ஜகத்காஸ்பர் என்று ஒரு கிறிஸ்துவ பாதிரியார். தமிழகத்தைச் சேர்ந்தவர், ஈழ விடுதலை ஆதரவு இயக்கங்களில் முக்கிய பங்கு வகிப்பவர். கட்சிகளில் எல்லாம் அவர் இல்லை. அவர் திருவாசகத்தைப் பற்றி உரையாற்றியிருந்தார். அதில் அழகாக சொல்லியிருந்தார்.
தென்னாடுடைய சிவனே போற்றி, என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி, என்று சொன்னதன் மூலம், இறைவன் என்பவன் தென்னாட்டிலே சிவனாக அறியப்படுகிறான். மற்ற நாடுகளிலே இறைவனாக அறியப்படுகிறான். அதனால் இந்த திருவாசகம் எல்லா மதத்தினருக்கும், எல்லா நாட்டினருக்கும் பொதுவானது என்றார். ஏற்கனவே நான் சர்ச் நிகழ்ச்சிகளில் அட்டன் பண்ணியிருக்கேன். வெட்டிங்ல எல்லாம்.
நாங்க கீதங்கள் பாடுகிறோம், ஆடுகிறோம். ஆனால் உம்மை நேரடியாகப் பார்த்தவர்களை பார்த்ததில்லை, கேள்விப்பட்டதில்லை என்ற வார்த்தைகளை அப்படியே உபயோகப்படுத்தி இருக்கிறார்கள் கிறிஸ்துவ தேவாலயத்தில். அப்போது தான் நான் யோசித்தேன். திருவாசகத்தை அப்படியே இவங்க போட்டுருக்காங்களே. ஜகத் காஸ்பர் சொன்னதின் மூலமாக இது ஓரளவு நிரூபணமாகிறது. இது சைவ இந்து சமய மறையாக ஏற்றுக்கொள்ளப்படாமல், அதில் உள்ள வாசகங்கள் சரியாக உள்ளதால் மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
அதற்கு நாம் ஒன்றும் சொல்வதில்லை. ஏனெனில், எல்லா மதங்களையும் மதித்து நடப்பது, எல்லா மதங்களும் நதிகளைப் போன்றது. எல்லா மதங்களும் தனித்தனி நதிகளான கங்கை, யமுனை, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி போல. இந்து மதத்தின் அடிப்படை தத்துவம் அதுதான். நாங்க மட்டும் தான் பியூர். எங்க தண்ணி மட்டும் தான் சுத்தம்னு சொல்றது கிடையாது. நம்முடைய நூல்களை அவர்கள் கையாள்வது என்பது ஓரளவுக்குப் பெருமை தான். இதை அறிய வேண்டியவர்கள் புதியதாக கண்வெர்ட்டாகிப் போனவர்கள்.
ஏன்னா? அவர்கள் இங்கிருக்கும் போது, திருவாசகத்தைக் கேட்கவில்லை. சர்ச்சுக்கு போகும்போது மட்டும் கேட்கிறாங்க. அப்ப கிறிஸ்டியானிட்டில தான் அதை சொல்லியிருக்கிறார்களோன்னு நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கே சொல்வதே இங்கேயிருந்து தான் எடுத்து சொல்கிறார்கள் என்பதை சொல்வதற்கு நம்மிடையே யாருமில்லை. இந்துமதம் என்றாலே பூஜை, புனஸ்காரம், குடமுழக்கு, கும்பாபிஷேகம்னு தான் டிவியில், சேனல்களில் எல்லாம் காண்பிக்கிறார்கள். ஒரு அறிவியல் பூர்வமான செய்திகளை சொல்லக்கூடிய ஊடகங்கள் இல்லை.
இறைவனைக் கண்டு அறிந்தவர்களை நாங்கள் கேட்டு அறிந்ததில்லை. நாங்களும் கண்டறிந்ததில்லை என்ற கருத்து உள்ளது. அப்போ இறைவனை எப்படிக் கண்டறிவது. ஏதாவது சினிமாவில், கிராபிக்ஸில் என்.டி. ராமாராவ் சிரிக்கற மாதிரி ஆக்டிங் கொடுத்தால் தான் முடியும். இறைவன் குறிப்புகள் மூலமாகத் தான் வருவார் என அனுபவிக்க வேண்டியதா யிருக்கிறது.
குறிப்புகள் கனவுகளில் வருவார்கள் என்பதை நம்மாழ்வாருக்கு நாராயணன் காட்சி கொடுக்கிறார். அப்போது, நம்மாழ்வார் மிகவும் கூனிக் குறுகிப் போ யிருப்பார். என்ன நினைக்கிறார் என்றால் இதுபோன்ற எச்சில், வியர்வை எல்லாம் கலந்த என்னோட உடல், இந்த உடலை நோக்கி பகவான் வர்ரானே. பகவான் ஒரு தூயவன், தெய்வம். நான் வந்து இப்படி இருக்கிறேனே என நினைத்து நம்மாழ்வார் பயந்து பின்னாடி செல்கிறார். ஓடி ஒளியப் பார்க்கிறார்.
நாராயணன் விடுவாரா? ஏனெனில் பக்தவச்சலம் என்று சொல்லக் கூடிய, பக்தர்களை தேடிப்போய் ஆட்கொள்கிறவன் நாராயணன். தேடிப்போய் நம்மாழ்வாரைக் கட்டிப்பிடித்து, முத்தமழை பொழிந்து ஒரு சிநேகிதனைப் போல் ஏற்றுக் கொள்கிறார் என்று கூறுகிறார்கள். இவர் தயங்குகிறார், நம்முடைய உடம்பில் வியர்வை நாற்றம் வருகிறது, மூக்கும், சளியும் இருக்கக்கூடிய ஒரு சாதாரண உடம்பு இது என நினைக்கிறார். ஆனால், அவர் அதைப் பார்க்கவில்லை. ஒரு பக்தனை தேடிப்போய் கண்டுபிடித்து வைத்துக் கொள்கிறார், தோழமையை ஆட்கொள்கிறார்.
நான் பலமுறை சொன்னது போல, பல ஆண்டுகளாக நாத்திகனாக இருந்து பிறகு ஆத்திகனாக மாறினேன். எல்லாரும் கஷ்டத்தில் இருந்து ஆத்திகனாக மாறுவாங்க. நான் கஷ்டத்தில் எல்லாம் மாறவில்லை. நாத்திகனா இருந்த காலத்தில் முருகப்பெருமான் வந்தாரு. கனவில் காட்சியளித்தார். மிகப்பெரிய நீளமான கனவு அது. அதை பதிவு செய்தால், அதற்கே 30 நிமிடங்கள் ஆகிவிடும். விநாயகப் பெருமான் வந்தாரு. ஒரு மிரட்டு மிரட்டிட்டுப் போனாரு. அதுவும் நீளமான ஆழமான கனவுதான்.
அதன் பிறகு ஒரு சில சின்ன கனவுகள். தெய்வங்கள் சம்பந்தப்பட்டதாய் வந்தது. ரங்கநாதர் வந்தாரு இரயில்வே ஸ்டேஷனில். என்னை சத்தம் போட்டார் என்னடா முட்டாள் தனம் பண்ணிக்கிட்டு திரியிறன்னு. அதற்கு பின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திருப்பதி பாலாஜி கனவில் வந்த, அந்த நாள், அந்த நேரம் எனக்கு நன்றாக நினைவில் இருக்கக் கூடியது. தரிசனம் கொடுத்து, அது ஒரு நீண்ட பெரிய கனவு. அந்த கனவில் நான் கண்டு முழித்து எழுந்தவுடன், எனக்கு ஒரு சந்தோஷம் வந்தது. அந்த நாள் முதல் எனக்கு சந்தோஷம் அப்போதும் இருந்தது, இப்போதும் இருக்கிறது. அந்த நிமிடம், அந்த நொடிதான் நாத்திகத் திலிருந்து ஆத்திகத்திற்கு மாறினேன்.
பிறகு அறுபடை வீடு முருகப்பெருமான் என் கனவில் வந்து பல்வேறு நிகழ்ச்சிகளை எனக்கு வழிநடத்திக் கொடுத்தார். எந்த இடத்தில் எப்படி முடிவு எடுக்க வேண்டும் என்பதை. சொல்லப் போனால், மிகவும் சுவையாக இருக்கும். மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் வடிவமும், தெய்வ வடிவமும் கலந்து, தாய் ஆதிபராசக்தியானவர்கள் எனக்கு அருள்பாலித்தார்கள். இதைப்பற்றி நான் ரொம்ப பெரியவர்களிடமும், ஆன்மீகத்தில் இருப்பவர்களிடமும், சாமியை மிகவும் வணங்குபவர்களிடமும் சொல்லும் போது, அவர்கள் ரொம்ப சுவாரஸ்யமாக கேட்டுக் கொள்ளவில்லை என்பதை நான் கவனித்தேன். சின்னப் பொறாமையும் அவர்களுக்கு உருவானது.
நம்ம இவ்வளவு சிஸ்டமேட்டிக்கா போய்கிட்ருக்கோம். பூஜை, புனஸ்காரம் பண்ணி சாமி கும்பிட்டுக்கிட்டு இருக்கோம். இவன் என்னவோ, பல்லு விளக்காம பக்கத்துல வந்துருக்கான். இவனுக்குப் போய் கடவுள் கனவுல வந்து இவ்வளவு அருள் பாலிச்சாங்களான்னு நினைக்கிறார்கள். அதனால், அதைப்பற்றி நான் பேசுவதையே விட்டுவிட்டேன். அதனால, இதைப் பதிவு மட்டும் செய்து வச்சிக்கலாம். கேட்கிறவர்கள் கேட்கட்டும், பார்க்கிறவர்கள் பார்க்கட்டும்னு நினைத்தேன்.
ஐதராபாத்தில் இருந்தபோது, பேங்க் ஆப் இந்தியாவில் ஒரு மேனேஜர் இருந்தாரு. சீனிவாசன்னு பெயரில் ஒரு பக்கா இந்து போல் இருந்தார். ஆனால், பக்கா கிறிஸ்டியனா மாறிட்டாரு. ஐதராபாத்தில் இந்து பெயர் விஜயலஷ்மி, நாராயணன் என்று இருக்கிறது, அதை சைலன்டா கிறிஸ்துவ மதத்திற்கு மாத்திட்றாங்க. அவரு என்னிடம் கிறிஸ்துவ மதத்தைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்.
அப்போது, அவரிடம் நான் கூறினேன். இதுபோன்று நான் பல வருடங்களாக நாத்திகனா இருந்தேன். இப்போது ஆத்திகனா மாறிட்டேன். நான் ஒரு இந்து என்பதை பரிபூர்ணமாக நம்புகிறேன். ஏன்னா, எனக்கு கனவில் வந்தது சுப்ரமணியர், விநாயகர், பாலாஜி, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி, சாய்பாபா இவங்க தான்னு சொன்னேன். அவரு சொன்னார், நீங்களும் கர்த்தரை உணர்வீர்கள் என்று சொன்னார். ஏன்னா, புதுசா கன்வெர்ட் பண்றதால பிடிப்பு ஜாஸ்தி.
பிறகு ஒரு வாரம், பத்து நாள் கூட இருக்காது. ஒரு ஆற்றங்கரையில் பெரிய கிறிஸ்துவ தேவாலயம். எல்லா கதவுகளும் மூடப்பட்டிருக்கிறது. தென்னந்தோப்பு போல் பெரிய தோப்பு. எல்லாம் குளிர்ச்சியாக இருந்தது. நான் ஒரு சின்ன பையனா ஓடிக்கிட்டு இருக்கேன். உள்ள ப்ரேயர் நடப்பது போல் தெரிகிறது. ஒரு மிகப்பெரிய தேவாலயத்தில் எல்லா கதவுகளும் மூடப்பட்ட நிலையில் ஒரு பெரிய அறை போல, ஒரே ஒரு கதவு மட்டும் லேசா திறந்திருக்கிறது. அதை, உள்ளே பார்க்கிறேன். உள்ளே எம்டியா இருக்கு, ஒண்ணுமில்ல.
எனக்கு ஒரு ஆர்வம் வருகிறது. யாருமே இல்லையே. உள்ளே சென்று பார்க்கலாமென்று. உள்ளே போய் ஒரு ரவுண்டு அடிக்கிறேன். அங்கே பலிபீடத்தின் கீழ் பைபிள் வைக்கப்பட்டுள்ளது. நார்மலா முன்னாடி வெச்சிருப்பாங்க. அன்றைக்கு அப்படி வைத்திருந்தார்கள். ஒரு டேபிள், டேபிள் பக்கத்தில் ஒரு கவர். பிறந்தநாள் வாழ்த்து அட்டை மாதிரி. ஆர்வமிகுதியால், அந்த கவர் உள்ளே என்ன இருக்கிறது எனப் பார்த்தேன். அந்த கார்டுல எழுதியிருக்கு. கிறிஸ்துவால் ஆசிர்வதிக்கப்பட்டவரே, உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், நிம்மதியும் உண்டாகும்னு இருந்தது. நான் அதைப் படித்துவிட்டு டேபிள் மேல் வைத்து விட்டு வந்து விட்டேன்.
இந்த கனவு முடிந்தவுடன் எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. அப்போது எனக்கு தோன்றிற்று. ஒரு இந்துவா, நான் கடவுளை இந்த வடிவத்தில் பார்க்கிறேன். ஆனால், கடவுள் எல்லா வடிவத்திலும் தான் இருக்கிறார். நான் ஒரு இந்து என்பதால், இந்து கடவுள் தான் கனவில் வருவார் என்பதில்லை என தெரியவந்து மிகவும் நான் புல்லரித்துப் போய் விட்டேன். மறுபடி பேங்க் ஆப் இந்தியா மேனேஜரை பார்க்கும் போது, இதைச் சொன்னேன்.
அதற்கு அவர் இப்போதாவது ஏற்றுக் கொள்கிறீர்களா? தேவனாகிய இயேசுவை கர்த்தரை என்றார். எல்லா மதமும் ஒன்று தான் என்று நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். எல்லா மதங்களும் ஒன்றென்று. அது இப்போது தான் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எப்போதாவது, நான் கிறிஸ்துவ தேவாலயங்களுக்கு போவதுண்டு. முடிந்தால் பெசன்ட் நகர் சர்ச்சுக்கு செல்வேன்.
இதை ஏன் நான் சொல்கிறேன் என்றால், இஸ்லாமியத்தையும் கிறிஸ்துவத்தையும் நான் தவறாக பதிவு செய்கிறேன் என்று என்னுடைய நண்பர்கள், என்னுடைய உறவினர்கள் எல்லாம் எனக்கு போன் போட்டு பேசுகிறார்கள். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. உண்மைகளை எடுத்துச் சொல்வதற்கு ஒரு தேவை இருக்கிறது என்பதற்காக சொல்கிறேன்.
அதையே தான் ஜெகத்காஸ்பர், தென்னாடுடைய சிவனே போற்றி, என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சொல்லும் போது, ஏகன், அநேகன் இறைவனடியல்ல என்கிற வார்த்தையின் மூலமாக, ஏகன் ஒரு இறைவனாக இருக்கிறான். அநேகன் பல வடிவங்களில் இருக்கிறான் என்று ஒரு விளக்கத்தை கொடுத்தார். அது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது என்று நினைத்துப் பார்க்கிறேன்.
எனவே நண்பர்களே இந்து மதத்திலே வழிபாட்டு முறைகளிலே, கடவுளை பார்க்கும் விதங்களிலே, அனைத்து மதத்திற்கும் ஏற்புடைய வாக்கிலே இருக்கிறது. இங்கு எல்லாரும் இந்து தான். கிறிஸ்டியனா இருந்தா கிறிஸ்டியன் இந்து. முஸ்லீமா இருந்தா, முஸ்லீம் இந்து. சீக்கியரா இருந்தா, சீக்கியர் இந்துன்னு ஒரு பெரிய சர்ச்சை ஏற்பட்டது. அதை நினைத்துப் பார்த்தேன். இவர் ஒரு அறிவாளி, திறமைசாலி அதை நினைத்து சொல்கிறார். மற்றவர்கள் அவசரப்படுகிறார்கள் என்று.
எனவே இந்து மதம் என்று வரும்போது, சர்வ மதத்துக்கும் பொதுவானது. சர்வ மதத்தினரும் பின்பற்றக் கூடியது. ஏனெனில் இதில் எல்லா வழிபாட்டு முறைகளும் உள்ளது. ஒரு முஸ்லீம் இந்து மதத்தைப் பின்பற்ற வேண்டும் என்று நினைக்கும் போது, இஸ்லாம் மதத்தில் உருவ வழிபாடு செய்யாமல் இருந்தால் போதும். உருவ வழிபாடு செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மேற்கு திசையைப் பார்த்து உருவமில்லாமல், தலை வணங்கி, உடல் வணங்கி, ப்ரேயர் பண்ணணும். பண்ணிக்கலாம்.
இது போன்று அனைத்து மதங்களுக்கும், அனைத்து மதத்தினருக்கும் ஏற்புடையதான மதம், அறிவியல் பூர்வமான இந்து மதம் என்று கூறி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.
Original Audio posted in WhatsApp Group ‘Science is Hinduism’ on 20 May 2018.