இந்த வட்டிக்கு கொடுப்பது, வாங்குவது பற்றி இன்றைக்கு கொஞ்சம் பேசலாம். இஸ்லாமியத்தின் சிறப்பு அம்சமே வட்டியானது தடைசெய்யப்பட்ட ஒன்றாகும். அதனால் தான் மக்கள் எல்லாம் நிம்மதியாக வாழ்கிறார்கள் என்று சொல்லி, வட்டிக் கொடுமையால் இந்திய சமுதாயத்துல, இந்து சமுதாயத்துல நிறைய பேர் பாதிக்கப்படுவதினால், அது வந்து சுப்பீரியரான மார்க்கமோ, நம்மிடம் அந்த குறைபாடு இருக்கோன்னு நிறையபேர் சந்தேகப் பட்டிருக்காங்க.
இதைப்பற்றி, நம்முடைய வேதங்கள், நம்முடைய புத்தகங்கள், நம்முடைய இந்து பண்பாடு, பழக்கவழக்கங்கள், என்ன சொல்கிறது என்பதை புதிய தலைமுறையினருக்கும், மற்றவர்களுக்கும் புரிய வைக்க வேண்டியது ஒரு அவசியம் என்று நினைக்கிறேன். வட்டி என்பது ஆங்கிலத்தில் இன்ட்ரெஸ்ட். இன்ட்ரெஸ்ட் என்பது, ஆங்கிலத்தில் ஆர்வம் என்ற சரியான ஒரு பொருள்படும். ஒரு லட்சரூபாயை ஒருவரிடம் நாம் வாங்கும் போது, மாசம் 2000 ரூபாயை ஆர்வத்திற்காகக் கொடுக்கிறோம். என்ன ஆர்வத்திற்காகக் கொடுக்கிறோம் என்றால் இந்தப் பணத்தை உனக்கு திருப்பிக் கொடுப்பதற்கு எனக்கு ஆர்வம் இருக்கிறது என்பதனை நிரூபிக்க கொடுக்கிறோம்.
ஒரு லட்ச ரூபாயை வாங்கிக் கொண்டு மாதம் ஐந்தாயிரம் ரூபாயை தருகிறேன். ஏனெனில் உனக்கு பணத்தைக் கொடுப்பதில் எனக்கு ஆர்வம் இருக்கிறது. அதை நாம் ப்ரூவ் பண்ணுவதற்காக இந்த மாதம் ஐந்தாயிரம் ரூபாயை வைத்துக் கொள். அடுத்த மாதம் ஒரு லட்சத்தை கொடுக்கிறேன். அடுத்த மாதமும் கொடுக்க முடியவில்லை. இந்தா ஐயாயிரம் ரூபாயை வைத்துக் கொள். அதுக்கு அடுத்த மாதம் ஒரு லட்ச ரூபாயை கொடுத்து விடுகிறேன்.
சில மாதம் கழித்து, இந்த பெரிய தொகையை கொடுக்க முடியவில்லை. என்ன செய்ய வேண்டும்? இந்து மதங்களில் வேதங்களில் என்ன சொல்லியிருக்கிறதென்றால், வட்டிக்குக் கொடுப்பதும், வாங்குவதும் தவறு என்று தடைசெய்யப்பட்டு, வட்டிக்குக் கொடுப்பதும் போன்ற ஒரு இழிவான தொழில் கிடையாது. வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள், அதற்கு கணக்கு எழுதுபவர்கள், வசூலிப்பவர்கள் என அத்தனை பேரும், அத்தனை பேரும் நரக வேதனையை அனுபவிப்பார்கள், அத்தனை பேருக்கும் தண்டனை இருக்கிறது.
இந்தக் குறிப்புகள் எல்லாம் விரிவாக எந்த இடத்தில் எங்க இருக்குன்னு என்னால சொல்ல முடியும். அதற்கான தண்டனை என்ன என்பதும் விரிவாக உள்ளது. அதனால், வட்டித் தொழில் என்பதை இந்து மதத்தில் எந்த இடத்திலுமே நல்ல தொழிலாக சொல்லப்படவில்லை. வட்டிக்கு கொடுப்பதென்பதை ஒரு கேவலமாக பார்த்துக் கொண்டிருக்கிறது.
ஆனாலும் வட்டிக்கு கொடுப்பதை தடைசெய்யவில்லை. ஏன்னா, திருப்பதி பாலாஜியே கல்யாணத்தை முடிவு செய்த பிறகு, கல்யாணத்தை நடத்த முடியாமல் போகிற போது, குபேரனிடம் கடன் வாங்கினார். இந்த குபேரனிடம் வாங்கிய கடனை அடைப்பதற்கு பக்தர்களிடம் வரும் காணிக்கையை வைத்து வெறும் வட்டியை மட்டும் தான் கட்டிக்கிட்டு இருக்காரு. இன்னும் அசலை அடைத்த பாடில்லை. என்ற ஒரு ஐதீகம் இருக்கிறது.
கடவுளே கடன் வாங்கறாரு. மக்களும் கடன் வாங்கலாம் கடன் யாரு குடக்குறது? குபேரன் கொடுக்கிறான். ஒரு செல்வந்தன் எப்படிப் பட்ட செல்வந்தன்? அள்ள அள்ளக் குறையாத செல்வந்தர். எவ்வளவோ கொடுக்கிறான். வட்டி வரலைனா என்ன பண்ணுறது? அப்படியே தள்ளுபடி செய்யவேண்டியது. அதுதான் இந்து மதம்.
வட்டி வரல ஒரு மூணு மாசம் ஆறு மாசம் வாடாத பயிரும், பாராத கடனும் வராது என்று கேட்கலாம் அசலைக் கொடுக்க முடியலன்னா இந்த மாசம் என்ன ஆச்சு என்று கேட்கலாம். அசலைக் கொடுக்கலைனா கேட்கலாம். தரம் தாழ்ந்து நடத்தக் கூடாது. மிரட்ட கூடாது. வாங்குன காசுக்கு வட்டி கொடுக்கலையே என்று கேட்கலாம். கொடுக்க முடியவில்லை என்றால் கடனை முழுவதுமாக தள்ளுபடி செய்து விட வேண்டும். எந்தக் கடனும் கிடையாது.
அதுக்கு அப்புறம் சிறிது காலம் கழித்து மீண்டும் கடன் கொடுக்கலாம். அவசர செலவுக்கு கடன் வாங்கலாம். வாங்கிய காசுக்கு கடனை கொடுக்கலாம். வட்டி என்பது செல்வத்தை எல்லோருக்கும் பகிர்வதற்காக கொடுக்கப் படுகிறது. வட்டி ஏன் வாங்கக் கூடாது என்று இஸ்லாம் சொல்லுகிறது என்றால், வட்டி என்பது இறைவனது செயலை நீ தீர்மானிப்பதாக உள்ளது. உதாரணத்திற்காக 5 லட்சம் ரூபாய் நீ வைத்திருந்தால் அதற்கு 10 ஆயிரம் ரூபாய் வட்டி கிடைக்கும். என்று நீ முடிவு செய்வது தவறாகும். இறைவன் 5 லட்சத்திற்கு 50 லட்சம் கூட கொடுப்பான் கடவுளின் தீர்மானத்திற்கு எதிராக நீ தீர்மானிப்பதனால் வட்டியை இஸ்லாம் எதிர்க்கிறது.
ஆனால் இந்து மதத்தில் வட்டி குறித்து சொல்லப்படுவது என்ன வென்றால், நீ ஒருவனிடம் உதவி வாங்கிட்ட ஆனால் உன்னால் வட்டி கட்ட முடியவில்லை. அதனால் வாங்கியவனுக்கும் உனக்கும் தொடர்பு இல்லாமல் போய் விட்டது. ஆனால் சில காலத்தில் நீ உயர்ந்த நிலைக்கு வந்துட்ட என்றால் உன்னால் முடிந்த அளவிற்கு மற்றவர்களுக்கு உதவி செய்தால் அது அந்த வட்டிக்கு சமம் என்று சொல்லப்படுகிறது.
தன்னால் இயன்ற தனது சக்திக்கு உட்பட்ட தொகையை நாம் யாரிடம் வாங்கினோமோ அவரிடம் கொடுக்க முடியவில்லை என்றாலும். மற்றவர்களுக்கு கொடுத்து உதவலாம். வட்டி என்பது இந்து மதத்திலே கேவலமாகப் பார்க்கப்படுகிறது. எப்ப கேவலமா பார்க்கபடுகிறது என்றால் வட்டி என்ற பெயரில் துன்புறுத்தப் படும்போதும், பொருள் சேர்க்க ஆசைப் படும் போதும், மனித குணம் மாறும் போதும் பார்க்கப்படுகிறது.
அதனால வட்டித் தொழில் எந்த ஒரு இடத்திலும் புகழப்படவில்லை, இது உதவுவதற்கு ஒரு வாய்ப்பாகத்தான் வைக்கப் படுகிறது. மற்ற மார்க்கத்தை விட ஹிந்து மதத்தில் வட்டி என்பதை மிகச் சிறந்த கருத்து மற்றும் கட்டுப்பாடுகளுடன் வைத்துள்ளோம் என்பதை நம்புங்கள்.
Original Audio posted in WhatsApp Group ‘Science is Hinduism’ on 22 May 2018.