கடவுள்களை சித்தரிக்கும் போது, பல்வேறு காரணங்களுக்காக சித்தரித்தோம், விநாயகரை வினைகளுக்கு நாயகராக சித்தரித்தோம், யானைத் தலையுடனும், மனித உடலுடனும், நல்ல பெரிய தொந்தி வச்சிக்கிட்டு எந்நேரமும், சாப்பிட்டு கிட்டு, கண்ணுல ஒரு மாதிரி பார்த்து அருள் பாலிக்கிற மாதிரி வைச்சோம்,
வீரம், செல்வம், கல்வி, இவற்றிக்கு அடையாளமாக, லட்சுமி, சரஸ்வதி, ஈஸ்வரி, இவங்களையும், அவங்களுக்கு ஹஸ்பன்ட் மார்களையும் வச்சி, முப்பெரும் தெய்வமாக வைப்பதைப் பார்த்தோம்.
காமம் வாழ்வில் ஒரு இன்றியமையாதது. படைப்பியலில் ஒரு முக்கியமான தத்துவம் என்பதினால், மன்மதனை படைத்து வைத்தோம். எல்லா கடவுளுக்கும் ஒரு ரீசன். அப்பா, புள்ள , மருமகன் என்ற ரிலேஷன் சிப்பை படைத்து வைத்தோம்.
அதன் மூலமாக கதைகளை உருவாக்கி, மனித வாழ்விலே குழப்பங்கள் வரும் போது, அந்தக் கதைகளை படித்து தெரிந்து நம்பளை நம்மளே சரி பண்ணிக்கிடணும். சுந்தர காண்டம், அனுமான் எப்படி சிக்கலான காலத்தை கையாண்டார் என்பது என்பது பற்றி அறியும் போது அதே போன்ற சிக்கலான கால கட்டம் வரும் போது அதனை நாம் எப்படி கையாண்டு வெற்றி பெற வேண்டும் என அறிகிறோம். நம்ம லைப் ல க்ரிஸிஸ் வரும் போது நம்மளே நாம ஹாண்டில் பண்ணிக்கிடணும். அது ராமாயணத்திலே சுந்தர காண்டம் படிக்கும் போது நமக்கு கிடைக்கிறது.
சில கடவுள்களுக்கு ஆறு தலை, ஆறுமுகம். நாலு தலை, நான்முகம். பத்து தலை, ராவணன். ராவணனையும் கடவுளாக பார்க்கக் கூடிய பல ஹிந்துக்கள் இருக்கிறார்கள். குறிப்பா வீர சைவர்கள். அதனால தான் கர்நாடகாவுல தனி மதமா எங்களை ரெக்ககணேஷ் பண்ணுனு சொல்லிக்கிட்டு இருக்கிறாங்க. இந்த மாதிரி, கற்பனையும் தாண்டி வச்சோம். 10 தலை, நாலு காலு, ஆறுகையி, எட்டுகையி , ஆறுமுகம் அப்படிண்னு எல்லாம்.
ஏன் இப்படி கற்பனை பண்ணி வைக்கணும்? ஏனென்றால், கலை, கற்பனை, சோகம், நகைச்சுவை, கலந்ததுவே கடவுளாகும். இந்த கடவுளை நம்ம, மிக சுதந்திரமாக கையாடலாம். ஹிந்து மதத்திலே, கலையம்சத்தோடு, படைப்பியல் தொழில் செய்யக் கூடிய, அனைவரும் இறைவனின் அம்சம் என்றும், அவர்களை படைக்கக் கூடியது இறைவனின் அம்சம் என்றும், வைத்திருக்கிறோம். அதனால தானே எல்லா கலைஞர்களும், எல்லா தொழில் செய்பவர்களும் முன்னேற முடிஞ்சது. அமைதியா இருக்க முடிஞ்சது.
பாருங்க தொழில் வினைஞர்கள் பல வேறு வகை. மரத்துல கடைஞ் சிருப்பாங்க. உலோகத்துல கடைஞ்சிருப்பாங்க. வீடுகள் கட்டுவாங்க. அவர்களுக்கு எல்லாம் ஒரு நிரந்தரமான வருமானம் வேணும் என்று சொல்லும் போது, கடவுள்களும், கடவுள் சார்ந்த நிகழ்வுகளும், கோவில்களைக் கட்டி, தொடர்ந்து அவங்களுக்கு வேலை வாய்ப்பு இருக்கும்போது, பரம்பரை பரம்பரையாக அந்த கலைகள் வளர்ந்தன. அப்படி இல்ல என்றால் அது ரெண்டாது மற்றும் மூன்றாவது தலைமுறையோடு போய்டும். அதற்கு அப்புறம் கற்பனை. கற்பனையை அப்படியே தீட்டி,
எந்த அளவிற்கு என்றால், வானளாவிய கற்பனை, நெருப்பளாவிய கற்பனை, நீரளாவிய கற்பனை, அது கடவுளாக சித்தரித்து, நகைச்சுவை (சிரிப்பு), நகைச்சுவை (அணிகலன்கள்), கலைச்சுவை, சொற்சுவை, கலந்து, எல்லா விதமான கலைஞர்களின் திறமை பயன்படுத்தி, நாங்கள் கடவுள்களை உருவாக்கினோம். ஆம், இந்துக்களாகிய நாங்கள் தான் கடவுள்களை உருவாக்கினோம் எங்களுக்கான கடவுள்களை. இஸ்லாம் மற்றும் கிருத்துவ மார்க்கம் போல, கடவுள் எங்களை படைக்கவில்லை. நாங்கள் கடவுளை படைத்தோம்.
எங்கள் வடிவாக, எங்களிலும் மேம்பட்டதாக, கொஞ்சம் வித்தியாசமாக, கற்பனை கலந்து படைத்தோம். கடவுளை நல்ல கிண்டல் பண்ணலாம், கடவுளும் வந்து நம்பள கிண்டல் பண்ணுவாரு, சந்தோசத்தோட வெளிப்பாடு நகைச்சுவை. நம்ப ஊரு பெண்களுக்கு நகையை கொடுத்தாலும் அது சந்தோசம்தான், ஒரு நகைச்சுவை, நகைகளை கொடுக்க முடியாத இடத்திலே நகைப்பதற்கான ஜோக்குகளை சொன்னாலும் அது நகைச்சுவை. அந்த நகைச்சுவை என்பது எப்பவும் இருக்கணும், செல்வத்தோடு இருக்கலாம், செல்வம் இல்லாமலும் இருக்கலாம். கல்வியோடு இருக்கலாம், கல்வி இல்லாமலும் இருக்கலாம். வீரத்தோடு இருக்கலாம், வீரம் இல்லாமலும் இருக்கலாம். சந்தோசத்தை கொடுக்கும் நகைச்சுவை என்பது இது தான்.
அவ்வைப் பிராட்டி போறாங்க முருகப்பெருமாள் கிட்ட. முருகப்பெருமான் சும்மாவா இருக்கிறாங்க? கோமணத்தை கட்டிக்கிட்டு ஒரு மரத்துமேல ஏறிகிட்டு டண்டணக்கா டண்டணக்கா என்று சேட்டை பண்ணிக்கிட்டு இருக்குறாரு, இந்த அம்மாவுக்கு பசிக்குது முருகனை பார்த்து கேட்குறா, அப்பா பசிக்குது ஏதாவது பழத்தை கொடு நீதான் நாவல் பழம் மரத்திலே இருக்கிறாயே என்று! அவர் விடுவாரா, ஏய் பாட்டி வந்திருச்சுனு ‘உனக்கு சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா? அப்படின்றாரு,
பெரிய காப்பியத் தலைவி, பெரிய கவிதை, கட்டுரை எல்லாம் எழுதுறவங்க. என்னடா இது, முருகன் இப்படி சொல்றாரே? சுட்ட பழமா, சுடாத பழமா, பழம் எப்படி சுடும், அப்படிண்னு, சரி நாம பதில் சொல்லுவோமே, ‘சுட்ட பழத்தையே கொடுப்பா’, என்கிறார். உடனே அந்த முருகன், டிங்கு டிங்குனு, மரத்தை உலுக்குறாரு, மரக் கிளைகளில் இருக்குற பழம் எல்லாம் கிழே கொட்டுது. பழத்தை எடுத்து சாப்பிடும் போது, அவ்வைப் பிராட்டி, ‘சூ சூ’ னு ஊதுறாங்க, என்னா சுடுதா? ஊதுரியா நீ, அப்படின்றாங்க முருகன். என்ன மாதிரி ஒரு காமெடி பாருங்க. வாழைப் பழ காமெடிக்கு முன்னாடி வந்த காமெடி!
அந்த அம்மா வந்து புல்லரிச்சி போயிடறாங்க. முருகன் நம்மகிட்ட இந்த மாதிரி, விளையாடுறாரே அப்படிண்னு. அதுக்கு அப்புறம் அந்த முருகனை இந்த அம்மா விடுவார்களா, அவர் பழத்துக்கு கோச்சுக்கிட்டு போய் பழனியில ஒட்டுக் கோமணத்தோடு நின்னுக்கிட்டாரு, இந்த அம்மா நேரா போறாங்க, நேரா போய், ‘ஞானப்பழத்தை பிழிந்து’ அப்படிண்னு பாட்டு பாடின உடனே, முருகனுக்கு பயம் வந்திடுது. ‘ஐயையோ, இங்கேயும் வந்து டார்ச்சர் பண்ணுதே இந்த பாட்டி, இங்க இருந்து எஸ்கேப் பண்ண ஒண்ணும் வழியே இல்லையே’ என்று, அதுக்கு அப்புறம் இந்த பாட்டியோட அறுவ தாங்க முடியாது, குடும்பத்தோடு வந்து செட்டில் ஆகிடுறாரு.
அந்த அவ்வைப் பாட்டி இன்னொரு இடத்துல, ஒரு அரசன் கிட்ட போறாங்க, அந்த அரசனுக்கு ஏற்கனவே இந்த பாட்டியைப் பார்த்த பயம், ஏற்கனவ, ‘எதையாவது கொடு’ என்று கேட்டதற்கு யானையை கொடுத்து அனுப்புனா, ‘யானையைக் கொடுத்து அனுப்பும் அரசனே உனக்கு அறிவு இருக்கா? யானையை வச்சிக்கிருக்கிறது எப்படி? நானே தரித்திர திசையிலே வந்திருக்கிறேன், ஏதாவது பொருள் கொடு பொழச்சி போய்க்கிறேன். நீ யானையை கொடுத்திருக்க! யானையை மேய்க்குறது சாதாரண விஷயமா, அதுக்கு எவ்வளவு செலவாகும். உனக்கு என்ன கொடுக்கணும்ண்னு தெரியலையே!’ என்று இந்த அம்மா சத்தம் போட்டு வச்சிருக்குறாங்க.
அந்த மாதிரி சமயத்துல ஒரு ஆளு ஒரு பழத்தைக் கொண்டு வந்தாரு, ஏதோ நாவல் கனியோ அபூர்வமான கனி, அந்த ஆளு வந்து இந்த ஆளு கையிலே கொடுத்துட்டு என்ன சொன்னாரு? இது ரொம்ப அபூர்வமான கனி, எப்போதுமே இளமையோடு இருக்காலாம். அதனால இத உங்களுக்கு குடுக்கலாம் என்று வந்துட்டேன் என்று! இந்த அரசனுக்கு டவுட்டு, இன்ன இது பழத்தைக் கொடுக்கிறான் இளமையோடு இருக்கலாம் என்று. இளமையோடு இருக்குறதுக்கு என்ன கேரண்டி? அதுல என்ன இருக்குதுனு தெரியல.
அப்பத்தான் இந்த அம்மா வந்து ‘ஞாணப் பழத்தை பிழிந்து’, அப்படினு வந்துச்சி ராஜாவை பார்க்க. பாத்தாரு இந்த அரசன். ஒரு ஐடியா, இந்த பழத்தை அந்த கிழவிக்கு கொடுத்திடலாம். சாப்பிட்டு இளமையானா ஓகே. இல்லனாலும் ஓகே அப்படிண்னு, ‘இந்தா. கிடைப்பதற்கு அரிய, நெல்லக்கனியை, வாழ்நாளை நிறுத்தி வைக்கக் கூடியதை, இளமையை திரும்ப கொடுக்க கூடியதை உனக்கு கொடுக்குறேன்’ அப்படிண்னு தூக்கி கொடுத்துட்டு, அவ்வைக்கு நெல்லி கனி கொடுத்தவனாக பெயர் பெற்று கொள்கிறார். எனவே, இன்னும் நிறைய இருக்கு.
நம்ப கிருஷ்ணர் பற்றி சொல்லிகிட்டே போகலாம். சின்ன வயசுல அந்த ஆளு பண்ண சேட்டைகள், வெண்ணையை திருடி தின்னது. பொம்பள பிள்ளைங்க பின்னாடி போய் சீண்டிவிட்டு ஓடி வருவது. சிவபெருமான் புட்டுக்கு மண் சுமந்தது, டான்ஸ் ஆடி பாட்டு பாடினது. கடவுள்களை ஒரு சாதாரண மனிதர்களோடு சாதாரண மனிதனாக, நகைச்சுவை, கற்பனை, கலை, பின்னி பிணைந்து, ஒவ்வொரு இடத்திலும் இருக்கக் கூடிய, ஒரு வாய்ப்பு, உயரிய இந்து நெறியிலே உள்ளது.
எனவே சந்தோசம் என்பது, பணம் இல்லாமல், கல்வி இல்லாமல், வீரம் இல்லாமல், அது கண்டிப்பா வேண்டும், அப்படியே குறை இருந்தாலும், எங்கே கிடைக்கும் என்றால், உயரிய இந்து தர்மத்திலே, ஹிந்து நெறியிலே, இங்கு இருக்கக்கூடிய வழிபாட்டுக் கதைகளிலே, வேறு பழைய பழைய நிகழ்ச்சிகளிலே கிடைக்கும் என்று கூறி நகைச்சுவை வாழ்வில் முக்கியமான ஓர் அங்கம், அதற்கும் நாங்கள் ஒரு பங்கு வைத்திருக்கிறோம் என்று கூறி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்.
Original Audio posted in WhatsApp Group ‘Science is Hinduism’ on 31 May 2018.