“ஆணுக்கு பெண் சமம்”. என்ற வார்த்தைகளை உள்ளடக்கிய சோவியத் யூனியன் அரசியல் சட்ட வடிவு மக்கள் பார்வைக்கு சுற்றாக விடப்பட்டது. ஒரு கிராமத்து விவசாய பெண் சொன்னாராம். “ஆண் என்ன அளவு கோளா? பெண் அவனுக்கு சமம் என்று சொல்ல?”. “ஆணும் பெண்ணும் சமம்” என்று மாற்றுங்கள். என்றாராம். அவ்வாறே சட்ட வடிவம் மாற்றப்பட்டது என சொல்வார்கள்.
அறிவியலாக இந்து மதம் என்ன சொல்கிறது? ஆணும் பெண்ணும் சமம் அல்ல. பெண் ஆணை விட உயர்ந்தவள். ஆண் ஒரு சிங்கம் என்றால், அதன் மேல் அமர்ந்து சவாரி செய்யும் சிம்மவாகனியாக பெண். பிறகு ஏன், பெண்ணுக்கு கட்டுப் பாடுகள்? உயர்ந்த இடத்தில நாம் வைக்கும் ஒரு விஷயம் மாற்றாரால் அவமதிக்கப் படக் கூடாது என்ற காரணத்தால், ஒரு மன்னனுக்கு அமைச்சர்கள் எடுத்து சொல்லும் கட்டுப்பாடுகள் போன்றவை அவை.
நவராத்திரியின் ஒவ்வொரு அல்லும் (இரவு) பெண்களின் கையே ஓங்கி இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள உருவாக்கப்பட்டவை.