மலை போன்ற துன்பங்களின் நடுவே ஒரு கல் போன்ற நம்பிக்கை.
ஏதோ ஒரு காரணம். நிகழ்ச்சி. பயணம்,.. மலைகளின் நடுவே, அடர்ந்த வனத்தில் , இல்லை இல்லை, திக்குத் தெரியாத காட்டில் ஒரு மனிதன் மாட்டிக் கொண்டான்.
வனத்துக்கும் காட்டுக்கும் என்ன வித்தியாசம்? வனம் வளமையோடு அழகாக இருக்கும். குடிக்க நீர் கிடைக்கும். கனியோ காயோ, கிழங்கு போன்ற உணவு கிடைக்கும். ஆனால் திக்குத் தெரியாத காட்டில் இருள் சூளும். பயம் இருக்கும். ஒரு ரவுடியின் வீரம், பணக்காரன் செல்வம், அறிவாளியின் கல்வி இங்கே எடுபடாது.
பயம். இருள். திக்குத் தெரியாத காடு. பயந்து திசை தெரியாமல் தவிக்கிறோம்.
அப்போ…
இது என்ன? ஒரு கல். அதில் அம்மனோ, பாம்பு போன்ற உருவமோ.. கொஞ்சம் மஞ்சள், குங்குமம் .. விபூதி.. .. இதைப் பார்க்கும் போது .. என்ன தோன்றும்?
அவன் இந்துவோ, முஸ்லிம், கிருத்துவ முறையோ அல்லது நாத்திகன்.. யாராக இருந்தாலும்…
திக்குத் தெரியாத காட்டில் இருள் சூழ்ந்த மனத்தில், ஒரு நம்பிக்கை தோன்றும் .. அந்தக் கல்லை பார்க்கும் போது. ஏன் என்றால், அந்தக் கல் அந்த இடத்தில் மனித நடமாட்டத்தை குறிக்கும். புதிய நம்பிக்கை, புதிய விடியல் வரும் என்ற நம்பிக்கை.
எனவே தான், இந்துக்களாகிய நாங்கள் காட்டில் மலையில் கல்லினை நட்டு கடவுள் என நினைத்து கும்பிடுகின்றோம்.
இந்த சமூக அறிவியலே இந்து மதம். மனித குலத்துக்கு நம்பிக்கை வடிவம்.