இந்துக்களோட பழக்க வழக்கங்களில் மிகவும் முக்கியமானது காக்காய்க்கு சாப்பாடு வெக்கறது. மத்த மதங்களில் எல்லாம் இதனை பார்க்க முடியாது. அமாவாசை அன்னைக்கு, காக்காய்க்கு சாப்பாடு வெச்சிட்டுத் தான் நாம சாப்பிடுவோம். அதை மிகவும் பிடித்து செய்பவர்கள், தினமும் காக்காய்க்கு சாப்பாடு வைத்து விட்டு சாப்பிடுவார்கள். அதுக்கப்புறம் காக்காய்க்கு ஸ்பெஷலா சாப்பாடு வெப்போம். காக்காய் இந்தியா போன்ற இடங்களில் பெரும்பான்மையாக இருந்தாலும், பம்பாய் பகுதிகளில் புறாக்களுக்கு வைப்பார்கள்.
நாம் மனிதர்களை மட்டும் பார்த்தால் முடியாது. எல்லா உயிரினங்களையும் காப்பாற்றி வரவேண்டும். இதுல வந்து நம்மோட நிலப்பரப்பில் ரொம்ப காமனா இருக்கக்கூடிய உயிரினம் காக்கா. காக்கா நம்மளோட ஒட்டி நம்மை அண்டி வாழும். நம்மைப் போன்றே எல்லாத்தையும் சாப்புட்டுக்கும். விஜிடேரியன் சாப்பிடும், நான்விஜிடேரியன் சாப்பிடும், சூடா சாப்பிடும், ஆறிப்போனதை சாப்பிடும். ரொம்ப எமர்ஜென்சி, சாப்பாட்டுக்கு வழியில்லையென்றால் கொஞ்சம் கெட்டுப் போனதைக்கூட சாப்பிட்டுக்கும்.
நிறைய வீட்டுல சாப்பிட்டு வயிறு திம்முன்னு இருந்துச்சுன்னா, நம்ம வீட்ல வடை இருந்தா மட்டும் சாப்பிடும். இல்லன்னா போய்விடும். காக்கா வந்து கொஞ்சம் கவனிச்சி பாத்தீங்கன்னா எல்லாப் பறவைகளை விட ஒரு புத்திசாலி பறவை. அதை நாம ரொம்ப காமனா பாக்கர்துனாலேயும், நம்மகிட்டயே இருக்கக்கூடிய ஒரு சராசரி குணம் இந்தியர்களுக்கு. கருப்பா இருப்பதினால் அதனை சீப்பா எடைபோட்றோம். அதோட புத்திசாலித்தனம், பார்வை எல்லாமே பயங்கர ஒய்யாரம் இருக்கும் கவனிச்சிப் பாத்தீங்கன்னா. சில பெண்மணிகள் அடுப்படியில் சமைக்கும் போது, சமையல் கட்ல வந்து நிக்கும். அந்தப் பெண்மணி கொடுத்தால் மட்டும் சாப்பிடும். மத்தவங்களா இருந்தா, ஓடிப்போயிடும். இவன் என்னா, வேற ஆளா இருக்குன்னிட்டு.
மனிதர்கள் மற்ற விலங்கினங்களை சார்ந்து வாழ்கிறார்கள். தி.நகர்ல ஒரு அப்பார்ட்மென்ட்ல இருக்கும்போது யோசிப்பேன். முன்னாடியெல்லாம் தெருநாய்கள். பின்னாடியெல்லாம் பூனைகள், மேலே எல்லாம் காக்கா போன்ற பறவைகள். அது எல்லாம் நினைத்துக் கொள்ளும். மனிதர்கள் கதைவை எல்லாம் பூட்டிக் கொண்டு, அதுக்குள்ள ஒளிஞ்சிக்கிட்டு இருக்காங்கன்னிட்டு. நாங்க எல்லாம் ப்ரியா இருக்கோம்னு நினைத்துக் கொள்ளும். மனிதர்களை அண்டி இந்த விலங்கினங்களும், இந்த விலங்கினங்களை எல்லாம் அனுசரித்து நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இந்த பாம்பு கூட அப்படித்தான். பாம்புக்கு பால் வார்ப்பது பற்றி நான் ஏற்கனவே சொல்லி யிருக்கிறேன். எனவே காக்காய்க்கு உணவு படைப்பது என்பது ஒரு முக்கியமான விஷயமாக வெச்சிருக்கோம். காக்காய்களை நம்முடைய முன்னோர்கள் என்று சொல்கிறோம். இதெல்லாம் சும்மா. நினைத்துப் பார்த்தால், சிரிப்புக்குரிய விஷயமா இருக்குன்னு நமக்குத் தோணும். இறந்து போனவங்களோட ஆன்மா, காக்காய் கிட்டபோய், நம்மைச் சுற்றி வந்துக் கொண்டிருக்கும். அதை வந்து, நாம அடையாளம் கண்டு கொள்ளலாம் என்று ஒரு திரைப்படத்தில் நகைச்சுவையாகக் கூட இருக்கும்.
‘அந்த ஆத்தோரத்துல உட்கார்ந்துக்கிட்டு இருக்காரே. அவர் தான் உங்கப்பா. பக்கத்துல ஒண்ணு இருக்கு பாரு. அதுதான் கூட இருந்தவ. அங்கேயும் போய் இந்தாளு விடல பாரு’ன்னு ஒரு ஜோக்கு இருக்கும். அப்படியாம்மா? ன்னு, வயதுக்கு வந்தப் பிள்ளைகள் கேட்பது போலெல்லாம் இருக்கும். ஒரு பக்கம் நகைச்சுவை. இன்னொரு பக்கம், அறிவியலின் தாக்கம். முன்னோர்கள் காக்காவாக இருக்க முடியுமா? நாம் வைக்கும் சாப்பாட்டை காக்கா முன்னோர்கள் வடிவில் சாப்பிட முடியுமா? கொஞ்சம் கஷ்டம் தான்.
இதற்கு அறிவியல் பூர்வமான சித்தாந்த கதைகள் எல்லாம், சொல்ல முயன்றேன் என்றால் அது அறிவியல் பூர்வமான விஷயங்களாக இருக்காது. ஆனால், சிலவற்றை நாம் கவனிக்க வேண்டும். கவனித்து, அந்த நிகழ்வுகளை மனதிலே பதித்து வைக்க வேண்டும். காலைல காக்கா கத்திக்கிட்டே இருந்துச்சு. நீங்க வருவீங்கன்னு நினைச்சோம். உறவினர்கள் வரும் போது, கிராமத்துப் பக்கத்துல சொல்லுவாங்க.
காக்கைகள் ரெண்டு விதமாக கத்திக்கிட்டு இருக்கு. சண்டை வரும்னு நினைச்சோம். சண்டை வந்திருக்கும். பறவைகள் நம்மை எப்படியெல்லாம் கண்காணிக்கிறது. ஆனால், நாம் பறவைகளை கண்காணிப்பதில்லை. அதனால் தான், காட்டில் கூட ஆட்காட்டி பறவைகள் இருக்கின்றது என்றெல்லாம் சொல்வார்கள். மனிதர்கள் வரும்போது, உயரமான மரத்தில் இருந்து அந்த பறவைகள் கூக்குரலிடும். அந்தக் கூக்குரலை வைத்துக் கொண்டு காட்டுப்பகுதியிலே இருக்கக்கூடிய மற்ற உயிரினங்கள் சுதாரித்துக் கொள்ளும்.
ஆஹா மனிதன் வருகிறான். மோஸ்ட் டேஞ்சரஸ் ஃபெல்லோ. எல்லாம் ஜாக்கிரதையா இருங்க, அலார்டா இருங்க. வருபவன் சாதாரண ஆளில்லை. வரவன் டேஞ்சரான ஆளா இருந்தா நாம எல்லாம் ஒண்ணு சேந்து அட்டாக் பண்ணலாம்னு மேல இருந்து அந்த பறவை சொல்லிடுச்சு. இன்ஸ்டிங்க்ட் என்று சொல்லப் படுகின்ற, தானாக அறியக்கூடிய புலனறிவு பறவைகளுக்கு இருக்கின்றது என்பதனை அனைவரும் காலங்காலமாக ஒத்துக் கொள்கிறார்கள்.
எனவே தான், வடதுருவத்தில் இருந்து தென்துருவத்திற்கு வருடா வருடம் பறவைகள் பறக்கின்றன. அப்படிப் பறக்கும் போது, இளைய பறவைகள் எல்லாம் ஃபர்ஸ்ட் டைம் டிராவல் பண்ணுது. அவைகள் முன்னே பறக்கின்றது. அவைகளுக்கே தெரிகின்றது. இதுதான் ரூட்டு, இப்படித்தான் டிராவல் பண்ண வேண்டும் என்று. சொல்லிக் கொடுக்க யாருமில்லை. அவைகளுக்குப் பின்னால் பெரிய பறவைகள் பறக்கின்றன. அந்த உள்ளுணர்வை சார்ந்த தன்னுணர்வு, பறவைகளுக்கு அதிகமாக இருப்பதினால், தெரிந்த மனிதர்களை, குடும்ப உறுப்பினர்களை அவைகள் தொடர்ந்து நோட்டமிட்டுக் கொண்டே இருப்பதினால், விதவிதமான ஒலிகளை எழுப்பி, சில தகவல்களை தங்களுக்குள்ளும், மனிதர்களுக்குள்ளும் சொல்கின்றன. அது நிறைய நாள் கேட்டுப் பழகும் போது, இவங்களுக்கு ஓரளவுக்கு புரிய ஆரம்பிக்கின்றது. அதை ஒரு பழக்கமா சொல்லி வைக்கிறார்கள்.
எனவே காக்கைகளுக்கு உணவளிப்பதில், இன்னொரு ப்ராக்டிகலான விஷயமும் இருக்கின்றது. எத்தனையோ உணவுகளில் நாம் சேர்க்கக்கூடிய விஷயம், உலகுக்குப் பொருந்தாததாக இருக்கலாம். கூடவே இருந்து எதிரிகளில் ஆட்கள், பிடிக்காதவர்கள் என்று எளிதில் விஷங்களை கலந்து விடலாம். நாம் அறியாமலேயே உணவுப் பாத்திரங்களில் கலந்து விடலாம். அப்போது வந்து ஒரு காக்கா, நம்மை விட இதை சாப்பிடலாம், சாப்பிடக் கூடாதென்று உணர்ந்து விடுகிறது. அதேமாதிரி, அந்த மருந்துகள் பறவைகளுக்கு ஈசியா ரீயாக்ட் பண்ணுது. சின்னப்பறவைகள் தானே. அதனால பறவைகளை ஒரு டெஸ்டிங்கா ப்ராசஸா இவங்க வெச்சிக்கிட்டாங்கன்னு கூட சொல்லலாம்.
சாப்பிட உகந்த உணவா, நல்லா பெர்பெக்டா இருக்கா, அதுவும் முக்கியமான குடும்ப உறுப்பினர்கள் சாப்பிடுவதற்கு முன்னாடி, காக்கா வந்து சாப்பிடட்டும். எனவே காக்காய்களை சாப்பிட வைப்பவையாக இருக்கட்டும். காக்காய்கள் நம்முடைய முன்னோர்கள் என்று நினைப்பவையாக இருக்கட்டும். வட இந்தியாவில் புறாக்களுக்கு வைப்பார்கள். புறாக்கள் காலில் ஒரு நியூசக் கட்டி, அது எவ்வளவு தூரமாக இருந்தாலும், டிராவல் பண்ணி சேர்த்து விடும் என்பதெல்லாம் எவ்வளவு பெரிய விஷயம். அதனை, நாம் அப்போதே புரிந்து வைத்திருக்கிறோம். போஸ்ட்மேன் இல்லாத வேலையில், புறாக்கள் தான், போஸ்ட்மேன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தது.
அதெல்லாம் எல்லாருக்கும் தெரியும். அந்த உயிரினங்கள் எல்லாம் நிலைத்து நிற்க வேண்டும் இந்த உலகத்திலே. அவை மனித வாழ்விலே ஒன்றோடு, ஒன்று ஒட்டி உறவாடக்கூடிய ஒரு அங்கம் என்று சொல்லும் போது, காக்கா வந்து சமையல் பண்ணி சாப்பிட முடியாது. காக்கா வந்து நேரடியா உணவு தானியங்களை தேடிப்போக முடியாது. காக்கா பெரும்பாலும் சமையல் பண்ண சாப்பாட்டை தான் சாப்பிடும். சமையல் பண்ண சாப்பாட்டை நாம ரொம்ப புரொடெக்ட் பண்ணோமென்றால், அதுக்கு திருடுவது கஷ்டம். நாம என்ன பண்றது? காக்காய்க்கு நாம சாப்பாடு வெச்சித்தான் ஆகணும். அந்த ஜீவராசி இருந்து தான் ஆகனும்.
நான் தான் சொன்னேனே, எல்லா ஜீவராசிகளும், மதிப்புடன் வளமுடன், செழிப்புடன் வாழவேண்டுமென்றால், உண்டாக்கப்பட்ட உயரிய மதம் இந்து தர்மமான இந்து நெறி. எனவே, நீங்க காக்காய்க்கு சாப்பாடு வெச்சித்தான் ஆகணும். ஏன்னா, நம்மைப் போலவே, சாப்பிட்டு, நம்மை ப்ரடெக்ட் பண்ணிட்டு, நம்மை கம்யூனிகேஷன் பண்ணிக்கிட்டு இருக்கும் ஒரு ஜீவராசியாக காக்காய் இருக்கிறது. புத்திசாலித்தனமாக இருக்கிறது. மற்ற பறவைகளைப் போல வயல்வெளிகளில் தானியங்களை சாப்பிட அதற்குத் தெரியாது. நேரடியாக பழங்களை எல்லாம் சாப்பிடாது. அதுக்கு நாம சாப்பாடு வெக்காம, யாரு வெப்பாங்க? அதுக்கென்ன சமையல் பாத்திரங்கள் எல்லாம் வாங்கிப் போட்டு, நீயே சாப்பாடு பண்ணிக்கோன்னா சொல்ல முடியும்?
இதை உணர்ந்து நாம் செயல்பட்டிருக்கிறோம். காக்காய்க்கு சாப்பாடு வை. ஏனென்றால், மனிதர்களையும் மற்ற ஜீவராசிகளையும், எல்லாப் பறவையினங்களையும், எல்லா விலங்கினங்களையும், எல்லா தாவர இனங்களையும், புல், பூச்சி, பூடு அத்தனையும் காப்பாற்றி ஈக்காலஜின்னு சொல்லுவாங்க. எல்லா பெரிசா ரிசார்ச் பண்ணி அதுக்கு ஃபண்டு ஒதுக்குறாங்க. கிரின்பீஸ் ஒதுக்குறாங்க. ஒண்ணுமே கிடையாது. இந்து தர்மநெறிகளை நீங்கள் பின்பற்றுங்கள். ஆட்டமேட்டிக்கா எல்லாம் நடக்கும்.
அறிவியலே இந்துமதம்.
Original Audio posted in WhatsApp Group ‘Science is Hinduism’ on 25 June 2018.