இந்த ஒழுக்கத்தைப் பற்றி, எல்லா மதங்கலும் நிறைய விதிமுறைகள், வழிகாட்டுதல்கள் வைத்துள்ளன. இந்த ஒழுக்கம் என்பது ஒரு மதத்தின் கோட்பாடுகளை, பிறழாமல் அப்படியே பின்பற்றுவது என்று பல மதங்கள் சொல்லுகின்றன. அதனால், அன்றாட வாழ்வில் நாம் செய்யும் அனைத்திலும், எதை எதை முன்னாடி செய்ய வேண்டும், எதை பின்னாடி செய்ய வேண்டும் என்பதையெல்லாம் ஒழுக்கம்னு வெச்சிட்டு, அதை மீறுபவர்கள் எல்லாம் ஒழுக்கம் இல்லாதவங்கன்னு வெச்சியிருக்காங்க.
இந்த ஒழுக்கத்தப் பத்தி வரும்போது, பாத்தீங்கன்னா, பெரும்பாலும் பெண்களுக்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இப்படி இருக்கணும், அப்படி இருக்கணும், இப்படி டிரஸ் பண்ணணும், அப்படி டிரஸ் பண்ணணும். இப்படி ஸ்மைல் பண்ணணும், அப்படி ஸ்மைல் பண்ணணும். இதை பண்ணக்கூடாது, அதை பண்ணக்கூடாதுன்னு. உயரிய தத்துவங்களை உள்ளடக்கிய இந்து தர்மம், ஒழுக்கத்தைப் பற்றி பாடி வைத்திருக்கிறது.
ரொம்ப ஆச்சர்யப்படுவீங்க, ஒழுக்கம்னா என்னான்னு கேட்டா? நான் ரொம்ப, சிம்பளா சொல்லுவேன். ஒழுகறதுன்னு. சிரிப்பு வந்துவிடும். புதியதாக வேலைக்கு சேர்ந்தவர்களுக்கு நான் சொல்வது. ஆமாம்மா, ஒழுக்கம்னா, ஒழுகறது தான். ஒரு பால் பாக்கெட் இருக்கு. பாக்கெட் நிறைய பால் இருக்கு. பாக்கெட்டுக்குள்ள அது பத்திரமா இருக்கு. ஆனால், எந்தப் பிரயோஜனமும் இல்லை. அதுல ஒரு ஓரத்துல சின்னதா கட்பண்ணினா, அதுல டீ போட்லாம், காபி போட்லாம், காய்ச்சி குடிக்கலாம், தயிரா மாத்தலாம், மோரா மாத்தலாம். ஆனால், அதை பெரியதாக கட் பண்ணினால், கொட்டி, கெட்டு விடும். அதனால, ஒழுக்கம் என்பது ஒழுகறது, அளவாக அதை வைத்து அளவாக யூஸ் பண்ண வேண்டும்.
அதனால் ஒழுக்கம் என்பதை அடச்சி வெச்ச பால் பாக்கெட் மாதிரி இருந்தா, யாருக்குமே பிரயோஜனம் இல்லாமல் போய்விடும். அதுக்காக, டப்புன்னு பாலை கட் பண்ணி தரையில கொட்டி விட்டாலோ, தவறான இடத்தில் விழுந்து விட்டாலோ, அது எந்த பிரயோஜனமும் இல்லாமல் போய்விடும். எனவே, நியதிகளின்படி, கொஞ்சம் கொஞ்சமாக, வேணும் என்ற அளவுக்கு, தன்னுடைய உணர்ச்சிகளை அடைத்து வைக்காமல், ஒழுங்கு முறைப்படுத்தி வெளிப்படுத்துவது ஒழுக்கம். எந்த விதமான உடலுறவும் இல்லாமல் பிள்ளைகளை பெற்றுக் கொள்ள முடியாது. பாக்கறதுக்கு கையெடுத்து கும்பிடும் அளவுக்கு ரொம்ப அழகா பொத்தி மூடிக் கொண்டிருக்கும் பெண்கள் கூட, ஒழுக்கம் என்று வரும்போது, கணவனோடு இணைந்து தான் பிள்ளைகளை பெற்றுக் கொள்ள முடியும். அதனால் ஒழுக்கம் என்பது சராசரி மக்களால், பெரும்பாலும் தவறுதலாக புரிந்து கொள்ளப் பட்டிருக்கிறது.
இந்து மதத்தில் இதுப்பற்றி விரிவான குறிப்புகள் இருக்கின்றன. காதலைப் பற்றிய அதிகமான குறிப்புகள் இருக்கக்கூடிய, கடவுளே காதல் செய்யக்கூடிய அளவுக்கு இருக்கும் ஒரே மதம் இந்து மதம் தான். அந்த காதல் மனைவிக்கு முழு அந்தஸ்து கொடுத்து, எல்லா உரிமைகளையும் வகுப்பது இந்து மதம் தான். என்னமோ சொல்லிக்கிட்டு இருக்காங்க. ஒழுக்கம்னா காதல் கிடையாது. கிடையவே கிடையாது என்று. சீர்தூக்கி, ஆராய்ந்து அந்த காதல் இருக்கும். அந்தக் காதல், மொழி மாறி, மதம் மாறி, ஜாதி என்று ஒன்று இருந்தால், அதுமாறி, வாழும், வாழவைக்கும்.
தொழிலை அடிப்படையாகக் கொண்டது தான் ஜாதி. இங்கே உயர்வு தாழ்வுகள் கிடையாது. அது மாறிமாறி எப்படி வேண்டுமானலும் வரலாம். அதனால், காதல் என்பது ஒழுக்கமின்மைக்கு அறிகுறியாகாது. பெண் என்பது உடையை ரொம்ப அடக்கஒடுக்கமா அணிவாங்க. கொஞ்சம் தாரளமா, அணிவாங்க. சில காலக்கட்டங்களில் மாடர்னா ஜீன்ஸ் போட்டுட்டு, ஒரு சின்ன டிரஸ் எல்லாம் போட்டுட்டு, இடைப் பகுதிகளையும், தொடைப் பகுதிகளையும், தோல் பகுதிகளையும், காண்பித்துக் கொண்டு கூட அணிவார்கள். அதனால், அவர்கள் ஒழுக்கமற்றவர்களாக ஆவார்களா? கிடையாது. ஏன், அவர்கள் அப்படி உடையணிகிறார்கள். அது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரம்.
முன்னேறிய சமூகத்திலே, பெற்றோர்களினாலே, வீட்டுக் காரர்களினாலே, உறவினர்களாலே, நண்பர்களாலே மத்தவங்களினாலே, பெற்ற தன்னுடைய சுதந்திரத்தை அங்கே, அவர்கள் நிலைநாட்டுகிறார்கள். அவங்களுக்கு அந்த இடம் இருப்பதினால், என்ன இடம்? சமுதாயத்திலே ஒரு உயரிய இடம். இப்ப ரோட்டுல பொண்ணுங்க எல்லாம் ஒரு குட்டி டவுசரப் போட்டுக்கிட்டு, ஒரு சின்ன பிரா மாதிரியான டிரஸ்ஸை போட்டுக்கிட்டு, நடமாடுவதை, நடனமாடுவதை, முன்னேறிய நகரங்கள் எல்லா இடத்திலேயும் பார்க்க முடிகிறது. சாதாரண இடத்திலே பார்க்க முடியாது.
ஏனென்றால், முன்னேற்றம் பாதுகாப்பை குறிக்கிறது. பாதுகாப்பு சுதந்திர உணர்வைக் கொடுக்கிறது. சுதந்திர உணர்வு, தன்னுடைய அங்கங்களை, அழகுகளை அடுத்தவர்கள் பார்க்கலாம். ஒன்றும் தவறில்லை என்ற எண்ணத்தை அந்தப் பெண்ணுக்கு மட்டுமில்லாமல், அந்தப் பெண்ணை சார்ந்தவர்களுக்கும் கொடுக்கிறது. அதை ஒழுங்கீனம் என்று சொல்லக்கூடாது. கோவில், கோபுரங்கள், சிற்பங்கள். பழைய கால கோயில் கோபுரங்கள், சிற்பங்களை போய் பார்த்தால், அனைத்து சிற்பங்களும் இருக்கும், ஒரு மூலையில் காமத்தை வெளிப்படுத்தக்கூடிய சிற்பங்களும் இருக்கும். அதைப் பார்க்கும் போதே உங்களுக்கு தெரியும். சின்னப் பசங்க பார்க்கக் கூடாதுன்னு வேறு பக்கமாக அழைத்து சென்று விடுவார்கள்.
அன்றாட வாழ்விலே, காதல், அன்பு, பாசம், காமம் முதலிய உணர்வுகள் ஒரு அங்கமென்பதினால், அதை வைத்திருக்கிறோம். எனவே, ஒழுக்க நெறிகளைப் பற்றி பேசும்போது, குறிப்பாக, சும்மா ஜாடையா பேசறது கிடையாது. ஒழுக்கம் என்பது ஒழுகுவது. ஒழுகி நடப்பது. ஓட்டைப் போட்ட பால் பாக்கெட் போல் டபக்குன்னு உடையவும் கூடாது. அடைத்து வைத்த பால் பாக்கெட் போல பயனற்று இருக்கக் கூடாது. சீராக தன்னுடைய எண்ணங்களை, சிந்தனைகளை, சந்தோஷங்களை, செயல்பாடுகளை, உணவுமுறைகளை, உடைமுறைகளை, பேசக்கூடிய விஷயங்களை, வெளிப்படுத்துவது ஒழுக்கமாக அமைகிறது. அந்த ஒழுக்கத்தின் வெளிப்பாட்டிலே, சில சமயம் லேசாக எல்லை மீறுவார்கள்.
எப்பவாவது ஒருமுறை சின்னப்பொண்ணுங்க எல்லாம் சேர்ந்து டான்ஸ் ஆடுவாங்கன்னு எனக்கு ஒருத்தர் வீடியோ அனுப்புனாரு. அப்படியெல்லாம் பண்ணத்தான் செய்வாங்க. இதையெல்லாம், நாம் ஒழுக்கக்கேடு என்று சொல்ல முடியாது. சன்னியாசிகள், ரிஷிகள், முனிவர்கள், பேராசிரியர்கள், தவயோகிகள், மிகமிக நல்லவர்கள், உன்னதமானவர்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பவர்களும், அவர்களுக்கும் உணர்வுகள் இருக்கும். தவறுகள் என்று சாதாரணமாக புரிந்துக் கொள்ளத்தக்க, சில செயல்களை அவர்கள் செய்யலாம்.
அதைக் கண்டும் காணாமல் இருக்க வேண்டும். இந்த நித்யானந்தா மேட்டர்ல, வீடியோ எடுத்துப் போட்டா, அசிங்கம் யாருக்குன்னா, நித்யானந்தாவுக்கு இல்லை, கூட இருந்த பெண்ணுக்கு இல்லை. அதை எடுத்துப் போட்டவங்களுக்கும், அதைப் பார்த்து கமெண்ட் அடிப்பவர்களுக்கும் தான். ஏன்னா, அவங்களும், பாத்ரூம் போனா,,டாய்லெட் போகத்தான் செய்வாங்க. அவங்களும் பாத்ரூம் போனா யூரின் போகத்தான் செய்வாங்க. அதனால், ஒழுக்கநெறிகள் எங்கே மீறப்படுகிறது என்றால், அந்த ஒழுக்கம் என்பது ஒரு சீராக இல்லாமல், படபடவென்று நான் சொன்னது போல் கட்டி வைத்த பால்பாக்கெட்டை கொட்டி விடுவது போல் இருக்கும்.
எனவே, ஒழுக்கம் என்பது, மிகவும் சரியாக, மானுட தர்மத்திற்கு எடுத்து இயம்புவது இந்து தர்மம். எனவே அகலிகையை படைத்தார்கள், சகுந்தலையை படைத்தார்கள். கடவுளுக்கு மனைவிமார்களைப் படைத்தார்கள். கடவுள்களுக்கும் ஒரு நட்புமுறை இருப்பது போல் அந்த காலத்தில் எல்லாம் வைத்திருப்பார்கள். இந்த கதைகள் எல்லாம் சுவைப்பட, பெரியவர்களாக இருக்கும் போது, ரொம்ப வியப்பாகவும், சிறுவர்களாக இருக்கும் போது கொஞ்சம் சொற்களை அட்ஜஸ்ட் பண்ணி தயங்குவது போல் இருக்கும்.
பிரியாவிடை நாச்சியார், மதுரை மீனாட்சியம்மாள், திருமணக் கோலத்திலே நகர்வலம் வரும்போது, சிவபெருமான் கூட வெச்சிக்குவாராம். மீனாட்சியம்மாள் கோபித்துக் கொண்டு அப்புடி திரும்பிக்குவாங்களாம். ஏன்னா? மீனாட்சியம்மாவ, நேரப் பாக்காமா, முகத்தை திருப்பிக் கொண்டு நக்கலா, பாக்கறதுக்கு இதுதான் காரணம். இந்த மனுஷன் கல்யாணத்து அன்னிக்கு கூட, அந்தப் பெண்ணை கூட்டிக் கொண்டு வந்து விட்டார். அதனால, அம்மாவுக்கு கோபம். கடைசியில் என்ன ஆச்சு. யோவ், கம்முனுக் கிடய்யா. உனக்கு அரசப்பதவி கிடையாது. நானே ஆண்டுக் கொள்கிறேன் என்று, ‘மதுரை அரசாளும் மீனாட்சி’, அவங்களே ஆட்சி ஏறிட்றாங்க.
இது என்னது கடவுளே தவறு செய்வது போல் கதை இருக்குமா? மனிதர்கள் தவறு செய்வார்கள். அந்த மனிதர்கள் தவறு செய்யும் போது, தவறுக்கு தண்டனைகளை அவர்கள் அனுபவிப்பார்கள். அந்த தண்டனைகளை அனுபவிக்கும் போது, அவர்களுடைய பதவிகள் பறிக்கப்படும் என்பதை ஒரு புராணக் கதையாக சொல்கிறோம். கடவுளே தவறு செய்கிறார். அதனால் நானும் தவறு செய்கிறேன் என்பது கிடையாது. கடவுள் தவறு செய்கிறார். அதனால், தண்டனை கிடைக்கப்பட்டது. அதனால், நீ தப்பு செய்தால் உனக்கும் தண்டனை கிடைக்கும். உரிய தண்டனை, எடுத்ததுக்கெல்லாம் கைய வெட்டு, காலை வெட்டு, கண்ணைக்குத்து என்பது போன்ற தண்டனைகள் கிடையாது. எதுக்கு எந்த தண்டனையோ, அதுக்கு அந்தத் தண்டனை கிடைக்கும் என்பதனை அடிப்படையாக வைத்து, ஒழுக்கமென்பது உயர்வானது. “ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்” என்பது இந்து தர்மம்.
ஒழுக்கம் என்பது உயிரை விட மிகவும் முக்கியமானது. ஒழுக்கம் என்பது நோயற்ற வாழ்வைக் கொடுக்கிறது. ஓழுக்கம் என்பது நோயற்ற மனதைக் கொடுக்கிறது. ஒழுக்கம் என்பது விழுப்பம், உயர்வு, பண்பாடு, மற்றவர்கள் நம்மை மதிக்கக் கூடிய அந்த உன்னத நிலையைக் கொடுக்கிறது. ஆனால், சிலசமயம் தவறுவது மானிடம் என்ற பெயரிலே, சில ஒழுக்கத்துக்குப் புறம்பான செயல்களை, செய்யக்கூடியவர்கள் தான் மனிதர்கள். அப்படி செய்யும் போது, அதையும் நயம்பட, சுவைப்பட, அதற்கு என்னத் தண்டனையோ, அந்த அளவுக்குத் தான் தண்டனை. அதற்காக ஒரே அடியாக கையை வெட்டு, காலை வெட்டு என்பதெல்லாம் கிடையாது.
ஒழுக்கம் என்பது சமுதாயத்தை கட்டுக்கோப்பாக வைத்து அனைவரையும் அமைதியாகவும், சந்தோஷமாகவும் வைக்க வேண்டியது. சந்தேகமாகக் கிடையாது. ஏன்னா, சந்தேகம் வந்துட்டா, சந்தோஷம் போயிடுது. ஆர்ப்பார்ட்டமாக கிடையாது. ஆர்ப்பாட்டம் வரும் போது அமைதி போகிறது. ஒவ்வொன்றுக்கும் வழிவகை செய்து வைத்திருக்கிறார்கள். எனவே தான் நான் கூறுகிறேன். இந்து தர்மம், உயர்ந்தது. அதிலே எந்த சந்தேகமும் இல்லை.
மற்ற எல்லா தர்மங்களிலும் இந்த ஒழுக்க நெறியைப் பற்றி பேசும்போது, போட்டு இருப்பாங்க. சொன்ன கருத்து மாறுபாடுன்னு சொல்லுவாங்க. காம இச்சை இருக்கின்றதா, நாலு பொண்டாட்டி வெச்சிக்குவாங்க, ஒரே நேரத்துல. அங்கே எப்படி ஒழுக்கம் இருக்கும்? அந்த மனைவியை பிடிக்கவில்லையா? மூன்று தடவை அந்த வார்த்தையை சொல்லிவிட்டு நீ விவாகரத்து செய்துவிடலாம். இன்னொரு திருமணம் செய்து கொள்ளலாம்.
அப்படி ப்ராக்டிக்கலா, ஒருத்தர் ஒரு வாழ்வில் பல பல மனைவியைக் கூட வைத்துக் கொள்ளலாம். அங்கே எப்படி ஒழுக்கம் இருக்கும்? ஆனா ஒரு கன்டிஷன். எல்லா மனைவிமாரையும், அவரிடம் பெற்ற பிள்ளைகளையும் சரிசமமாக நடத்த வேண்டும். அந்த கண்டிஷன் கரெக்டு தான். ஆனா, ப்ராக்டிக்கலா முடியுமா? பத்து பிள்ளைகளை, இவர்கள் சரியான பள்ளியில் சேர்த்து, அட்மிஷன் வாங்கிக் கொடுத்து கூடப் படுத்து, உறங்கும் நேரம் சற்று முன் அறிவுரை, அனுபவ உரை, நல்ல கதைகள் சொல்லி, பிள்ளைகளை வளர்க்க வேண்டும்.
அப்பாவின் அறிவுரைகள் தான் ஒரு நல்ல மகனின், மகளின் எதிர்காலத்தை உருவாக்கும். அம்மா எப்போதும், அன்பைக் கொடுத்து விட்டு போய்விடுவார்கள். அன்பைக் கொடுக்கலாம். எப்போதும் கொடுக்கக் கொடுக்க வளர்ந்து கொண்டே இருக்கும். அறிவு கொடுக்கும் போது கொடுக்க கொடுக்க அதுவும் வளரும். யாருக்கு? கொடுப்பவர்களுக்கு வளரும். வாங்கறவங்களுக்கும் வளரும். ஆனால், அதுப் பத்தாது. ஒரு ரெண்டு பசங்களை வைத்துக் கொண்டு, வளர்த்து அன்பா, அழகா, அன்றாடம் நிகழக்கூடிய அறிவுரைகளை கொடுக்கும் போது, நாம பத்துப் பேரை, பதினைந்து பேரை வைத்துக் கொண்டு கொடுக்க முடியாது. கேட்பாரற்ற குழந்தைகள் ஆகி விடுவார்கள். தான்தோன்றித் தனமாகத் திரிவார்கள். எனவே குற்றவாளிகளாவார்கள்.
எனவே, ஒழுக்கம் என்றால், என்ன என்பதனை மிகவும் சரியாக சித்தரித்து, தனிமனித ஒழுக்கம், குடும்ப ஒழுக்கம், சமுதாய ஒழுக்கம், பண்பாட்டிலே ஒழுக்கம், உடை அணிவதிலே ஒழுக்கம், உணவு உண்பதிலே ஒழுக்கம், உணர்வுகளிலே ஒழுக்கம், உணர்வுளைக் கட்டுப்படுத்துவதிலே ஒழுக்கம், செயல்களிலே ஒழுக்கம், சொற்களிலே ஒழுக்கம் என்றும், அந்த ஒழுக்கம் சில சமயம் வரையறையை மீறும்போது, அதற்கு என்ன செய்வது என்பதனை, சுவையான கதைகள் மூலமாகவும், வழிவகை வைத்து, எல்லாவற்றிற்கும் விடை வைத்திருக்கிறோம் நாங்கள்.
அறிவியலே இந்து மதம். நன்றி, வணக்கம்.
Original Audio posted in Whatsapp Group ‘Science is Hinduism’ on 15 June 2018.