எப்படி பிறப்பெடுக்குறோம்?

நீ வந்து. ஒரு எறும்பை தொந்தரவு பண்ணீனா, அடுத்த பிறவியில,எறும்பு மனுஷனாயிடும்.   நீ, எறும்பாயிடுவ. அது உன்னைத் தொந்தரவு பண்ணும். அதனால நீ தொந்தரவு பண்ணாதே. என்று சின்னப் பசங்களுக்கு சொல்லி வைப்பாங்க.

விபூதி அப்படின்னா என்ன. அதப்பத்தி, நிறைய பாடல்கள் இருக்கு. அது இந்துக்களின் வாழ்க்கையில ரொம்ப முக்கியமான விஷயத்தைப் பிடித்திருக்குது. ஒரு மேலை நாட்டவர் கிட்ட விபூதியை பற்றி சொன்னா, கடைசியில அவர் சொல்லுவார் ‘ஹோலி சீட்’ அப்படின்னுவாறு. ஹோலி என்பது பசுவை நாம புனிதமாக எண்ணுகிறோம், அதுதான். ‘சீட்’ என்பது அதனுடைய சாணி. அதை நாம ஏரிய வைத்துதான் பஸ்பம் ஆக்கிறோம். அல்டிமேட் விபூதி என்பது, பஸ்பம், சாம்பல். அதுக்கு நம்ப அவ்வளவு புனிதத்துவத்தை கொடுக்கிறோம். அதைத்தான் மெய்னா யூஸ் பண்ணுறோம்.

அதுல என்ன புனிதத்துவம்? அப்படினு பார்க்கும் போது, அறிவியல் பூர்வமாக சில கருத்துக்கள் வருது. என்ன கருத்துக்கள்? உயிர் உள்ள எதுமே, கடைசியா விபூதியா சாம்பலாகத்தான் மாறிடும். எதுவுமே, நீங்க எதையாவது காமிச்சிக்கோங்க. இந்துக்கள் வந்து உடலை எறிவூட்டும் போது, நேரடியாக சாம்பலாகி விடுகிறது. மூன்றாவது நாள் போய் அந்த சாம்பல எடுத்து பூசிக்கிட்டு, அதோடு சேர்ந்து நவதானியங்களை, ஆற்றங்கரையில, மத்த இடங்களில் விதைத்து விட்டுட்டு, அதுக்கு அப்புறம் வழிபாடு பண்ணுறாங்க. டைரைக்ட்டா விபூதி.

அப்படி எரிக்கலன்னா என்ன ஆவது? புதைக்கிறாங்க. புதைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களும் அது தாவரமாக இருந்தாலும் சரி, மனிதனாக இருந்தாலும் சரி, விலங்குகளாக இருந்தாலும் சரி, உள்ள போய், டெபாசிட்டாகி பெட்ரோலியமாகுது. இல்லாட்டி நிலக்கரியாகுது. சோர்ஸ் ஆப் எனர்ஜி இந்த ரெண்டும்தான். பெட்ரோலியமானாலும் அதை தோண்டி எடுத்து. வடிகட்டி பிரித்து, அல்ட்டிமேட்டா எரிச்சிப் புடுறோம். எரிச்சது அப்புறம் கடைசியாக நுண்ணிய துகள்களாக, சாம்பலாக மாறிவிடுகிறது. நிலக்கரியாக மாறினாலும் அதை தோண்டி எடுத்து, நெருப்பாக்கி பயன்படுத்தி, கடைசியா அதையும் சாம்பலாக்கி விடுகிறோம். உயிர் உள்ள அனைத்துமே, நீங்க கவனித்து பார்த்தீங்கன்னா, கடைசியாக, என்னவாகிறது? சாம்பலாகத்தான் ஆகிறது.

சோர்ஸ் ஆப் எனர்ஜி எல்லாமே, பூமியில இருந்து, உயிருள்ள ஜீவன்கள் மூலமாகத்தான் கிடைக்கிறது. அதைத்தான் எனெர்ஜி அப்படினு வரும்போது உடல்ல ஒளிஞ்சிகிட்டு இருக்கு அப்படினு சொல்லுறாங்க. எனிபாம் நீங்க எலெட்ரிசிட்டி எனெர்ஜினு சொல்லலாம், எலெட்ரிசிட்டி எனெர்ஜி எங்கிருந்து புரொடியூஸ் பண்ணுறாங்க. பாக்கும் போது, நிலக்கரியை போட்டு எரிக்கும் போது, அத தண்ணியப் போட்டு எரிக்கும் போது, ஆவில வந்து, மோட்டார, ரோட்டாரால சுத்தவச்சி, மேகிநெட் பில்ட கிரியேட்டிவ் பண்ணுறாங்க, அல்டிமேட்டா வந்து அங்க போட்டு எரிக்கும் போது, சாம்பல்கள் புல்லா எரிந்து போய் விழுகிறது. பிளைஆஷ் அப்படினு சொல்லுறாங்க.

அந்த தத்துவங்களை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்திருந்து வைத்திருந்ததினால், நேரடியாக விபூதி, அதை கையில எடுத்து நெற்றியிலே பூசும் போது, அந்த தத்துவத்தை உணர்ந்து செய்யும் போது ஒரு பரவச நிலையை அடைகிறோம்.

அப்பான்னு சொன்னோம், தாத்தான்னு சொன்னோம், மாமான்னு சொன்னோம், போடாத ஆட்டம் இல்ல. செய்யாத நற்செயலும் இல்ல. கடைசியா, இதோ மயானத்தில் எரித்து விட்டோம். சாம்பலை எடுத்துக் கொண்டோம். நெற்றியிலே பூசிக் கொண்டோம். அப்ப வந்து நம்ப வாழ்வியல் தத்துவங்களை ஏற்கனவே சொன்ன மாதிரி, திரும்ப, திரும்ப, வந்து நம்ப உணவைத் தேடுறோம். மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை பின்னாடி போறோம். மனுஷா நினைச்சாக்கூட கடைசியா இதான் நீ.

இதோ இந்த சாம்பல், இதை நான் இப்படி பூசினா சைவம், இப்படி மேலிருந்து கீழைய பூசினா வைணவம். எப்படினா இருப்பது சாம்பல், அப்படின்ற மாதிரி வந்துடுது. இந்த தத்துவத்தை வச்சி பெருசா ஏன் சொல்லுறாங்கனா, ஒரு அளவுக்கு மேல வந்து ஆடக் கூடாது, ஆணவம் கூடாது, பக்தி நெறிகளை, முக்தி நெறிகளை, சமுதாய நெறிகளை, ஒழுங்குமுறைகளை, கடைப்பிடித்து அமைதியாக சந்தோசமாக, மற்றவர்களுக்கும் வழிவிட்டு, தனக்கும் வழிவிட்டு வாழ்க்கையை நடத்த வேண்டும்.

எவ்வளவு உயரிய தத்துவம் பாருங்க, தேடி, தேடி, போய் தேடாத ஊர்ல இருக்குற எல்லா பொண்ணுங்களையும் என்ஜாய் பண்ணிக்கிட்டு கல்யாணம் பண்ணிக்கிடணும், உலகத்துல இருக்குற எல்லா சொத்துக்களையும் அபகரிச்சி, அத வந்து ஆளுமை பண்ணனும்னு நினைக்காத, உலகத்துல இருக்குற அத்தனை நாடுகளையும் வின் பண்ணி உனது குடைகளுக்குள் கொண்டு வரணும்னு நினைக்காத, உன்னோட நாட்டை பாதுகாத்து வச்சிக்கோ, முடிஞ்ச வரைக்கும் ஓகே. நெய்பரி கண்ட்ரிஸ்க்கு பிரென்ட்ஸ் முகமாயிரு.

ஏன்னா கடைசியா, மன்னவானாக இருந்தாலும், தென்னவனாக இருந்தாலும், என்னவனாக இருந்தாலும், எவனாக இருந்தாலும், உடனடியாகவோ, மறைமுகமாகவோ, சாம்பலாத்தாண்டா ஆக போற. எந்த ஜாதியாக இருந்தாலும், எந்த மதமாக இருந்தாலும், இங்க வந்து எரிப்பதன் மூலமாக மூன்றாவது நாள் சாம்பல். எரிக்கப்படும் அருகதை இருந்தால், அகால மரணத்திற்கு அந்த அருகதையும் கிடையாது.

 அதர் வைஸ் பல ஆண்டுகள் கழித்து சாம்பல்! அவ்வளவுதான். உள்ள போய் வெந்து பொங்கி, நொந்து, நூடுல்ஸாகி, திக்கான திரவமாகி, பெட்ரோலியமா வந்து அத நோண்டி எடுத்து, அத, பிரி, பிரினு பிரிச்சி, கடைசியில் பெட்ரோலியம். பெட்ரோலியம் பொருள்ல பாத்தீங்கன்னா எல்லாத்தையும் தான் எரிக்க செய்வாங்க, தாரா இருந்தாலும், பெட்ரோலியமாக இருந்தாலும், டீசலாக இருந்தாலும் எரிச்சதுக்கு அப்புறம் என்னாவாகுது? சாம்பல்தான் கிடைக்கிறது. அதனால உணர்ந்து கொள், தெரிந்து கொள்,

ஒரு தத்துவார்த்த சித்தாந்தமாகவே கடவுள் இருக்கட்டும். நன்னெறியைக் கடைபிடி. எல்லாரும் எல்லாருக்கும் ஈக்குவல். எந்த சாம்பலும், இன்னொரு சாம்பலைவிட உயர்ந்தது இல்லை. அப்படின்ற தத்துவங்களை எடுத்துச் சொல்லி, பக்தி, அதன் மூலமாக முக்தி, கடைசியிலே விபூதி, சாம்பல் என்ற தத்துவங்களை எடுத்து வைத்து, வாழ்க்கையிலே, ஒருமுக நெறிப் படுத்தி, எந்த ஒரு நிலையிலும் தர்மம் தவறாமல் வாழ வேண்டும். போராட வேண்டும். தொழில் செய்ய வேண்டும், நட்பு பேண வேண்டும். குடும்ப உறவுகளைப் பேண வேண்டும். மற்ற உறவுகளைப் பேண வேண்டும். ராஜ்ஜியம் நடத்த வேண்டும். குடிமக்களாக வேண்டும். அப்படினு சொல்லுகிற ஒரு உன்னதமான மதம், இந்திய மதம், இந்து நெறி, இந்திய நெறி, என்று கூறி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்.

Original Audio posted in WhatsApp Group ‘Science is Hinduism’ on 28 May 2018. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>