ஆஹா… வாழ்கையில் சைக்கிளை நம்புங்கள். உங்கள் பயணத்துக்கு உதவியாக இருக்கும். என்று பொருள் பட்டாலும்…..
வாழ்வின் சுழற்சியை நம்புங்கள். உங்கள் வாழ்க்கைப் பயணத்தில், உங்களுக்கு என்று ஒரு இடம் உருவாகிறது. என்பதே சரி. என்றாலும்….
மகாகவி காளிதாஸ் படத்தில்.. KB சுந்தராம்பாள் அவர்கள் கணீர் குரலில்,
” மேலென்றும் கீழ் என்றும், உயர்வென்றும் தாழ்வென்றும் , சக்கரம் சுழல்கிறது, அதில் சரித்திரம் நிகழ்கின்றது.
உனக்கதில் இடமுண்டு.. அதுவரை பொருப்பாயடா.. மகனே.. என் அருகினில் இருப்பாயடா…
என்ற பாடல் வரிகள் அருமை.
மாபெரும் வெற்றி அடைய துடிப்பவர்கள், சில சமயம் பொறுமையாக, அன்பானவர்கள் சொல்லுக்கு கட்டுப் பட்டு இருக்க வேண்டும்.
இப்போது சொல்லுங்கள்… அந்த ஆங்கில வரிகளா? அல்லது நம் சுந்தராம்பாள் பாடல் வரிகளா?