இன்னிக்கு அட்வான்சா டெக்னிக்ல போய்ப் பார்க்கலாம், பார்டிகல் சயின்ஸ் அப்படின்னு ஒண்ணு இருக்குது. அணுவியல். அணு. அதில் நியூட்ரான், எலெட்ரான், ப்ரோட்டான் உள்ளது. உயிர் உள்ள விலங்குகள் தாவரங்கள் செல்களால் ஆனவை. செல் சிறியதாக இருக்கும். அதைப் பார்ப்பது கடினம் மைக்ரோ ஸ்கோப்பில் தான் பார்க்க முடியும். அணுவைப் பிளந்தால் ஏராளமான சக்திகள். அந்த அணுவைப் பற்றி குறிப்பு இந்துமதத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த பார்ட்டிகல் சயின்ஸ், நுண் துகள் அறிவியல். அணு செல் முதலிய எல்லாம், காண கூடியது, காண முடியாதது எல்லாம் நுண் துகள்களால் ஆனவை. உதாரணம் எண்ணங்கள். எண்ணங்களை எவ்வளவு நுட்பமான மைகிறோஸ்கோப் மூலமும் காண இயலாது. அவை நுண் துகள்களால் ஆனவை. அதிர்வுகளை கொண்டவை. நம் கண்முன்னாடி பார்க்கக்கூடிய, பார்க்கமுடியாத எல்லாம் பார்டிகல் சயின்ஸ் ஆகிறது. அந்த பார்டிகல் ஒண்ணோடு ஒன்று வைப்ரேஷன்ல இருக்கு. இதை இந்து தத்துவம் என்று சொல்லவேண்டாம்.மேலை நாட்டு தத்துவம் என்று வச்சிக்குவோமே. இந்து தத்துவம் என்பதை விளக்க மறைமுகமாக விநாயகர் கதை சொன்னேன்.
இந்து தத்துவத்தில் வெளிப்படையாகவும் சொல்வதுண்டு, கடவுள் மேல எண்ணங்களை உருவாக்குறோம், மூட நம்பிக்கை என்பது எல்லா மதத்திலும் இருக்கு. முஸ்லீம் மதத்தில் மூன்று லெட்டர் 786 என்பது எந்த விதமான அறிவியல் இருக்கும் என்று நம்புகிறீர்கள்? அதே போல் கிறிஸ்துவத்திலும் பைபிளில் உள்ள வசனம் எடுத்து பயன்படுத்தப்படுகிறது. இதை மூட நம்பிக்கை என்று சொல்லமாட்டேன். இந்த வைப்ரேஷன் என்று சொல்லக் கூடிய பார்டிகல் சயின்ஸ் ஆனது, கண்ணுக்கு தெரியாது என்பதை விட நுணுக்கமாகப் போய், நல்ல எண்ணங்களை மனதுக்குள் ஊடுருவதினால அந்த கண்டிசன்களில் எந்த ஒரு பொருளுக்கும் வடிவம் இல்லாமல் போய் விடுகிறது. எண்ணங்கள் எல்லாம் பார்டிக்கல்சாக மாறி முழுமையாக வைப்ரேட் பண்ணிக்கிட்டிருக்கும் போது, கூட இருப்பதும் மாறுகிறது. அதனால் தான் ரொம்பவும் சுத்தமும், சுகாதாரமும் உள்ள இடத்தில வந்து முழுமயா க சுத்தம் செய்து கொள்ள முடியாமல் போவது சங்கடத்தை ஏற்படுத்துகிறது. அதே போல் லோ கிளாசில் அமர்ந்து விசில் அடித்து கொண்டு சினிமா பார்த்தவர்கள், ஹைக் கிளாசில் அமர்ந்து படம் பார்க்கும் போது அப்படியே மாறிவிடுகிறார்கள்.
அதற்குக் காரணம் சுற்றி இருக்கக்கூடிய வைப்ரேஷன் மற்றவர்களை மாற்றுகிறது. அது எல்லா இடங்களிலும் தான், புனிதமான தேவாலயத்தில் அனைவரும் பிரேயர் பண்ணிக்கிட்டு இருக்கும் போது, சர்ச்சுக்கு போகாதவன் போனால் கூட அமைதியாக அழகாக நடைபெறும் பிரேயரை பார்க்கும் போது நம்மளும் அதில் அமைதியாக கலந்துகொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.
அதே போல் மசூதியில் இருந்து அனைவரும் பிராத்தனை செய்து விட்டு வரும் போது அவர்களுக்கு நாம் வழி விடுகிறோம் அது எல்லாமே வைப்ரேஷன் எண்ணங்களை சரியாக புரிந்து கொண்டு நம்முடைய தத்துவங்களிலே நமது ஆலயங்களிலே, ஆலய வழிபாட்டு முறைகளிலே, கூட்டு வழிபாட்டு முறைகளிலே, தனியாக தெய்வத்தை சந்திக்கக்கூடிய ஏகாந்த தரிசனம் என்று சொல்லுவார்கள் அந்த முறைகளிலே, முழுவதும் உட்படுத்தி நல்ல செயல்களுக்கு வழிவகை செய்வது உயரிய ஹிந்து தர்மமாம் இந்திய தர்மம். நிறைய சொல்லிகிட்டே போகலாம், இது வந்து ரிலீஜியன் சப்ஜெட்டில் இருந்து அறிவியல் சப்ஜெட்டாக மாறும்.
அதனால் நேரம் சரியில்ல. அந்த நேரத்தை பார்ப்பதிலே ஹிந்துக்கள் அதிகம் பார்க்கிறார்கள் என்று சொல்லுவார்கள். ஒரு நாளைக்கு ஒண்ணரை மணி நேரம் ராகுகாலம் என்று பிரித்து வைத்துக் கொள்வோம். அதை ஏன் பிரித்து வைத்துக் கொள்ளப்படுகிறது என்பது இன்னொரு இடத்தில சொல்லுகிறேன். அதுக்கு அப்புறம் இரண்டு நாட்களில் அஷ்டமி, நவமி, என்று நாட்களை சொல்கிறோம். சில மாதங்களை குறிப்பிடுகிறோம், வாரங்களைக் குறிப்பிடுகிறோம், அந்த இடத்தில சில செயல்களை செய்யாதே, என்று. சில காரியங்களை செய்யும் போது இந்த காலகட்டம் சரியாக இல்லை என்று வரும்போது, என்ன செய்வது? இந்த வேலையை செய்தே ஆக வேண்டும் என்ற சூழ்நிலை வரும்போது, இந்த சூழ்நிலை சாதாரண மனிதர்களுக்கு மட்டும் வருவதில்லை திருநாவுக்கரசருக்கும், திருஞானசம்பந்தருக்கும், வந்தது.
அப்ப வந்து சொல்கிறாங்க ஆமாம் நாளும் கிழமையும் சரியில்லைதான் ஆனால் அதை சரி செய்து கொள்ளலாம். எப்படி சரி செய்துகொள்ளலாம்?
கோளறு பதிகம்.
நீண்ட தோள்களை உடைய விஷத்தை உண்ட சிவபெருமானை நினைத்து, அவன் குற்றம் இல்லாத சந்திரனையும், கங்கையையும் தலையில் வைத்து உள்ளான் அவனை துதித்தால், ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ஆகிய நாட்களில் எந்த ஒரு துன்பமும் வராது. என்ற பாடல், இந்த பாடலை முழுமையாக பாடிகிட்டு போனால் எந்த ஒரு தடங்கலும் வராது.
இது அறிவியல் பூர்வமா தத்துவம் என்றால் நான் கூறிய ஆர்ட்டிபிசியல் சயின்ஸ் இந்த வில் பவர் உடன் நாம் செல்லும் போது எந்த ஒரு தடங்கலும் வராது. அதாவது அறிவியல் பூர்வமான கருத்துக்களை இன்று மேலை நாடுகள் ஆய்வு செய்து சொல்லுவதை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உள்ளே வைத்து தத்துவங்களை மக்களிடம் எளிதான நடைமுறைகளை உருவாக்கியது அறிவியல் பூர்வமான தத்துவங்களை சொல்வது இந்து மதம்
Original Audio posted in WhatsApp Group ‘Science is Hinduism’ on 25 May 2018.