பயணத்தின் இலக்கு ரகசியமானது. அது பயணிக்கே தெரியாது.
இது கிறித்துவ, இஸ்லாமிய மனப்பான்மை.
எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர் தின்னியர் ஆகப் பெரின்.
இது குறள் சொல்லும் இந்து மத நம்பிக்கை.
நாத்திகமும் நெஞ்சுரமும் கலந்தது இந்து நம்பிக்கை. இதை பக்தியை மட்டும் நம்பும் நபர்கள் ஏற்றுக் கொள்ளாமல் போனாலும், அதுவே உண்மை.
சோர்வடைந்த மனம், தொய்வான எண்ணங்கள் வரும் போது அத்தகைய மனப்போக்கு வரும்.
எல்லோருக்கும்… சில நேரங்களில்..
அப்போது வழிகாட்ட ஆசான், குரு, தெய்வ சிந்தனை, … கை கொடுக்கும்.
சில சமயம் அந்த குருவாக நம் பிள்ளைகளே அமைவார்கள்.
இந்த தத்துவமே குமரகுரு நாதன் … முருகப் பெருமான்.. சிவனுக்கு உபதேசம் செய்வது.
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.
இதனை பொருள் கொள்ளும் போது, ‘வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக’ என்பதனை தனியாகவும், ‘ஓம்பா
மெலியார்மேல் மேக பகை’ என்பதை தனியாகவும் பொருளாள வேண்டும்.
அதிகாரம் திருக்குறள்
பொருள் / நட்பியல் / பகைமாட்சி
குறள் : 861 என்பதனையும் கருத்தில் கொள்ளவேண்டும்.
தகுதியான ஆள் ஒரு தகுதியான எதிரியை வைத்து இருப்பான். ‘Name your enemy, we will know, how powerful you are’, is a proverb.
கௌரவ சேனைக்கு தளபதியாக கர்ணன் அறிவிக்கப் பட்ட போது, பீஷ்மர் தடுக்கிறார். கர்ணன் அவமானப் பட்டதாக நினைத்து வெளியேறுகிறான். பின்னர் பீஷ்மர் மரணப் படுக்கையில் இருக்கிறார். அவர் கர்ணனை அழைத்து சொல்கிறார். “வீரத்தை வீரம் அவமானப் படுத்தாது. ஏதும் அறியா அப்பாவி துரியோதனனை கடைசி வரை காப்பாற்ற உன்னால் மட்டுமே முடியும். எனவே தான் உன்னை தடுத்து வைத்தேன்”. என்றார்.
தமிழில் சண்டை போடுவதை ‘பொருதுதல்’ என்றும் சொல்வார்கள். பொருத்தமானவர்களிடம் தான் சண்டை போட வேண்டும்.
‘வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக’ எனும்போது, தன்னைவிட என்று எங்கும் சொல்லப் படவில்லை. ‘தனக்கு தகுதியான வலிமை உடைய’ என்றே பொருள் கொள்ளவேண்டும்.
சாலமன் பாப்பையா அவர்கள், மதுரை அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர். கலைஞர் அவர்களோ, பள்ளிப் படிப்பு தாண்டாதவர். வரதராசனார் அவர்களோ மதுரை பல்கலைக் கழக துணை வேந்தர். பெரும்பாலான குறள் பாக்களுக்கு கலைஞர் உரையே சரி எனப் படுகிறது. ராமானுஜர் காவியம் உட்பட.