முஸ்லீம்கள் ஒருவரை ஒருவர் பார்த்தால், ஆரத்தழுவி கட்டிக்கொள்வார்கள். கிறிஸ்துவர்கள் கைகுலுக்கிக் கொள்வார்கள். ஆனால், இந்துக்கள் தொட்டுவிடக் கூடாதுன்னு கையெடுத்துக் கும்பிட்டுக் கொள்வார்கள். அவர்களுக்கு நட்பு உணர்ச்சி குறைவு என்ற தவறான எண்ணங்கள் உண்டு.
ஆனால், உண்மை என்ன? உண்மையில் நட்பானது என்பது காலங்காலமாக ஆரத்தழுவி கட்டிப்பிடித்து இருந்தது இந்து மதம் தான். இராமபிரான், கங்கைக் கரையை கடக்கும் போது, குகனைக் கட்டித் தழுவி நாம் நண்பர்களாக இருக்கலாம் என்றார். நட்புக்காக அவர்கள் ராமனுக்காகப் போராடினார்கள். அவர்களின் இனத்தவர்களையே எதிர்த்து.
இவரப் பத்தி சொல்லவே வேண்டாம். வெங்கடேசப் பெருமாள் பாலாஜி. அவருக்கு நட்பென்றால் அவ்வளவு இஷ்டம். சின்ன வயசுப் பழக்கமான குசேலனிடம் திரும்பப் போய் உட்கார்ந்துக் கொண்டு, கிண்டல் பண்ணி, பாட்டுப் பாடி, அவர் கொடுத்த உணவு எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டு, அந்த நட்பினை நிலை நிறுத்துகிறார். நாரதர் வந்து எல்லா தெய்வங்களிடமும் நட்பு பாராட்டி, நட்பின் தூதுவராக இருந்தார்.
தெய்வமாகக் கருதப்பட்ட பெருமாள், மனிதராகக் கருதப்பட்ட நம்மாழ்வாரை சந்திக்கும் போது, நம்மாழ்வார் தயங்குகிறார். நான் ஒரு மானிடப்பிறவி என்று. ஓடிப்போய் கட்டிப்பிடித்துக் கொள்கிறார். கட்டித்தழுவி, நட்புப் பாராட்டுவது இந்து மரபு. அது இஸ்லாமிய மரபு கிடையாது. அப்போது ஏன் இந்துக்கள் தூரத்தில் இருந்து கையெடுத்துக் கும்பிட்டுக் கொள்கிறார்கள் என்றால், புதிதாகப் பார்க்கும் போது, நாம் ஆராய வேண்டியது இருக்கிறது. அவர்களிடம், கை கொடுப்பது, கட்டி தழுவுவதா, இல்லை கையெடுத்து கும்பிடுவதா, கண்ணியத்துடன் ஒதுங்கிக் கொள்வதா என்பதாக ஆரம்பத்திலே ஒரு எண்ணம் தோன்றுகிறது.
ஏனென்றால், எதிரிகள் துரோகிகளாக வரலாம். அதனால, கொஞ்சம் பார்த்துக் கொள்ள வேண்டும். அதனாலத்தான், திருக்குறளில் கூட சொன்னார்கள். எல்லாருக்கும் உதவணும். ரொம்ப அர்ஜென்டா உதவணும். ஆனால், எதிரியாக வரும்போது, அவனுடைய தொழுத கையும், அழுத கண்ணீருமாக இருக்கும் போது, ஆராய்ச்சி பண்ணிக்கோ, நீயாகவே போய் மாட்டிக் கொள்ளாதே, குடும்பத்தை, நாட்டை, உன்னுடைய பெருமையை இழந்து விடாதே. இது நட்பு பாராட்டுதல் என்று வரும் போது, சகோரத்துவம் என்று வரும் போது, ஆரத்தழுவி தன்னுடைய நட்பை வெளிப்படுத்துதல் என்று வரும்போது, அது இங்கேயும் தான் இருக்கு. தொடாம தூரத்துல நிற்பதென்பது கிடையாது. அது ஆரம்பத்தில் தான் என்பதைப் புரிந்துக் கொள்ளுங்கள்.
நன்றி, வணக்கம்.
Original Audio posted in WhatsApp Group ‘Science is Hinduism’ on 19 June 2018.