எந்த ஒரு மதத்திலேயும் இந்த சாஸ்த்திரம், சம்பிரதாயமெல்லாம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் ஈடுபாடு இல்லாமல் இருக்கும் போது, பகுத்தறிவாளர்கள் என்று தங்களை நினைத்துக் கொள்ளும் முன், இதை மூடநம்பிக்கைன்னு சொல்றாங்க. எந்த மதத்திலே அவர்கள் சடங்குகள் பார்க்கிறார்களோ, அந்த மதத்தில் அது அதிகமாக இருப்பதாக நினைக்கிறார்கள். அதனாலே இந்தியாவிலே, இந்து மதத்திலே பார்ப்பதினாலே, இந்து மதத்திலே மூடநம்பிக்கைகள் அதிகமாக உள்ளது என்று நினைக்கிறார்கள்.
In any religion, the rituals, habits and protocols exists. The people who are not interested and consider themselves rationalists and or atheists call it irrational. Such rationalists and atheists, if associated with one religion, think, that religion is more primitive without scientific basis. So, in India, the Indian rationalists and atheist think, the Hinduism is full of irrational habits.
இதில் பகுத்தறிவுப் பகலவன் என்று தன்னைக் கருதிக் கொள்பவர்கள், இஸ்லாமியர்கள். அங்கே அவர்கள் பலவாறு சொல்வார்கள். அதையே தான் அவர்கள் எங்கிருந்தாலும் சொல்வார்கள். ஆனால், இங்கிருந்து கொண்டு இந்து மதத்தில் தான் அதிகம் என்பார்கள். எதற்கு இந்த சாஸ்த்திரம், சம்பிரதாயம் எல்லாம் எல்லா மதத்திலேயும் வைத்திருக்கிறார்கள்? இந்து மதத்தினை விட்டுவிடுவோமே.
The bright rationalist who associate themselves as if Light of the Sun, the Islamists, and other religious people consider, Hinduism is full of irrational superstitions. But such outwardly irrational habits are there in all parts of the world. Why target Hinduism only?
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்கிறார். அந்த நிகழ்ச்சியை நான் கவனிக்கிறேன். ஒருமணி நேரம் நிகழ்ச்சியில் ஏறத்தாழ 50 நிமிடம் பார்த்தீர்களானால், ஒவ்வொரு குருப் கிறிஸ்டியன்ஸ் ப்ரேயர் பண்றாங்க. ஸ்கூல் பொண்ணுங்க ப்ரேயர் பண்றாங்க. சர்ச் சம்பந்தப் பட்டவர்கள் ஆசிர்வாதம் பண்றாங்க. இவருக்கு பதவியேற்பு என்பது ஒரு ஐந்து நிமிடத்தில் முடிந்து விடுகிறது. அதேபோல், இங்கு நடந்திருந்தால், இது மதச்சார்பு இல்லாத நாடு என்று ஒரு புரட்சிக் கொடியே தூக்கி இருப்பாங்க. இது மதச்சார்பில்லாத நாடுன்னா, அதுவும் மதச்சார்பில்லாத நாடுதான். ஆனால், ஒரு முக்கியமான நிகழ்வு நடக்கவேண்டும் எனும் போது, ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்க வேண்டியதாயிருக்கிறது. அப்போது தான் அது நிகழ்வாக இருக்கிறது.
Donald Trump became President of USA. I was watching the installation ceremony. In that one hour program, almost 50 minutes were spent in religious prayers. The 3 major groups of Christianity, the school children chorus, blessings by church related people. The actual ceremony of accepting the office and declaration was hardly 5 minutes. If the same thing happened here in India, people will cry, it is secular country and flags of revolutions could have raised. If India is secular republic, USA also. When we need some ceremony, it needs to adhere to some protocol and some duration. Then only it is a ceremony.
என் நண்பர் ஒருவர் ஒரு ப்ராபர்டி வாங்கினார். அவரு ப்ராபர்டி ரிஜிஸ்ட்ரேஷன் முடிந்த உடனே நல்ல ஓட்டல்ல, விஜிடேரியன் மீல்ஸ் சாப்பிட்டேன். முதலில் ஒரு சூப், பிறகு ஸ்டார்டர்ஸ், பிறகு சாப்பாடு ரெண்டு, முணு ஸ்வீட்டுன்னு எல்லாமே ஒண்ணு, ஒண்ணா வந்துச்சு. அந்த டிரைவரைக் கூப்பிட்டு உட்கார வைத்து நட்பு ரீதியாக சாப்பிட வைத்தோம். அப்போது, அவர் எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம்னு ஆரம்பிச்சாரு. சரி, கேளுப்பான்னு சொன்னோம். ஒரு சோறு, ஒரு குழம்பு வெச்சி சாப்பிட்டுப் போக வேண்டியது தானே. எதுக்கு மாறி, மாறி இந்த ஆர்டர்ல தான் சாப்பிடனுமா? இதற்கெல்லாம் பணம் செலவு இல்லையான்னு சொன்னாரு.
My friend purchased a property. Once registration done, he gave a vegetarian treat (He was a Muslim). First a soup, then some starters, then food variety and then some desert, all came one by one. His driver was also part of the group as a friendly gesture he too was invited to be part. The driver started a conversation. “I have a doubt. Why people not eat just some rice and gravy? Why they eat in so many variety? Is this not waste of money? Why should we eat in this order only?”
உட்கார்ந்து அறுசுவை உணவை உண்டு கொண்டிருக்கும் ஆறு பேருக்கும் ஒரு தர்ம சங்கடமாக இருந்தது. நான் சொன்னேன், சரி உன் கேள்விக்கு நான் பதில் சொல்றேன்னு சொன்னேன். நாகரிகம் என்பது எல்லாமே எல்லாவற்றையும் ரொம்ப சரியாக செய்யக் கூடியது. ‘நீ ஒரு முட்டாள். நீ செய்வது சரியில்லை!’ என்று சொல்வது ஒரு சுடுசொல். ‘நீங்க சொல்றது செய்யறதுல ஒரு தவறு இருக்குன்னு நினைக்கிறேன். நீங்க எதையும் யோசித்துப் பாருங்க. இதை வேறு முறையில் கூட செய்யலாமென்று நினைக்கிறேன்!’ என்று சொல்வது நாகரிகம். அப்படியென்று சுற்றி வளைத்துச் சொல்வது நாகரிகம்.
We the six including him, felt awkward. They found it difficult to answer him. I said, “I will answer your question”. I calmed others. You see, culture or decency is nothing but telling politely in a detailed and deviating way. “You are idiot, what you do is wrong!” is a harsh sentence. “We think, there is a mistake in your words. Please think. There may be a better way of doing things!” is decency and culture. So not telling directly but in a deviating way with proper protocol is culture.
அதேபோல் சாப்பிடுவது, ஜஸ்ட் ஒரு தட்ல சாப்பாட்ட போட்டு கொழம்பு ஊற்றி சாப்பிடுவது, ரசம் ஊற்றி சாப்பிடுவது, பின்பு அடுத்த வேலைக்குப் பார்ப்பது என்பது ஒரு சாதாரண நிகழ்வு. நாகரிகம் என்பது இதுபோல ஒரு டேபிளில் உட்கார்ந்து, முதலில், இதை சாப்பிட்டு விட்டு, பிறகு அடுத்தடுத்து என்ன சாப்பிட வேண்டுமோ, அதை சாப்பிட்றோம். நாகரிகத்தின் வெளிப்பாடு தான் அது. ஒரு கோமணமோ துண்டோ கட்டிட்டு கூட நாம கவலப்படாம இருக்கலாம். ஆனால், நாகரிகம் என்பது உள்ளாடை, மேலாடை, அதற்கு மேல் ஒரு ஆடை, ஒரு சாக்ஸ், ஒரு ஷூ எல்லாத்தையும் போடணும். சில குளிர்பகுதியான பிரதேசங்களில் அது ஒரு கட்டாயமாகவும் இருக்கும். இல்லன்னா, உடம்ப காப்பத்திக்கவே முடியாது. எனவே, நாகரிகத்தின் வெளிப்பாடு தான், சடங்குகள், சாஸ்த்திரங்கள், சம்பரதாயங்களே ஒழிய, மூடநம்பிக்கையின் வெளிப்பாடு அல்ல. அறிவியலின் வெளிப்பாடு தான் இவை.
Same way eating. Just take a plate, keep rice, dal, eat and finish and do next work is ordinary day to day incident. Booking a table, order food and eat in proper order and protocol is decency and culture and elevation of status of mankind. We can cover our body with a loin cloth or towel. Why having inner wears, socks, shoes? In cold countries in winter time, it is a necessity too. We can not protect our body otherwise. So, it is expression of culture to have proper clothing and dress sense. So, the protocols and habits are enforcing culture, not expression of superstitions. These are very much science too.
எனவே, எந்த ஒரு சமுதாயம் அதில் உச்சகட்டமாக முன்னேறி யிருக்கிறதோ, அங்கே இன்னும் ஜாஸ்தியாக இருக்கிறது. லண்டன்ல போய் உங்க பேலஸ்ல, அரசியாரோட சேர்ந்து, உணவு அருந்தக்கூடிய ஒரு வாய்ப்பு இருக்கும்னு வெச்சிக்குவோம். டப்பு, டப்புன்னு வந்துடுவோம். டைனிங் டேபில்ல உங்கள உட்கார வைத்து, சோத்த போட்டுட்டு விரட்டி விட்டுடுவாங்களா? இல்லன்னா? அந்தம்மா, பக்கத்துல உட்கார்ந்து அவசர அவசரமா சாப்பிட்டு விட்டு போவாங்களா? அதுக்குன்னு ஒரு புரோட்டக்கால் இருக்கணும். இங்கே வரணும். இந்த டிரஸ்ல தான் வரணும். இந்த சைடுல தான் உட்காரணும். இதத்தான் பர்ஸ்ட் சாப்பிடணும். இத, செகண்டா சாப்பிடனும். அவங்க சாப்பிட ஆரம்பிச்சதுக்கப்புறம் சாப்பிடணும். எல்லாமே இருக்கும். எல்லாத்தையும் சொல்லிக் குடுப்பாங்க உங்களுக்கு இப்படித்தான் சாப்பிட வேண்டும் என்று. அப்படின்னா, நமக்கென்ன, சாப்பிடத் தெரியாதா?
A society that is much more advanced, has much more protocols than others. Lets see, if we get an opportunity go London and partake in a feast hosted by the Queen. Will they make you just sit, keep food at you, make you eat and send away? Or you will sit with the queen, finish your food quick and just come out? No. There will be protocol. The dress code. The order of eating food first, second, and to eat only after the main host started eating. Everything will be taught. It is not that, we don’t know how to eat.
நாகரிகம். நாகரிகத்தின் வெளிப்பாடுகள் தான். சாஸ்த்திரங்கள், சம்பிரதாயங்கள், சடங்குகள். ஒவ்வொரு சாஸ்த்திரம், சம்பிரதாயம், சடங்குகளை நீங்கள் ஆராய்ந்து பார்க்கும் போது, அதில் ஒவ்வொன்றிலும் அறிவியல் வெளிப்படும். அது பெண்கள் பூப்படையும் போது, இருக்கக்கூடிய சடங்குகளாக இருக்கலாம். திருமணத்திற்கு முன்னாடி, இருக்கக்கூடிய சடங்குகளாக இருக்கலாம். திருமணத்திற்கு பின்னாடி இருக்கக் கூடிய சடங்குகளாக இருக்கலாம். குழந்தைப் பேறாக இருக்கலாம். எதுக்குமே, சடங்குகள், சம்பிரதாயங்கள், சாஸ்த்திரங்கள் இருப்பதை நீங்கள் ஆராய்ச்சி செய்து பார்த்தால், எல்லாவற்றிலும் அறிவியல் இருக்கும். நம்ம மதத்தில் மட்டுமில்லை. எல்லா மதத்திலும் இருக்கும். நம்ம மதத்தில் கொஞ்சம் அதிகமாக இருக்கும்னு சொன்னோம்னா, நாம் கொஞ்சம் அதிகம் முன்னேறியவர்கள், அதிகம் பழமையானவர்கள், அதிகம் புதுமையானவர்கள், அதிகம் அறிவியலை பயன்படுத்தி வருபவர்கள் என்று சொல்ல வேண்டுமே தவிர, இங்கே மூடநம்பிக்கை அதிகம், காரணமே இல்லாம செய்வாங்கன்னு நம்மள நாமே அசிங்கப்படுத்திக் கொள்ளக் கூடாது.
So, rituals and sastras and some habits and protocols are expression of culture. When you study deeply, you will find the science in it. It may be rituals when females get puberty. Before wedding, after wedding. Child birth, before and after. Everything will have science. Not only in Hindu religion, in every other religion too. In Hindu religion it is much more because, it is much older than other religions. We are more advanced than others. We are older than others and newer than others. We are more scientific than others. We should not ridicule ourselves as if doing things without any reasonings.
அறிவியலே இந்து மதம். இங்கு இருக்கக்கூடிய ஒவ்வொரு சடங்கும், சாஸ்த்திரமும், சம்பிரதாயமும் அறிவியல் பூர்வமானது. அதை அறிந்து உணர்ந்து செயல்படுங்கள். அறியாமல் கூட செயல்படுங்கள். ஆனால், மூடநம்பிக்கை என்று முத்திரை குத்தி, தனக்குத் தானே செருப்பால் அடிக்காதீர்கள். நன்றி, வணக்கம்.
Science is Hinduism. Every ritual here is based on science. Understand and be aware. If not, Ok. Dont ridicule ourselves and beat ourselves with our own footwear. Thank you. Salutes.
Original Audio posted in WhatsApp Group ‘Science is Hinduism’ on 09 June 2018.