எல்லா மதத்திலேயும் சாப்பிடாமல் இருப்பது, உபவாசம் இருப்பது, முழு இரவு ஜெபம், முழு இரவு முழுவதும் சாமியக் கும்பிட்டுக் கொண்டே இருப்பது என்ற நெறிகள் உண்டு. இந்துமதம் பன்முகத் தன்மையுடையது. இந்தியா முழுவதும் உள்ளது. பலவிதமான மக்கள் இருக்கிறார்கள். வட இந்தியாவில் பனிப்பிரதேசத்தில் மக்கள் எல்லோரும் எப்படி இருப்பார்களோ, அப்படி இருப்பார்கள். அவங்களால தினமும் குளிக்க முடியாது.
தென்னிந்தியாவில், எப்போதும் சூடாக இருக்கும். குளிரென்றால் என்னவென்று அறியாதவர்கள். டிசம்பர் மாதக் குளிரை குளிரென்று சொல்லுவார்கள். குளிர்ப் பிரதேசத்துல பனிகொட்டும் பிரதேசத்துல இருப்பவர்கள் சிரிப்பாங்க. இதையெல்லாம் குளிரென்று சொல்கிறார்களே என்று. அதனால், உபவாச முறைகள் என்று சொல்லும் போது, எல்லா மதங்களிலேயும் ஒரு மாதிரி இருக்கும். கிறிஸ்துவ மதத்தில் முழுஇரவு ஜெபம் என்று சொல்லி அனைவரும் ஜெபித்துக் கொண்டே இருப்பார்கள்.
இஸ்லாமியத்தில் ரமலான் நோன்பு இருக்கும் போது, ஏறத்தாழ ஒரு முப்பது நாட்கள் பகலெல்லாம் சாப்பிடாமல், எச்சில் கூட முழுங்காமல் இருப்பாங்க. அவர்களை கவனித்தோமேயானால், அவர்களை குறை சொல்வது நம்முடைய நோக்கமல்ல. காலையில் சாப்பிடுவதற்கு பதில் இரவில் சாப்பிடுவார்கள். காலை பிரேக் ஃபாஸ்டுக்கு பதில் விடியற்காலையில் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு சாப்பிடுவார்கள். அதேபோல் மாலை சூரிய மறைவிற்குப் பின் நோன்புக் கஞ்சியில் தொடங்குவார்கள். பிறகு இரவு 9.30, 10.30 மணிக்கு மதிய சாப்பாட்டை கணக்கு வைத்து சாப்பிடுவார்கள். திரும்பவும் காலையில், 3.00, 4.00 மணிக்கு ஒரு நல்ல சாப்பாட்டை சாப்பிட்டு விடுவார்கள். இவர்கள் உணவை எந்த விதத்திலும் குறைப்பதில்லை.
இதுல கொஞ்சம் பணக்காரங்க அதிகமா சாப்பிட்டு ஒருசுத்து பெருக்கறதும் உண்டு. ஒரு தடவை 12 மணிக்கு நான் கோர்ட்ல போய் நிக்கறேன். ஜட்ஜ் சொல்றாரு அவரு பாவம் பாஸ்டிங்ல இருக்காரு சீக்கிரம் முடித்து விடலாம் என்று. தற்செயலா, முதல் நாள் இரவு நான் சாப்பிடவில்லை. அப்போது தான் நினைத்துப் பார்த்தேன். நான் சாப்பிட்டது. முதல் நாள் மதிய நேரம். எனக்கு மறுநாள் மதியமே வந்து விட்டது. அவரு சாப்பிட்டது காலையில் 5.00 மணிக்கு, ஆனாலும் அவரு உபவாசம் இருக்காரு. அவருக்கு சாதகமாக தீர்ப்பையே தள்ளிப்போட்றாங்க. அவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதை சொன்னால், நான் மதவாதம் பேசுகிறேன் என்று சொல்வார்கள்.
விரதம் என்று வரும் போது, நிறைய நன்மைகள் உள்ளது. சிலர் வார நாட்களில் இருக்கிறார்கள். சிலபேர் மாதங்களில் இருக்கிறார்கள். முழு இரவு சிவராத்திரி, முழு இரவு ஏகாதசி என முழித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதன் மூலமாக என்ன கிடைக்கிறது. எல்லா மதத்திலேயும் இது போன்ற பயிற்சி வைத்திருக்கிறார்கள். சில சமயங்களில் நாம் முழிக்க நேரிடுகிறது. நம்முடைய உறவினருக்கு யாருக்காவது ஹார்ட் அட்டாக் வந்துடுது அந்த சமயங்களில் முழுக்க முழிக்க முடியவில்லை என்றால் எமர்ஜென்சியை சமாளிப்பதற்கு மிகவும் சிரமமாக இருக்கும். அதற்குத் தான், ஒரு ஆறுமாதத்திற்கு ஒருமுறை நாம் இரவு முழுவதும் முழித்து பழக்கப்படுத்தினால், இதுபோன்ற எமர்ஜென்சியை சமாளிப்பதற்கு ஏதுவாக இருக்கும். உணவு உண்பது என்பது நம் உடம்பு நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
மூன்று நேரமும் சாப்பிட்டே தீர வேண்டும். ஒரு நேரமாவது சாப்பிட முடியாமல் போனால் சோர்வாகி விடுவோமென்ற எண்ணம் வந்துவிடக் கூடாது. அதனால், பட்டினி என்ற ஒன்றுக்கு பழக்கப்பட்டுக் கொள்ள வேண்டும். அதனால் பகல் நேரங்களில் உணவருந்தாமல் இருப்பது. குறிப்பிட்ட உணவுமுறைகள் விரதங்களில் உள்ளது. ஆந்திராவில் விரதமென்றால், பகல் முழுவதும் ஒண்ணுமே சாப்பிடாமல் இருந்து, இரவு இயற்கையாகக் கிடைக்கக் கூடிய வேர்க்கடலை, வாழைப்பழமெல்லாம் சாப்பிடுவாங்க. தென் இந்தியாவில் அரிசி உணவை ஒரு நேரம் மட்டும் சாப்பிட்டால் போதும். மீதமிருக்கும் இரண்டு நேரங்களில் இட்லியோ, டிபனோ சாப்பிடலாம் என்று கடைபிடிப்பார்கள்.
விரத நெறிகள் பலதரப்பட்டது. பெரும்பாலும் உடலையும் உள்ளத்தையும் நெறிப்படுத்துவதற்காக அது உருவாக்கப்பட்டது. பன்முகத்தன்மை கொண்ட இந்துமதம் பன்முகத்தன்மை கொண்ட விரத நெறிகளை வைத்திருக்கிறது. எனவே விரதநெறிகள்னு வரும்போது கூட, மற்ற மதங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, நம்முடைய இந்து மதமாம் இந்திய மதத்திலே உயரிய சுதந்திரமான பழக்கவழக்கங்கள் தான் இருக்கின்றன என்பதனைக் கூறி இந்த சிற்றுரையை நிறைவு செய்கிறேன்.
நன்றி, வணக்கம்.
Original Audio posted in WhatsApp Group ‘Science is Hinduism’ on 17 May 2018.