திறமையின் தாக்கம் மற்றவர்களால் அடைய இயலாதது. அறிவாளியின் குறிக்கோள் மற்றவர்களால் அறிய இயலாதது.
ஒரு வாக்கியத்தை தாய் மொழியில் சொல்லும் போது முழுதும் புரிகிறது. பிற மொழியில் சொல்லும் போது, கொஞ்சம் புரியும், கொஞ்சம் குழம்பும்.
எனவே முன்னேறிய நாடுகள் எல்லாவற்றிலும் பொறியியல், மருத்துவம், சட்டம், முதலியவற்றை தாய் மொழியில் மட்டுமே படிக்கின்றனர்.
இங்கோ, தாய் மொழியை தனியாக ஒரு பாடமாக படித்து, அறிவியலை பிற மொழியில் படிக்க முயற்சி செய்து, ரெண்டும் கெட்டானாக இருக்கின்றனர்.