மற்ற மதத்திற்கு குறிப்பிட நூல் உள்ளது. இஸ்லாத்திற்கு குரான், கிறிஸ்துவ மதத்திற்கு பைபிள், ஆனால் இந்து மதத்திற்கு குறிப்பிட்ட மத நூல் கிடையாது. வேதத்தின் அடிப்படையிலையே ஹிந்து மதம் என்று சொல்லப்படுகிறது. வேதத்தில் வர்ணாசிரமம் முறை சொல்லப்பட்டிருக்கிறது. சாதி வேறுபாடு இருக்கிறது என்று சொல்லுவார்கள்.
முழுமையாக வேதத்தை வாங்கிப் படித்துப் பார்த்தவர்கள் யாரும் கிடையாது. சிறு சிறு பகுதியாக சமஸ்கிருதத்தில் சொல்லப்படுவதைத் தான் வேதம் என்று சொல்லுகிறார்கள். ஹிந்து சமய ஆலயங்களிலோ அல்லது அதை ஒட்டிய நூலகங்களிலிலோ கிடைக்கும் என்பது சந்தேகம்தான்.
வர்ணாஸ்ரமம் முறையில் சொல்லப்படும் நான்கு நிலை என்பது மேலாண்மை அறிவியல், குறிப்பாக, மனித வள மேலாண்மை அறிவியல் என்று தான் சொல்லவேண்டும். முழுக்க முழுக்க சாதிக்கு எதிராக போராடக்கூடிய கட்சியில் கூட அந்த மேனேஜ்மென்ட் கட்டமைப்பில் நாலாக இருக்கும். மேலே தலைவர்கள் இருப்பார்கள். அதற்கு அப்புறமாக மாவட்டச் செயலாளர்கள், இந்த மாதிரி ஒரு வகை அமைப்பு இருக்கும். அதற்குப் பிறகு நகர செயலாளர்கள் என்ற வகை அமைப்பு இருக்கும். அப்புறம் தொண்டர்கள் இருப்பாங்க. அங்கே கூட தொண்டர்களோடு பழகுவார் தலைவர். அனால் ஒரு கட்டமைப்பு செயல் படவேண்டும் என்பதற்காக இந்த நான்கு படிகள் வைத்தாக வேண்டும்.
அதே மாதிரி நிர்வாகம் என்று பார்த்தால் மேனேஜ்மென்ட் இயக்குநர், சேர்மன் போன்ற வகையில் இருப்பாங்க. அப்படி மேனேஜ்மென்ட் சயின்ஸ் என்பதை அந்தக் காலத்திலையே எளிதாக சொல்ல கூடிய வகையில் இந்த நான்கு அமைப்புகள் சொன்னார்கள். வெளியிலே இருந்து வந்தவர்கள் தான் இந்து மதத்தின் கருத்துக்களை தவறுதலாக சொல்லபட்டு இருக்கிறது. ஹிந்து மதத்தின் பெரும்பாலும் பகவத் கீதையை சொல்லுவார்கள். அது ஒரு தத்துவ நூல். அதுல வாழ்வியல் முறை குறித்து தான் இருக்கும்.
தமிழிலே திருக்குறளை சொல்லலாம். திருக்குறள் ஹிந்து சமய நூல் என்பதை நான் அடித்து சொல்லுவேன். இந்திய நாட்டில் எழுதப்பட்ட எல்லா நூல்களும் ஹிந்து சமய நூல்கள் தான். திருக்குறள் என்பது இந்தியர்களுக்காக எழுதப்பட்ட தமிழ் நூல்.
திருக்குறளில் உள்ள அடிப்படை விஷயங்களை மறந்துவிடுகிறார்கள். திருக்குறளில் மூன்று வகை பாக்கள் உள்ளன. இந்த மூன்றில் எந்த பாக்கள் முக்கியம் என்று கேட்டால் மூன்றும் தான் முக்கியம் என்று சொல்லுவார்கள். அது அப்படி இல்லை மொதல்ல உள்ள குரலில் பாதிக்கு மேட்பட்டு பொருட்பால் இருக்கும், அதுல பாதிதான் அறத்துப் பால் இருக்கும். அதிலேயும் பாதிதான் இன்பத்துப் பால் இருக்கும். அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையுமே, மனித வாழ்க்கைக்கு முக்கியம் என்று எடுத்து சொன்னாலும் கூட சமநிலை மூன்றுக்கும் கிடையாது.
பாதிக்கும் மேற்பட்டு பொருட்பால், இதுல சொல்லப்படுகிற கருத்து அறத்துப்பாலில் முரண்படும். அறத்துப்பாலில் உதவிக்கு வந்துட்டேன் என்றால் உடுக்கை இழந்தவன் கைபோல அங்கேயும் இடுக்கண் கடைவதாம் நட்பு என்று இருக்கும். வலது கை கொடுப்பதை இடது கைக்கு தெரியக் கூடாது என்று நிறைய அறநெறிகள் சொல்லப்பட்டிருக்கும்.
ஆனால் பொருட்பாலில் வித்தியாசமாக இருக்கும். எதிரி வரும் போது அவன் கையில் ஆயுதம் இருக்கும் எச்சரிக்கையாக இரு என்று சொல்லப்பட்டிருக்கும். அறத்துப்பாலில் புறம் பேசுவது தவறு என்று சொல்லப்பட்டிருக்கும், ஆனால் பொருட்பாவில் ஒற்றன் குறித்த செய்தி சொல்லப்பட்டிருக்கும், ஒற்றன் என்றாலே ஒருவரை பற்றி போட்டுக் கொடுப்பதுதானே, ஆகையால் அறம் என்று வரும்போது அறத்துப்பால், பொருள் என்று வரும் போது பொருட்பால், இன்பம் என்று வரும்போது இன்பத்துப் பால்.
ஹிந்து சமய நெறி என்று வரும் போது, திருக்குறளில் வைத்து பார்த்தாலும் சரி, மகாபாரதம், மற்றும் ராமாயணம் என்று இதிகாசங்களில் பார்த்தாலும் சரி, பொருள் என்பதற்கு அதிக முக்கியத்துவமும், அதற்கு அடுத்தபடி அறத்திற்கும், அதற்கும் அடுத்த நிலையில் இன்பத்திற்கும் சொல்லப்பட்டிருக்கிறது.
மனித சமுதாயத்திற்கு ஒட்டுமொத்தமாக வழிகாட்டுவது இந்திய நூல்களே, என்று கூறி விடைபெறுகிறேன்.
Original Audio posted in WhatsApp Group ‘Science is Hinduism’ on 24 May 2018.