காலை எழுந்த உடன் படிப்பு, பின்பு கனிவு கொடுக்கும் ஒரு பாட்டு, மாலை முழுவதும் விளையாட்டு, என்று வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா என்று பாரதியார் பாப்பா பாடல் பாடினார்.

காலையிலே எழுந்த உடனே நாம என்ன பண்ணுறோம் என்பது ரொம்ப முக்கியமான விஷயமாக இருக்குது. இதுல மதங்கள் என்ன சொல்லுது. மதத்தை சாராதவர்கள் என்ன சொல்லுறாங்க. காலைக் கடன் என்பது ஒரு நேஸஸிட்டி, பல்லை விலக்கணும், பாத்ரூம் போகணும், தண்ணீகுடிக்கணும், அது எல்லாம். அதுக்கு அப்புறம், இந்து மதத்திலே, இந்துக்களிலே நெறிமுறை முறைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். சூரிய நமஸ்காரம், ஏன் சூரிய நமஸ்காரம் பண்ணனும்? காத்தால போயி வீட்டுக்குள்ளையே இருந்துடக் கூடாதா. எழுந்திருந்து வெளியே போ. வெயிலைப் பார். விட்டமின்கள் கிடைக்கும். புதிய எண்ணங்கள் உருவாகும்.

பெண்கள், வீட்ட சுத்தம் பண்ணனும், வாசலை சுத்தம் பண்ணனும், கோலமிடணும். அத சினிமாவுல பார்ப்பாங்க. நிறைய பேர் நம்ம வீட்டு வாசலிலே கோலமிடும் போது, முஸ்லீமுங்க பெரும்பான்மையான பகுதியில இருந்தப்போ, முஸ்லீமுங்க இப்படி சொல்லுவாங்க.

இந்துக்கள்ள எங்களுக்கு ரொம்ப பிடிச்சது இதுதான். காத்தால எழுந்திருந்து வீட்டை கிளீன் பண்ணிட்டு, வாசலை கிளீன் பண்ணிட்டு, கோலம்னு ஒண்ணு போடுவாங்க, எங்க பொண்ணுங்க எட்டு மணி ஒன்பது மணி ஆனாலும் தூங்கிகிட்டு இருப்பாங்க, பல்ல விலக்காமல் ஊத்த வாயில காப்பிய குடிப்பாங்க. கோலம் போட்ட உடனே குளிச்சிட்டு அதுக்கு அப்புறம் சுத்தமாகத்தான் கிச்சனுக்கு போறீங்க. அப்படிண்னு நம்ப பழக்க வழக்கத்தை பற்றி.

பதில் சொல்லாமல் விடுவேன் நானு. அப்புறம் அவங்க பழக்கத்தை பற்றி நம்ம பேசுனா, தேவையில்லாத வாதம், விதண்டா வாதம், ஆயிடும். காலையில எழிந்திருச்ச உடனே, சாமி கும்பிடணும், அப்படியினு நாம கட்டாயப்படுத்தி வைக்கிறது கிடையாது. கும்புறவங்க கும்பிடலாம். இரவு படுக்க போகுறதுக்கு முன்னாடி, சாமியைக் கும்பிடனும் என்று கட்டாயப் படுத்தி வைக்கக் கூடாது. ஏன்னா இறைவழிபாடு என்பது, இந்து மதத்திலே, சகல சுதந்திரங்களும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

உனக்கு எப்ப தோணுதோ, எப்ப வசதியோ, உனக்கு எந்த கடவுள் வேணுமோ, உனக்கு எந்த விதத்தில் முடியுமோ, அப்ப இஷ்டப்பட்டாப் பண்ணிக்கோ இல்லாட்டி விட்டுக்கோ. கண்டிப்பா 5 நேரம் பண்ணியே தீரணும் என்ற பனிஷ்மண்ட் மாதிரி கிடையாது. ஆனால், வாழ்வியல் முறைகளிலே, இதை நீ பண்ணிடனும். காலையிலே ஒரு சூரிய நமஸ்காரம், வெளிய போயி வெயில பாத்திடனும், வீட்டை சுத்தப்படுத்திடனும், வாசலை சுத்தப் படுத்திடனும், கோலமிடவேண்டும். கோலமிடும் போது, அதுக்கு ஒரு தத்துவார்த்த சித்தாந்தங்கள், வீடு சுத்தமா இருக்கு. என்பதை டிக்ளர் பண்ணி, உறவினர்கள், அதிதியர்கள் வரலாம் என்பதை உணர்த்துவது கோலம்.

மாக் கோலம் இடுவதினால், அரிசி கோலம் போடுவதினால சின்னச் சின்ன எறும்புகளுக்கு உணவுகளைப் படைத்துட்டுதான் சாப்பிடுகிறோம் என்று சொல்லுகிறாங்க. இப்படியும், வச்சிக்கலாம், அப்படியும், வச்சிக்கலாம். எப்படியோ, சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். சமையலுக்கு முன்னாடி சுத்தம், எழுந்திருச்ச உடனே சுத்தம், தூங்குறதுக்கு முன்னாடி சுத்தம், வாழ்வியல் நெறிகளை நாம காலையில இருந்து ஆரம்பிக்கிறோம். சாயந்திரம் ஆகுது. சன் லைட் போயிட்டு, நைட் லைட் வருது. அப்ப என்ன பண்ணுறது.

எல்லாத்தையும் சுத்தம் பண்ணு, விளக்கேற்றி வை. விளக்கேற்றும் நேரம் என்று நம்ப பிரிக்கிறோம். விளக்கேற்றும் நேரத்துல வந்து, திவ்யமான உணர்வுகள் இருக்கட்டும். அந்த ஜோதி வழிபாடு நடக்கட்டும். ஒரு இந்து பெண்ணானவள். விளக்கேற்றும் போது, தன்னை அறியாமல், கைகூப்பி அந்த விளக்கை வணங்க வேண்டும். நம்மளே விளக்கேற்றினாலும், கண்டிப்பா நம்ப பண்ணுவோம், அது ஏன் விளக்கை வணங்கணும், அது என்ன ஒரு லைட்டிங் எக்கியூப்மென்ட் தானே? ஏனென்றால், விளக்கை வணங்குவது, வெளிச்சத்தை வணங்குவது என்பது மனித குலத்திலே எல்லா மதத்திற்கும் பொதுவானது.

சூரிய நமஸ்காரமா இருக்கட்டும். விளக்காக இருக்கட்டும். முஸ்லீம் சந்திரப் பிறையைப் பார்க்கிறார்கள். ஏன்னா பாலைவன நாடுகள்ள சுட்டெரிக்கும், சூரியனை அவர்களால் பார்க்க முடியாது. ஸ்கின் எல்லாம் பொத்துப் போய்டும், அதனால புல்லா உடம்ப பொத்திகிட்டு தான் இருந்தாகணும், அது அவங்களுக்கு தேவையான, தவிர்க்க இயலாத உடை பழக்கம். நமக்கு அது எல்லாம் தேவை இல்லை. அதிகாலையிலே புல்லா கருப்பு துணியை போத்திகிட்டு. வெள்ள துணியிலும் இருக்கணும் என்று தேவையில்லை.

எப்படா சூரியன் போகும் சந்திரன் வரும் என்று பார்த்து, அந்த சந்திரனோட குளிர்ந்த ஒளியை அவர்கள் வணங்கி. சந்திரப் பிறையை பார்க்கக்கூடிய வழக்கத்தை அவர்கள் வைத்திருக்கிறார்கள். அதனாலதான் எந்த விஷேஷத்திலும் நைட் நேரத்துல, சந்திரனோட குளிர்ந்த ஒளியில பண்ணுறாங்க. சூரியனுடைய ஒளியில பண்ண முடியாது ஏன்னா அது பாலைவன தோஷம். கரைட்டா சொல்லிடுறேன் அது தேசம் என்பதை விட தோஷம் என்று தான் சொல்லனும்.

கிறிஸ்டியன்ஸா பார்த்துக்கிட்டிங்கனா, மெழுகுவர்த்தியை ஏற்றி அவர்கள் வணங்குகிறார்கள். அங்கேயும் வெளிச்சம் தான். வெளிச்சம் என்பது வாழ்வியலில் ஒரு முக்கியமான விஷயமாக இருக்கிறது. அதனால தான் ஒரு விஷயம் புரியணும். அது உனக்கே வெளிச்சம். அது கடவுளுக்கே வெளிச்சம். என்று சொல்லுகிறோம்.

எனவே, காலையில் ஆரம்பித்து, மாலை வரை இரவு வரை, நம்முடைய அன்றாட பழக்கவழக்கங்கள் அனைத்திலும், அறிவியல் பூர்வமான உணவுர்களை கடந்து. எண்ணங்களை செம்மைப்படுத்தி, வாழ்வியல் நெறிகள் நன்றாக அமைய வேண்டும். என்பதற்கு தகுந்த மாதிரி, தான், எல்லா விஷயங்களையும் வச்சிருக்கிறோம். கதவை திறந்து வை, சாயங்காலங்களில் மூடி வைக்காதே, என்ன காத்து வந்து போகட்டும்.

காலையில எழுந்தரித்ததில் இருந்து. இந்த மாதிரி பர்ஸ்ட் ஒர்க் என்ன. வீட்டை க்ளீன் பண்ணு, தெருவுல கோலம் போடு, சூரியன நமஸ்காரம் பண்ணு, சூரியனுடைய வெயில் வந்து உன் மேல் படட்டும். சாயங்காலம் ஆயிடுச்சினா விளக்கை பொருத்தி வை. விளக்கை கும்பிடு. அப்படி எல்லாம் நாம கொண்டு போய் ஒவ்வொரு பழக்கங்களையும், இதே போல் அர்த்தமுள்ள இந்து மதத்திலும், நிறைய போட்டிருப்பாங்க மற்றவர்களும் சொல்லுவாங்க.

சாமியை கும்பிடுவதுடைய முக்கியமான வாழ்வியல் நெறிமுறைகளில் செம்மை படுத்துவதுதான் முறை. அப்படி என்பதை ரொம்ப மேய்னா பண்ணி, சாமியை கும்பிடுவதுவது தான் முக்கியம். மீதி எதுவுமே பண்ணவே தேவையில்லை, அப்படியினு சொல்லாம, வாழ்வியல் நெறிமுறைகள் முக்கியம். சுத்தம் முக்கியம். சுகாதாரம் முக்கியம். அறிவியல் பூர்வமாக உணர்ந்துதான் எந்த ஒரு பழக்கத்தையும், நாம் பின்பற்ற வேண்டும் என்று சொல்லுகின்ற ஒரு மார்க்கமாகத்தான், உயரிய இந்து நெறி இருக்கிறது. என்று சொல்லி விடை பெறுகிறேன்.

நன்றி வணக்கம்

Original Audio posted in WhatsApp Group ‘Science is Hinduism’ on 03 June 2018. 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>