இந்து மதமும், சுதந்திரமும்
நான் சின்ன வயதிலிருந்து 36 வயது வரைக்கும் கடவுள் நம்பிக்கையில்லாம நாத்திகனா இருந்தப்ப திராவிடக் கட்சிக் கழகத்துல இணைய மாட்டேன்னு சொல்லிட்டேன். பெரியார் நூலக வாசகர் வட்டத்துல போய் புத்தகங்களை மட்டும் படிப்பேன். ஏன் நீங்க எங்க கட்சியிலே இணையல? நீங்க நாத்திகன் தானே?ன்னு கேப்பாங்க. இல்லப்பா, நான் இந்துன்னுதான் அப்பவும் பெருமையா சொல்லிக்குவேன்.
ஏன்னா, மதங்கள், மார்க்கங்கள்ள, ரொம்ப ரொம்ப சுதந்திரமா இருக்கக் கூடியது இந்து மதந்தான். நான் வந்து தாராளமா இந்துன்னு சொல்லிட்டு கிருஷ்ணனைத் திட்டுவேன். இராமனைத் திட்டுவேன். ஈஸ்வரனைத் திட்டுவேன். கடவுள் இல்லன்னு சொல்லுவேன்.
கடவுள் இல்லன்னு சொன்னவங்கள, ரிஷிகளா, முனிவர்களா ஏத்தி வெச்சிருக்கற ஒரே மதம் இந்து மதம் தான். 4500 வருஷங்களுக்கு முன்னாடி நசிகர, ரிஷியா தான் வெச்சிக்கிட்டாங்க. அவரு கடவுள் இல்லன்னு தான் சொன்னாரு.
தவிர தலைவர்கள் இல்லாத மதம் இந்து மதந்தான். ‘ஒரு குறிப்பிட்ட தலைவர் வந்து வாழ்ந்து காட்டி இதே மாதிரி நீங்களும் இருங்கன்னு சொன்னாங்க’ இல்லாத மதம் இந்து மதம். இதுல என்னான்னு அந்த தலைவருங்க எல்லா அநியாயமும் பண்ணியிருப்பாங்க. 24 வயசுல 55 வயசு பொண்ணக் கல்யாணம் பண்ணியிருப்பாங்க. 70 வயசுல 12 வயசு பொண்ணக் கல்யாணம் பண்ணிப்பாங்க.
அவங்க என்ன பண்ணுவாங்க? நான் வாழ்ந்த மாதிரி வாழ்ந்துக் காட்டுங்க, அப்புடின்னு சொன்னாங்க. நடுவுல ஒரு பத்து மனைவி வெச்சிருப்பாங்க. சண்டப் போட்டு இருப்பாங்க. அநியாயமா நிறைய தவறுகள் செய்திருப்பாங்க. அதுபோல, தலைவர்கள் யாருமே இந்து மதத்துல இல்ல.
ஒவ்வொருத்தரும், அவர்களுடைய கருத்தை சொல்லி வலுப்படுத்திட்டு போவாங்க. சைவ சித்தாந்தம் இருக்கும். வைணவ சித்தாந்தம் இருக்கும். அதுக்குள்ள வேறுபாடுகள் வேற இருக்கும்.
உருவ வழிபாடு பண்ணாம நாங்க இருக்கோம்னு சொல்லுவாங்க. ஜோதி வழிபாடு பண்றோம்னு சொல்லுவாங்க. கடவுள் நம்பிக்கை, பூஜை, புணஸ்காரம்னு எதுவுமே பண்ண மாட்டோம்னு சொல்லுவாங்க. இல்ல, இல்ல இந்த முறை வழிபாடு இப்படித்தான் செய்யணும்னு சொல்லுவாங்க.
வெறும் துளசிச்செடிய மட்டும் வணங்கிட்டு இருந்தா போதும்னு சிலபேர் சொல்லுவாங்க. வெறும் பசுமாட்ட, கோமாதாவா வணங்குனா போதும்னு சிலர் சொல்வாங்க.
ஒரு கற்றறிந்த இந்துக்கிட்ட போய், ‘எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லன்னு’ சொன்னா, கையெடுத்து கும்பிடுவாங்க. ஏன்னா, கடவுள் நம்பிக்கை இல்லாதவங்க, கடவுள ஏற்கனவே உணர்ந்துட்டாங்கன்னு சொன்னாங்க. இதையே தான் நான் நாத்திகனா இருந்தபோது என்னைப் பார்த்து சொன்னாங்க. எனக்கே ஆச்சர்யமா இருந்துச்சு. ஒரு நாத்திகத்திற்கு இந்து மதத்துல இவ்வளளோ மரியாதை இருக்கா? அதனாலத்தான் என்னோட கருத்துக்களில் இப்போது கூட நாத்திகனின் கருத்துக்கள் வருது.
நாத்திகம், ஆத்திகம் ஒண்ணு! அப்படிங்கறத, சமீபத்துல ‘டேன்பிரேவ்ன்’ எழுதுன ‘டாவின்சி கோட்’, ‘ஏஞ்சல்ஸ் அண்டு டிமேன்ஸ்’ என்ற புத்தகத்துல ரொம்ப அழகா கொண்டு போயிருப்பாங்க.
அதாவது ரெண்டுமே ஒரு இடத்துல சேர்ந்துடுது. ரெண்டுமே சமூக சேவைக்கும், மனித சேவைக்கும் தான் இருக்கு. இதை உணர்ந்த மதம் இந்து மதம். காலங்காலமா, பன்னெடுங்காலமா, ‘டாவின்சி கோட்’, ‘ஏஞ்சல்ஸ் அண்டு டிமேன்ஸ்’ என்ற புத்தகத்துல என்ன சொல்லியிருக்காங்கன்னு விரிவாகக் கூற எனக்கு நேரமில்லை. அதற்கு தனியா நேரமாகும். தெரிஞ்சவங்க அந்த புக்க படிச்சிக்கோங்க.
அதையெல்லாம் படிக்கும் போது தான் இந்து மதத்தோட அறிவியல் பூர்வமான வெளிப்பாடுகள் இந்திய புத்தகங்களால் எனக்கு தெரிய வரவில்லை. இந்த மேலைநாட்டுப் புத்தகங்கள படிக்கும் போது, ரோம் நகரத்தில சர்ச்சிலும், பஞ்சபூத ஸ்தலமாக கட்டியிருக்காங்க. தண்ணிக்காகவும், ஆகாயத்துக்காகவும், நெருப்புக்காகவும், மண்ணுக்காகவும், காத்துக்காகவும் கட்டியிருக்காங்க. இந்த கட்டட அமைப்புகளும், இந்துக் கோயிலோட கட்டட அமைப்புகளோடு ஒத்துப்போகுதுன்னு, அவங்க ஃபுல் ரெக்கார்டு எடுத்து அந்த புக்குல சொல்றாங்க. இதில் இருக்கக்கூடிய ஆர்க்கிடெக்சுரல் டைமன்சன்ஸ், டிஸ்டன்சஸ், டிஸ்கிரிப்சன்ஸ் எல்லாம் கரெக்டு. கற்பனை இல்லன்னு சொல்றாங்க.
அதனால சுதந்திரம் என்பது இருக்கக்கூடிய ஒரே இடம் இந்து தர்மம்.
சுதந்திரம் என்பது ஒரு அடிப்படையான மனித உணர்வு. அது இருப்பவர்கள் கிரியேட்டிவா திங்க் பண்ணுவாங்க. புதிய புதிய சாதனைகள் நடத்துவாங்க. உலகத்துல நாம அனுபவிக்கக்கூடிய அத்தனை வசதிகளுமே கடவுள மறுத்து அறிவியல் பூர்வமா கிரியேட்டிவா யோசிப்பவர்களால் உருவாக்கப்பட்டது தான். அது நாம பேசிக் கொண்டிருக்கும் செல்போனா இருந்தாலும் சரி, ஆடியோவா இருந்தாலும் சரி, அப்படி கடவுள மறுத்து கிரியேட்டிவா சிந்திப்பவர்களை ‘டிவைனிட்டி இன் கிரியேட்டிவிட்டி’, ‘கிரியேட்டிவிட்டி இன் டிவைனிட்டி’ அதாவது படைப்பு என்பது இறைவனுடையது. இறைவன் என்பவன் படைப்பவன். படைப்பவன் இறைவனுக்கு சமம் என்ற உயரிய தத்துவத்தால் உருவாக்கப்பட்டது இந்திய சமுதாயம். இந்து சமுதாயம்.
‘இந்திய சமுதாயம், இந்து சமுதாயம்’ எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். எனக்கென்னவோ, இரண்டும் ஒன்று என்று தான் தோன்றுகிறது.
அறிவியலே இந்துமதம், நன்றி, வணக்கம்.
Original Audio posted in WhatsApp Group ‘Science is Hinduism’ on 02 May 2018.