கோவில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் என்று சொல்வார்கள். அது ஏன்? ஒரு கோயில் அப்படின்றது ஒரு ஊர்ல ரொம்ப உயரமான கட்டிடமாக இருக்கும். கோபுரங்கள் இருக்கும். கோபுரத்துக்கு மேல கலசங்கள் இருக்கும். அந்தக் கலசங்கள்ள வந்து தாமிரம், செம்பு கலந்த பட்டயங்கள் வழியா, எர்த்துல போயி, பூமியில புதைக்கப்பட்டிருக்கும். அது ஒரு இடிதாங்கி. அதனால என்னாகும்? அந்த ஊர்ல இருக்குற எந்தக் கட்டிடமும் கோயில் கோபுரத்துக்கு மேல உயரமா அமைக்கக் கூடாதுங்கறது விதியா இருக்கும். மின்னல், இடி தாக்கும் போது, அந்த ஊர் காப்பாற்றப்படும். பக்கத்துல இருக்குற எந்த பில்டிங் மேலேயும் மின்னல் தாக்காது. இந்த கோயிலின் கோபுரமானது அதைத் தாங்கிக்கும். அதனால பயமில்லாம ஜனங்க குடியிருக்கலாம்.
தவிர, புயல், மழைக் காலங்களில் கோயிலில் போய்த் தஞ்ச மடையலாம். அங்க எல்லா வசதிகளும் இருக்கும். சாப்பாடு கிடைக்கும். நோய் நொடியுற்ற காலங்கல்ல வந்து பிரசாதத்தோட சேர்ந்து, சில தீர்த்தங்கள குடுக்கறாங்க. அந்த தீர்த்தங்கள் எல்லாம் பெரும்பாலும், நோயுற்ற காலங்களில், நோய்களுக்கு மருந்தா கொடுக்கப்படுது. அதனால தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கப்படும்.
அதனால கோயில்கள் என்பது ஒரு கம்யூனிட்டி சென்டரா இருக்கு. கம்யூனிட்டி சென்டர் இல்லன்னா பாதுகாப்பது கஷ்டம். அப்படின்றதுனால, கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொன்னாங்க.