பௌத்த விக்ரகங்கள், ஜெயின் கோயில்கள் எல்லாம், இந்துக் கோயில்களின் அடிப்படையில் இருக்கும். யூதர்களுடையது சர்ச் மாதிரி இருக்கும். வழிப்பாட்டுத் தலங்கள் என்பது இந்த உலகம் முழுவதும் நிரம்பி உள்ளன. கல்வி நிலையங்களும், மருத்துவ மனைகளும் கோயிலுக்கு இணையானவை தாம்.
இந்து முறைப் படியான கோயில்கள், இஸ்லாமிய முறைப் படியான மசூதிகள், கிறித்துவ முறைப்படியான சர்ச்சுகள் எல்லாம் அதில் அடங்கி யிருக்கும். இந்த சர்ச்சுகளும், மசூதிகளும் மக்கள் அதிகம் இருக்கக் கூடிய இடங்களில், மக்கள் ஒன்று சேர்ந்து, தங்களுக்கு வழிபாட்டு இடங்களை உருவாக்கிக் கொள்வதற்காக, கட்டிக் கொள்வார்கள். சர்ச் என்றாலே ஒரு சபையை நிர்ணயிக்கிறார்கள். அந்த சபையில் மெம்பராகி விடுகிறார்கள். அந்த சபைக்கு கான்ட்டிரிபியூஷன் கொடுக்கிறார்கள். அந்த சபையில போய் ப்ரேயர் பண்றாங்க. அந்த சபையில போய் தொண்டு செய்றாங்க. அது ஒரு நல்ல விஷயம் தான்.
அதேபோல், முஸ்லீம்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிறைய வரும்போது, அனைவரும் ஒன்று சேர்ந்து சின்னதாகவோ அல்லது பெரியதாகவோ ஒரு மசூதியைக் கட்டிக் கொள்வார்கள். ஏனென்றால் அவர்களுக்கு வாரம் ஒரு முறை கூட்டு வழிபாடு அவசியம்.
இந்துக்கள் ஆலயங்களை எப்படி நிர்மாணிக்கிறார்கள் என்று பார்த்தீர்களானால், கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று முதலில் ஆலயத்தைக் கட்டிவிட்டு, அதைச்சுற்றி தங்களுடைய ஊரினையோ, நகரினையோ வைத்துக் கொள்வார்கள். ரொம்பப் பெரிய நகரித்தில் எல்லாம், நகரத்தின் மையப்பகுதியில் கோயில் இருக்கும். கோவிலச் சுற்றித்தான் எல்லாமே இருக்கும். அவசரத்துக்கு சின்னச் சின்னதா, மரத்திலேயோ அல்லது சின்னச் சின்ன கல்லிலோ கூட சாமியாக வைத்துக் கொள்ளலாம். அவசரத்திற்கு சாமி கும்பிட்டுப் போயிக்கலாம்.
இதைத் தவிர எங்கெல்லாம், இந்துக்களோட வழிப்பாட்டு முறைகள் இருக்கு என்று பார்த்தோமானால், அடர்ந்த காடுகளில், மனிதன் போகமுடியாத மலை உச்சிகளில், காட்டு மிருகங்கள் நடமாடக்கூடிய குகைப்பகுதிகளில், ஒரு நீர் வீழ்ச்சி இருக்குமென்றால், ஆரம்பம் எங்கிருக்கோ, அங்கே தேடிப்போய், அங்கே சில இடங்களில் இருக்கக்கூடிய, மிகப் பெரிய கோயில்களைப் பார்க்கும் போது, வியப்பு ஏற்படும்.
சுற்றுவட்டாரத்தில் ஆள் நடமாட்டமே இல்லை. 200 கிலோமீட்டர், 300 கிலோமீட்டர், 500 கிலோமீட்டருக்கு உள்ளே இவ்வளவு பெரிய கோவில், இவ்வளவு பெரிய மண்டபம் இருக்கின்றது. அங்கே ஒரு வயதானவர் கதவைத் திறந்து, ஒரு பூஜையைப் பண்ணிட்டுப் போறாரு. அவ்வளவு அடர்ந்த காடுகளிலே, குகைப் பகுதிகளிலே, மலைச் சிகரங்களிலே, பள்ளத் தாக்குகளிலே, மனிதன் சாதாரணமாக நடமாட முடியாத இடங்களில் எல்லாம் ஆலயத்தைக் கட்டி வைத்திருப்பார்கள் இந்துக்கள். அதைப் பற்றி ஆச்சரியப் படுவார்கள். அதில் புனித யாத்திரையை மேற்கொள்வார்கள்.
கைலாச யாத்திரை, அமர்நாத் யாத்திரை, வைஷ்ணவி தேவி கோவில் மாதிரி, சபரிமலை யாத்திரை மாதிரி. ஏன் அப்படி? ஏனென்றால், நான் ஏற்கனவே சொன்னது போல, இந்து ஆலயங்கள் அறிவியலை அடிப்படையாக வைத்து, மக்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டன. இளைஞர்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டன. தாவரங்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டன. சகல மக்கள், இந்துக்கள் என்பது கிடையாது. காட்டு வாசிகளை, குகை வாசிகளை, முன்னேறாதவர்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டன.
அதனால, ஏதோ ஒரு காரணத்துக்காக, மலைகளிலோ, அடர்ந்த காடுகளிலோ, கொடிய மிருகங்கள் வசிக்கக்கூடிய பகுதிகளிலோ, இவர்கள் தனித்து விடப்படும்போது, யாராவது, கண்ணுக்கெட்டிய தூரத்தில் எதுவுமே இல்லை. ஆனால் ஒரு வெளிச்சம் தெரிந்தது. போய் பார்த்தால் ஒரு கோயில். அங்கே போய் நாங்க நைட்டு தங்கியிருந்தோம் பத்திரமாக. வெளியே எல்லாம் யானை, சிறுத்தை, சிங்கம், புலியோட சத்தம் கேட்டது. ஆனால், காலையில் வெளிச்சம் வந்ததுக்கப்புறம் வந்தாங்க. அங்கேயும், மழை பெய்யும், இடி இடிக்கும், மின்னல் வெட்டும். அங்கேயும், இந்த ஆலயமானது இந்த மின்னலை உள்வாங்கிக் கொண்டு, மழையிலிருந்து, இடியிலிருந்து மக்களையும், விலங்குகளையும் கூட பாதுகாத்துக் கொண்டிருக்கும்.
அதுபோன்ற கோவில்களில் விலங்குகளின் சிற்பங்கள் வரையப்பட்டிருக்கும், செதுக்கப்பட்டிருக்கும். விலங்குகளுக்கும் அறிவு இருக்கும். இது ஏதோ நாம சம்மந்தப்பட்ட விஷயம். உள்ள போய் தேவையில்லாம அட்டாக் பண்ணக் கூடாதுன்னு, அது பாட்டுக்கு வெளியே நின்னுக்கிட்டு இருக்கும். மனிதன் உள்ளே போய் விட்டானே என்று.
எதிரிகளான, ரெண்டு நாட்டு படைவீரர்கள் மோதிக்கொள்வார்கள். கடைசியாக குத்துயிரும், கொலை உயிருமாக இருப்பார்கள். அங்கே போய் தங்கி ஓய்வெடுக்க வேண்டியது வரும். உள்ளே சண்டை போட்டுக் கொள்ள மாட்டார்கள். அதுதான் உயரிய இந்து தர்மம்.
ஓ, நாம அவன் மேல வெளியே சண்டைப் போட்டு விட்டோம். அவன்மீது வேலைப் பாய்த்து விட்டோம். குத்துயிரும் கொலை உயிருமாக இருக்கிறான். கோவில் மண்டபத்தில் அவனைப் படுக்கவைத்து, அவனுக்கு மருத்துவம் பண்ணிக்கிட்டு இருக்காங்க. அந்தப் பக்கத்தில் நம்முடைய வீரர்கள் செல்ல மாட்டார்கள். இந்தப் பக்கம் வந்து விடுங்கள். தேவைப்பட்டால், அவர்களுக்குக் குடிக்கத் தண்ணீர் ஏதாவது கொடுங்கள். எந்த நாட்டிலே பார்க்க முடியும் நீங்கள் இதை? கோயிலுக்கு உள்ளே எதிரிகளான பரம எதிரிகளை பார்த்தால் கூட, பார்க்காமல், தண்ணீர் கொடுத்து, பாதுகாக்கக்கூடிய உயரிய நாகரிகம் எங்கே? ஆலயங்களையே தாக்கக்கூடிய நாகரிகம் எங்கே?
எனவே, இந்து தர்மத்திலே, ஆலய வழிபாட்டு முறைகளிலே, ஆலயங்களைக் கட்டி வைப்பதிலே, வழிபாட்டுக் கூடங்களிலே, எல்லாவற்றிலுமே, சமூக நீதிக்கான, சமூகப் பாதுகாப்பிற்கான, அனைவருக்குமான, இந்துக்களுக்கு, இந்த சாமி கும்பிடுவதற்குத் தடங்கலே கிடையாது.
எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க வேண்டும் என்பது தவிர வேறொன்றும் வேண்டேன் பராபரமே. எல்லாருக்கும் பாதுகாப்பு தரவேண்டும் என்ற அமைப்பில் கட்டமைக்கப்பட்டு, காலங் காலமாக, சில கோயில்களை எல்லாம் பாத்தீர்களானால், ஆயிரம் வருஷம் இரண்டாயிரம் வருஷமா இருந்து வந்தன. நன்றி, வணக்கம்.
Original Audio posted in WhatsApp Group ‘Science is Hinduism’ on 17 June 2018.