வாழ்வை இறைவன் வழி நடத்துகிறான். பணியை நாம் செய்கிறோம்.
அது என்ன ‘பணி’ ?
செயல் வேறு.
வெலை வேறு.
பணி ? அது பணிவுடன் செய்வது.
ஒருவரின் ஆணைக்கு கட்டுப்படும் போது பணிவு வருகிறது. அதுவே பணி ஆகிறது.
வேலை யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். பணிவை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஒரு மேலாளர் கீழ் செயல் படும் போது, அவர் கட்டளை ஏற்கிறோம். பணிவு. பணி ஆகிறது.
தொழில் உரிமையாளர்கள் ? அவர்கள் வாடிக்கையாளர் கட்டளை ஏற்கிறார்கள். பணி ஆகிறது.
யாவரும் திருப்பணி செய்வோம். மனம் உவந்து நாமாக விருப்புடன் கட்டளை ஏற்று பொது மக்களுக்கு, அவர்கள் வந்து போகும் கோயில்களுக்கு செய்வது, திருப்பணி ஆகும்.
சர்ச்சில் செய்வது ஊழியம். மசூதியில் செய்வது வேலை. கோயிலில் செய்வது திருப்பணி.