நான் பலமுறை சொன்னது போல் பல ஆண்டுகள் நினைவில் இருந்த நாள் முதற்கொண்டே நாத்திகனாக இருந்து எந்த மதத்திலும் பிடிப்பு இல்லாமல், இந்து மதத்திலே மூடநம்பிக்கைகள் மிகவும் இருப்பதாக, கற்பனையாக நினைத்துக் இருந்த கால கட்டத்திலே, இஸ்லாமியத்தைப் பற்றிய பல செய்திகள் வந்தன. அதில் இஸ்லாமியத்தைப் பற்றி அறிய வேண்டுமென்றால், திருக்குர்ரான் வேண்டுமென்றால், இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் என்றார். அங்கு நான் தொடர்பு கொண்ட போது, ஒருவர் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு எனக்குத் தொடர்பு எண்ணைக் கொடுங்கள் என்றார். முதலில் ஒரு புத்தகத்தை அனுப்பி வைக்கிறோம். அதைப் படியுங்கள். படித்த பின் குர்ரான் அனுப்புகிறோம். குர்ரானை எடுத்த உடனே அனுப்ப முடியாது என்றார்கள்.
நான் என்னுடைய விலாசத்தை கொடுத்தேன். எனக்கு ஒரு சின்னப் புத்தகத்தை அனுப்பினார்கள். அதில் இயற்கை மதமென ஒரு புத்தகம் இருந்தது. 1940ல் எழுதியது. அதற்கு முன்னுரை, அணிந்துரை எல்லாம் வைத்து அதை ராஜாஜி, கிருஷ்ணமாச்சாரியார், பெரியார் போன்றவர்கள் முன்னுரை, அணிந்துரை எல்லாம் எழுதியதாக இருந்தது. அதில் இஸ்லாமிய மதம் எப்படி ஒரு இயற்கையான மனித வாழ்விற்குத் தேவையான மதம் என்று இருந்தது. இதில் ராஜாஜி, கிருஷ்ணமாச்சாரியார் எல்லாம் முஸ்லீமுக்கு மாறுவது தான் நல்லது என்று நினைப்பது போல் இருந்தது. யாரோ, பகலவின்னு ஒருத்தர் எழுதியது இப்போது இன்டர்னெட்டில் கிடைக்கிறது.
இதைப் படித்துப் பார்த்தவுடன் என் மனது தெளிவாகி விட்டது. அதை படித்து முடித்த பிறகு, அதே ஆள் எனக்கு தொடர்பு கொண்டார். நான் அனுப்பிய புத்தகத்தை படித்தீர்களா என்று. நான் படித்தேன் என்றேன். நீங்கள் படித்ததிலிருந்து இஸ்லாமியத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள். அதுக்கப்புறம் நான் திருக்குர்ரான் அனுப்பி வைக்கிறேன் என்றார். இல்லங்க இதப் படிச்சுப் பாத்ததுக்கப்புறம் தான் எனக்கு தோணுது. இயற்கை மதம் இந்து மதம்தான். அதிலிருக்கும் எல்லாவற்றையும் போட்டுட்டு, இயற்கை மதம் இஸ்லாம் மதம்னு சொல்றீங்களேன்னு சொன்னேன். பிறகு சில கருத்துக்களையும் கூறினேன். சில கருத்துக்களைக் கூறிய உடனே அவரு எனக்கு குர்ரான் அனுப்பி வைக்கவில்லை. அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை.
அதனால், பிற மத நூல்களை படிக்கும் போது, நம்முடைய மார்க்கத்திலே, போதுமான அறிவிருந்தால், அப்போது தான், நம்மால் ஒப்பிட்டே பார்க்க முடிகிறது. மிகச் சிறப்பாகத் தான் நம்முடைய இந்து மதத்தில் இருக்கிறது. அதனால், நம்முடைய மார்க்கத்ததிலே, நெறிகளிலே அறிவு இல்லாமல் இருக்கும் போது, நான் நாத்திகனாக இருந்தாலும் அறிவு இருந்ததினால், என்னால் ஒப்பிட்டு பார்க்க முடிந்தது. நம்முடைய மார்க்கத்தில் நெறிகளைப் பற்றிய அறிவு இல்லாமல் இருக்கும் போது, மற்ற மத நூல்களைப் படிக்கும் போது, கேட்கும் போது நமக்கு அதில் மட்டும் தான் சொல்லி இருக்கும் என்று தோன்றுகிறது. ஆனால், இதில் போதிய அறிவோடு மதத்தை பற்றிப் பேசும்போது, இதில் எவ்வளவோ நல்லா சொல்லியிருக்கு, எவ்வளவு பிரமாதமா இருக்கு, சாதா தோசையா அவங்க போட்டு குடுக்குறாங்க. நாம் வந்து நெய் மசாலா தோசை போட்டுக் கொடுக்கிறோம் முறுவலாக. அவ்வளவு பிரமாதமாக இருக்கின்றது என்பதெல்லாம் தெரிய வருகிறது.
மதரீதியான கருத்துக்களை நல்லவிதமாகத் தெரிந்து கொண்டு, எல்லா மதத்தைப் பற்றியும் தெரிந்துக் கொள்ளலாம். எனக்கு இந்து மதத்தின் சுப்பீரியாரிட்டி எப்படி தெரிய வந்ததென்றால் ஆச்சரியப்படுவீர்கள். கிறிஸ்துவ மதத்தின் டார்வின்சி கோடு, ஏஞ்சல்ஸ் அண்ட் டெமண்ட்ஸ் என்ற புத்தகத்தைப் படிக்கும் போது தான் தெரிய வந்தது. அது இந்து மதத்தை பற்றிய புத்தகங்கள் அல்ல. அது கிறிஸ்துவ மதத்தைப் பற்றியது. அதில் ரெப்ரன்ஸஸ் இருக்கிறது. அந்த ரெப்ரன்ஸஸில் சொல்கிறார்கள். எப்படி ரோமில் இருக்கும் தேவாலயங்கள் இந்து மதத்தின் பஞ்ச பூதத்தின் தத்துவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என சொல்கிறார்கள்.
அதுபோல், உலகத்திலேயே, மிகப்பெரிய மசூதியாக கருதப்படும் இஸ்தான்பூல் மசூதி, அதற்கு முன்பு அது சர்ச்சாக இருந்தது. அதற்கு முன் ஒரு கோயிலாக இருந்தது. அந்த கோயிலாக இருந்த போது, அதுதான் கான்ஸ்டன்டி நோபிள் டெம்பிள் என்று கூறுவார்கள். நாலாயிரம், ஐயாயிரம் வருடம் பழமையான, தொடர்ந்த மனித வழிபாட்டுத் தலமாக இருக்கக் கூடிய ஒரு கோயில், சர்ச்சு. இப்போது அது மசூதியாக இருக்கிறது. அது எந்தளவுக்கு பிரம்மாண்டமாக இருந்தது. எவ்வளவு கலையம்சங்களோடு இருந்தது என்றால், அடுத்தடுத்து தாக்க முற்பட்ட மன்னர்கள், கிறிஸ்துவ மன்னர்கள் இருந்தபோது, இந்து டெம்பிளாக இருந்தது. முஸ்லீம் மன்னர்கள் இருந்த போது அது கிறிஸ்துவ சர்ச்சாக இருந்தது. அந்த பிரம்மாண்டத்தைப் பார்த்து வியந்து அதில் ஒரு சின்னப் பகுதியை மட்டும் நீக்கிவிட்டு, பெரும்பாலும் அதை அப்படியே விட்டு வைத்து விட்டார்கள். அதனால், இப்பவும் அங்கே போனால் பல மதத்தின் சாயல்களைப் பார்க்க முடிகிறது. அவ்வளவு பிரம்மாண்டம். அருகில் நெருங்கக் கூட முடியவில்லை என்பது அந்த மன்னர்களால் தெரியவந்தது.
சிவம் என்கிற ஒரு ஊர் துருக்கியில் உள்ளது. பிற மதங்களைப் பற்றிய அறிவு எல்லாருக்கும் இல்லையென்றாலும் முக்கியமானவர்களுக்கு உள்ளது. இந்த மாதிரி ஒப்புமை செய்து, சராசரியான ஜனங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். நாம் வெறும் கோயில், திருவிழா, கும்பாபிஷேகம் என்று இருந்திருந்தால், நம் மக்களுக்கு எப்படி புரியும். இந்து மதம் என்றாலே கோயிலுக்குச் செல்வது. கும்பாபிஷேகம் செய்வது, நன்றாக சாப்பிடுவது வயிறு முட்டன்னு நினைச்சிட்டு இருப்பாங்க. அதனால், அறிவியல் பூர்வமான இந்துமதம் என்று சொல்லும் போது, இந்த கருத்துக்களை நான் பரப்புவது போல், மற்றவர்களும் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
வாழ்வியல் நெறிகளிலே இந்து மதம். மனிதர்களுக்கு என்ன வேண்டும். அதை எவ்வளவு அழகாக சொல்லி யிருக்கிறார்கள்.
கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர் கபடுவாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணி இலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும் தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு துன்பமிலாத வாழ்வும்
அபிராமி கோயில் திருக்கடையூரில் கடலை ஒட்டி உள்ளது. அதில் இவர் சொல்கிறார். எவ்வளவு அழகாக, என்னென்ன வேண்டுமென்று சொல்கிறார்கள். அதன் சிறப்பு எந்த புத்தகங்களிலும் இல்லை.
கல்வி, கலையாத கல்வியாக இருக்க வேண்டும். வாழ்நாள் முழுவதும் அந்தக் கல்வி நம்மிடம் இருக்க வேண்டும். வயது குறையக்கூடாது. அந்தளவிற்கு நாம் கிரேட் லுக்கிங்கா ஜம்முன்னு இருக்கணும். நட்பிலே கபடு இருக்கக் கூடாது. கபடு வராத நட்பு நமக்கு அமைய வேண்டும். வளமை குன்ற கூடாது. நல்ல வளமையாக இருக்க வேண்டும். இளமை குன்றக் கூடாது. இளமை நம்மிடமே இருக்க வேண்டும்.
கலிப்பிணி இராத உடல். நல்ல நோய் நொடியில்லாத உடல் இருக்க வேண்டும். மனம் சலிக்கக் கூடாது. சலியாத மனம். மனைவியோட அன்பு நம்மை விட்டுப் போகக் கூடாது. அன்பகலாத மனைவி வேண்டும். சந்தானம், புத்திர பாக்கியம் நம்மை விட்டு தவறக் கூடாது. தவறாத சந்தானம் வேண்டும். தாளாத கீர்த்தி. நம்முடைய புகழ் கீழே இறங்கக் கூடாது.
மாறாத வார்த்தை. நாம் வார்த்தையைக் கொடுத்தோமானால், அந்த வார்த்தை தவறக் கூடாது. தடைகள் வாராத கொடை. நாம் கொடைகள் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். ஐய்யோ நம்மிடம் பணமில்லையே, உதவ வேண்டும் என்று நினைக்கின்றோமே நம்மால் கொடுக்க முடியவில்லையே என் நினைக்கக் கூடாது. தொலையாத நிதியம், நம்மிடம் இருக்கும் நிதி தொலையக்கூடாது. துன்பமில்லாத வாழ்வும், எந்த விதமான துன்பமும் இருக்கக் கூடாது. கோணாத கோளும். என்ன, ராஜா ஒருத்தன் தான் செங்கோல் வைத்திருப்பானா? ஒவ்வொருத்தனும் வைத்திருப்பான். செங்கோல் என்பது நாம் பிடித்திருந்தால், நீதி நேர்மை தவறாமல் இருக்க வேண்டும்.
எவ்வளவு அழகாகக் கேட்கிறார்கள் பாருங்க. ஒரு கடவுளிடம் நமக்கு என்ன வேண்டும். வாழ்வியல் நெறிமுறைகளை. இதுபோல், எங்கேயாவது, எந்தப் பாடல்களிலாவது சொல்லப்பட்டிருக்கா? அப்படி என்று பார்த்தால் எனக்குத் தெரிந்து வாய்ப்பில்லை. சாமியைக் கும்பிடு ஜெபம் பண்ணு என்பது போல் இருக்கும். அதனால், மனிதன் என்பவன் தன்னுடைய தேவைகளை தெளிவாக வரையறுத்து, அது என்ன வேண்டுமென்று கடவுளிடம் கேட்டு, அதற்கு என்ன வேண்டும் என்று சொல்லக்கூடிய ஒரே மதம் அறிவியல் பூர்வமான நம்முடைய இந்து தர்மம் என்று கூறி விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்.
Original Audio posted in WhatsApp Group ‘Science is Hinduism’ on 19 May 2018.