அறிவியலே இந்துமதம் என்ற தொகுப்பானது, புதிய நவீன இளைய சமுதாயத்தினரையும், மாற்று மதத்தினரையும், அவர்கள் புரிந்து கொள்ளும் வகையிலே இந்துமதம் எப்படி அறிவியல் கருத்துக்களை உள்வாங்கி இருக்கிறது என்பதனைக் காண்பிப்பதற்காக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே இந்து மதத்தில் ஊறிப் போயிருப்பவர்கள், கதைகளை தெரிந்திருப்பவர்கள், அவர்களுக்கான மற்ற பதிவுகளை போடுகிறார்கள். அதைப்பற்றி நமக்கு ஆட்சேபனை இல்லை. தசாவதாரம் என்று எடுத்துக் கொண்டால், விஷ்ணுவுக்கு பத்து அவதாரங்களை எடுத்துக் காண்பித்து, ஒவ்வொரு அவதாரத்துக்கும் ஒவ்வொரு பெரிய கதையை வைத்திருக்கிறார்கள்.

அந்தக் கதையை நவீன சமுதாயத்தில் அப்படியே நாம சொல்ல முடியாது. அதிலிருக்க கூடிய அறிவியல் கருத்துக்களை சொல்லுவது தான், இந்த பதிவினுடைய நோக்கமாக இருக்கிறது. மச்சாவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், கல்கி அவதாரம், இராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், மோகினி அவதாரம் என நிறைய அவதாரங்களை விஷ்ணு எடுத்ததாக வைணவத்திலே சொல்லியிருக்கிறார்கள்.

ஒவ்வொரு தடவையும் தீமை ரொம்ப அதிகமாகும் போது, நான் தோன்றி, சத்தியத்தையும் தர்மத்தையும் நிலைநாட்டுவேன் என்று அவர் சொன்னதா சொல்றாங்க.

‘புல்லாகி பூடாய், புழுவாய் மரமாய், பன்மிருகமாய், பறவையாய் பாம்பாகி’ என்று சைவ இலக்கியத்திலே டார்வினுடைய பரிணாம கருத்துக்களை எழுதியிருக்கிறோம். தாவரங்களுக்கு உயிருள்ளது என்பதனை சமீப காலத்தில் நிரூபித்து நோபல் பரிசை வாங்கிக் கொண்டார்கள். அதை நாம் சாதரண ஒரு பாடலியே வைத்து விட்டுப் போய்விட்டோம்.

இந்த உலகம் முதலில் கடலால் சூழப்பட்டு மீன்களின் ராஜ்யத்தில் இருந்தது. அதுக்கப்புறம் டைனாசர்ஸ் வேல்டு இருந்துச்சு. அந்த டைனாசர்ஸ் எவால்யுவேட் ஆகிக்கிட்டு இருந்தது வேறமாதிரி. அதுக்கப்புறம் குட்டையான மனிதர்கள் இருந்தார்கள். கரடிகளைப் போல, குரங்குகளைப் போல உருவ அமைப்புகளைக் கொண்ட காட்டு மனிதர்கள் இருந்தார்கள். ஒரு கால கட்டத்தில் பெண்கள் அதிகார மையத்தின் உச்சத்தில் இருந்தார்கள். ஆண்கள் அடிமைப்படுத்தப்பட்டிருந்தார்கள். இப்படியெல்லாம் அறிவியல் சொல்லுது.

இதைத்தான் என்னுடைய கருத்துப்படி தசாவதாரம் சொல்லுது. அதில் தான் முதன் முதலில் மீனாக அவதாரம் எடுத்தது போல் காண்பித்தார்கள். அந்த காலகட்டத்தில் கடல் வாழ் உயிரினங்கள் தான் அதிகமாக இருந்துச்சு.. பிறகு கூர்ம அவதாரம் என்று சொல்லக்கூடிய பன்றியை டைனாசரஸோடு ஒப்பிட்டு பார்க்கிறோம். அதனால் கூர்ம அவதாரம் என்பது அந்த டைனாசர்ஸைக் குறிப்பதாக தான் எனக்குத் தெரிகிறது. அதே போல காட்டு மிருகங்களின் முகஜாடை உள்ளவர்கள், குரங்குகளின் முகஜாடை உள்ளவர்கள் கலந்த ஒரு கலவையாக இராம அவதாரம் இருக்கின்றது.

போர், ராஜ்ஜியங்கள் எல்லாம் கிருஷ்ண அவதாரம் ஆக இருக்கின்றது. மனிதர்கள் கொஞ்ச காலகட்டத்தில் குட்டையாக இருந்தார்கள். அந்த காலகட்டத்தில் தான் வாமன அவதாரம் இருந்துள்ளது. எனவே தசாவதாரம் என்பது இந்துக்களுக்கு பத்து அவதாரங்களாக இருந்தாலும், உண்மையில் அறிவியல் பூர்வமாக சாதாரணமான மக்கள், மிக எளிதாக தெரிந்துக் கொள்ள கூடிய வகையிலே உலகத்தில் எந்த ஜீவராசிகள் எந்தெந்த காலகட்டத்தில் கோலுன்றி இருந்தன என்பதை மிகப்பெரிய அறிவியல் தத்துவத்தை உள்ளடக்கித் தான், தசாவதாரம் கதைகள் உருவாக்கப்பட்டன என்பது என்னுடைய கருத்தாக உள்ளது.

இந்தக் கருத்து, அறிவியல் பூர்வமாக நான் இந்து மதத்தைப் பற்றி பேசும் போது, இந்து மதத்தின் அனைத்து கருத்துக்களும் அறிவியலை அடிப்படையாக கொண்டது. இந்து மதத்தின் உள்ளே அறிவியல் இருக்கின்றது என்பதனைத் தாண்டி, அறிவியல் தான் இந்து மதமாக இருக்கிறது.

அதை எளிமையாக சொல்வதற்காக சின்னச்சின்ன கதைகள், புராணங்கள், இதிகாசங்கள் என்று எல்லாத்தையும் உருவாக்கி வைத்திருக்கிறோம். அதையும் காலங்காலமாக ரொம்ப பெரியதாக, ரொம்ப விரிவாக உருவாக்கி வைத்திருக்கிறோம். முழு இராமயணத்தையும், முழு மகாபாரதத்தையும் சொல்லி முடிக்க இயலாது. அதுவே பல வருடங்களாகி விடும்.

கதைகள், கிளைக் கதைகள், உரையாடல்கள், உரையாடல்களுக்கு உள்ளே இருக்கக்கூடிய தத்துவங்கள், தத்துவங்களுக்கு உள்ளே இருக்கக்கூடிய உண்மைகள் என்று வாழ்கிற வாழ்க்கைக்கு தேவையான அத்தனை அம்சங்களும் அதிலுள்ளே அடங்கிப் போய்விடும். அதனால் எப்போது எதுவேண்டுமோ, அதை மட்டும் தான் நாம் சொல்கிறோம். மீதி கருத்துக்கள் இருக்கு. உள்ளே வந்தபிறகு, நீங்களே உள்ளே புகுந்து பார்த்துக் கொள்ளலாம். அதிலே தசாவதாரம் என்பது அறிவியலின் உச்சாணிக் கொம்பு.

இப்ப இவங்க கண்டுபிடிச்சி சொல்லிக்கிட்டு இருக்காங்க. டைனாசரஸ் வேல்டப் பத்தி. ஒரு ஐம்பது வருஷத்துக்கு முன்னாடி தெரியாது. ஆனால் நாங்க சொல்லி வைத்து விட்டோம் காலங்காலமா கூர்ம அவதாரத்தைப் பற்றி. அறிவியலே இந்து மதம்.

Original Audio posted in Whatsapp Group ‘Science is Hinduism’ on 23 June 2018. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>