சந்தைப் படுத்துதல். அதாவது Marketing என்பது உயிர் இனங்களில் இயல்பான ஒன்று.
தன்னுடைய இனம் பெருக வேண்டும் என்பதால், விதைகள் பல்வேறு இடங்களில் சென்று விதைபட வேண்டும் என்பதால், அழகிய பூக்களை முதலில் உண்டாக்குகின்றன. நறுமண வாசனை. அதில் சுவை மிகுந்த தேன் துளிகள். தேன் உண்ட வண்டு இடம் மாறி சென்று மகரந்த சேர்க்கை உருவாக்கி தாவரங்கள் பல இடங்களுக்கு பெருகி வளர்கின்றன.
சிறு குழந்தை கூட, அழகிய உடை உடுத்தி, ஆபரணம் சூட்டி, அழகு படுத்திக் கொண்ட அன்னையை, அப்பாவை கவனித்து ரசித்து இறுக அணைத்து அன்பு தெரிவிக்கும் என்பதை பெற்றோர் அறிவார்கள்.
எனவே சந்தைப் படுத்தல் என்ற வியாபார சேவை புனிதமானது. அதற்கு விளம்பரம் துணை போவது.
எனவே விளம்பரங்களை பார்க்க வேண்டும் என்பதால் சில விசயங்களையும் Magazine எனப்படும் வாராந்திர, மாதாந்திர இதழ்களில் சேர்க்கிறார்கள்.
இதன் அடிப்படையில் இந்து கோயில்களில் அன்னதானம், சுவை மிக்க பிரசாதம், நறுமண பூக்கள் வழங்கப் படுகின்றன. சிற்றின்ப அல்லது போர்குணங்களை விட்டு மனித இனம் சந்தோசமாக அமைதியாக வாழ பக்தி முக்கியம். ஆலய வழிபாடு முக்கியம். அங்கே அவர்களை கவர்ந்து இழுக்க, சில மேலோட்டமான நடவடிக்கையாக உன்னத உணவு, மலர்கள் மாலைகள் மரியாதை வழங்கப் படுகின்றன.
இந்த அறிவியலே, இயற்கை அறிவியலே இந்து மதம்.
ஆனால் பாவிகளுக்கும், குற்றவாளிகளுக்கும் சிறப்பு சலுகைகள் உபசரிப்பு இல்லை. எனவே கிருத்துவதில் இஸ்லாத்தில் இந்த சிறப்பு சலுகைகள் இல்லை.
இதனை மூட நம்பிக்கை, இறைவன் முன்னாள் அனைவரும் சமம் என்ற நிலையை மாற்றுகிறது என்று சிலர் சொன்னால், அவர்கள் இந்த இயற்கை தத்துவத்தை உணர்ந்து கொள்ளவில்லை.