எல்லா மதங்களிலும் கடவுளைப் பற்றி இருக்கிறது. கடவுள்களின் வடிவத்தைப் பற்றி இருக்கிறது. கடவுளை எப்படிக் கும்பிட வேண்டும் என்பது பற்றி இருக்கிறது. அதற்கான ‘பூஜை, புனஸ்காரங்கள்’, என்று நாம சொன்னாலும், அதற்கு வேறென்ன வார்த்தைகள் எல்லாம் அவங்க சொல்லுவாங்களோ, அவைகளைப் பற்றி எல்லாமே இருக்கிறது. எப்படி தொழுகை நடத்தணும், எப்படி ப்ரேயர் நடத்தணும்.
எல்லா மதங்களிலும், மருத்துவத்தைப் பற்றிய பெரிய குறிப்புகள், வழிபாட்டு முறைகளைப் பற்றி கலந்து இருக்கிறது என்று கேட்டால் எனக்குத் தெரியவில்ல என்றுதான் சொல்ல வேண்டும். அத்தகைய நவீன, மருத்துவமுறைகளை உள்ளடக்கி இருக்கக் கூடிய ஒரே ஒரு வழிபாட்டு முறையாகவும், மதமாகவும் இருப்பது, எனக்குத் தெரிந்து இந்துமதம் மட்டும் தான்.
இந்து மதத்திலே நீங்கள், வழிபாட்டு முறைகளை பார்த்தீர்களென்றால், கோவிலுக்குப் போய், சாமி கும்பிட்டு வருவது, அதிலேயும் தினமும் பிசியோதெரப்பி, யோகாஸ், உடலுடைய எல்லாப் பகுதிகளுக்கும் அசைவைக் கொடுப்பது, மூவ்மெண்டெல்லாம் வெரிஃபை பண்றதெல்லாம் நடக்கிறது. சில பரிகாரங்களாக முதல் சுற்று, இரண்டாவது சுற்று, மூன்றாவது சுற்று என்று, இந்த வயசுல இந்த சுற்றுல பண்ணலாம் என்று வாக்கிங்கை பற்றி சொல்லியிருப்பாங்க. ரன்னிங்க பத்தி சொல்லியிருப்பாங்க.
காலில் விழுந்து கும்பிடுவதில் எல்லாம் உடம்புடைய அசைவுகளைப் பற்றி சொல்லியிருப்பாங்க. இந்துக் கோயில்களில் கொடுக்கக்கூடிய தீர்த்தங்களில் எல்லாம், ஏற்கனவே நான் சொல்லியிருக்கிறேன். பிறநோய், பறவைக் காய்ச்சல் போன்றவையெல்லாம் வரும் காலக்கட்டத்தில், அதற்கான மருந்து களைக் கலந்து தீர்த்தமாய் கொடுக்கும்போது, நோய் கட்டுப் படுத்தப்படுகிறது. இடம் முழுவதும் தூய்மையாக வைத்துக் கொள்ளப்படுகிறது. பிறகு ஒவ்வொரு நோய்க்கும் தேவையான பிரசாதம்.
இந்தக் கோயிலில் இந்தப் பிரசாதம், அந்தக் கோயிலில் அந்தப் பிரசாதம், அந்தக் கோயிலில் போய் நாற்பத்தெட்டு நாட்கள் அந்த நெய்யை சாப்பிட்டு வந்தீர்களானால், குழந்தைப்பேறு சரியாகும். குழந்தைப்பேறு பிரச்சனைகள் இருக்கும் மருத்துவங்களை, அந்தப் பிரசாதத்தோடு கலந்து கொடுத்து வருவது என்ற முறைகள் எல்லாம் வந்தது. சமுதாயத்திற்கு நோய் வராமல், ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை வழிவகை செய்து வைத்துக் கொண்டு விட்டார்கள். தனிமனிதர்கள் இதை ரெகுலரா, பயிற்சி செய்யும் போது, நோய்நொடி வரத்தான் செய்யுது, அதற்கான மருத்துவ முறைகளை வழி வகை செய்தார்கள். கடவுளே வைத்தியம் பார்த்ததால், வைத்தியநாதன் ஸ்வாமி என்று வைத்தார்கள்.
சித்தர்களாக வைத்தார்கள். இந்த மருத்துவ முறைகளை இலக்கணம் வைத்தவர்கள், இந்தியர்கள் தான், இந்து சமுதாயம் தான். என்ன இலக்கணத்தை வைத்தார்கள் என்று பார்த்தீர்களானால், எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கக் கூடாது. இலவசமா தான் டீரிட்மென்ட் பண்ணணும். நோய் முழுவதும், சரியான பின்னர், அவங்களா இஷ்டப்பட்டு ஏதாவது, சமுதாயத்திற்கு செய்யலாம். அதுவும் டாக்டருக்கு செய்யத் தேவையில்லை.
சவால்விட்டு, அறைகூவிக் கேட்கிறேன். இந்த மாதிரி மருத்துவ முறை எங்காவது உண்டா? ப்ரீ கன்சல்டேஷன், ப்ரீ டீரிட்மென்ட், ப்ரீ மெடிசன், கேரன்டி ரெக்யூர். என்ன ஒரு உன்னதமான முறை பாருங்க. அதிலும் மருத்துவம் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல. விலங்குகளுக்கும் சேர்த்து தான் பாத்துக்கிட்டு இருந்தாங்க. பறவைகளுக்கு, வீட்டு விலங்குகளுக்கு, காட்டு விலங்குகளுக்கு, அதை எப்படி ஊடகமாக, சாதாரணமாக, ரொம்ப கஷ்டப்பட்டு இல்லாம, பிரசாதங்களில், கலந்து கொடுத்தார்கள்.
இந்தந்த நோய்க்கு, இந்தந்த கோயில்கள் என்று வைக்கும் போது, அந்தந்தக் கோயில்களில் தனிப்பட்ட, அதற்கென ஸ்பெஷலாக தயாரிக்கும் பிரசாதங்களை வைத்தார்கள். இதைப் புரிந்து கொள்ளாமல், நம்ம மூடநம்பிக்கையென்று நினைத்துக் கொண்டு, அந்த பயிற்சி முழுமையாக பரிசோதித்திருக்கிறார்கள் என்பது ஆராயப்பட வேண்டிய விஷயம். ஆனால், கொள்கைகளாக நாம் வைத்திருக்க வேண்டியது. மனதிலே நாம் வைத்திருக்க வேண்டியது. சிந்தையிலே வைத்திருக்க வேண்டியது, எதற்காக இவை உருவாக்கப்பட்டன?
இந்தக் கோவிலுக்கு, இந்த நோய்க்கு இந்த பரிகாரங்கள். இதைப்போய் இங்கே செய்ய வேண்டும் எனும்போது, அதற்கான ஸ்பெஷலைசேஷன். ஜெனரல் ஹாஸ்பிட்டல், ஸ்பெஷலைஸ்டு ஹாஸ்பிட்டல்கள் என்று. கோவில்கள் பன்முகத் தன்மைக் கொண்டவையாக உள்ளதென ஏற்கனவே நாம் சொல்லியிருந்தோம். அதிலொன்று, இந்த மருத்துவத்தன்மை கொண்டவை. மருத்துவர்களை உருவாக்கி வைத்து, மருந்துகளை உருவாக்கி வைத்து, மருத்துவ முறைகளை உருவாக்கி வைத்து, பிணி தீரும் வழிகளை உருவாக்கி வைத்து, முறைகளை உருவாக்கி வைத்து, அது உரியவர்களுக்கு, உரிய நேரத்திலே, எந்தக் கட்டணமும் இல்லாமல், இலவசமாகப் போய், நோய்களும் பிணிகளும் தீர்ந்து, அற்புதமான, ஆரோக்கியமான சமுதாயமாக வாழ வழிவகை செய்தது இந்து மதமுறைகள்.
இந்த முறைகள் உலகம் முழுவதும் இருந்தால், என்ன ஆகும்? கோவில்களே மருத்துவமனையாகும். மருத்துவமனைகள் கோவில்கள் ஆகும். டாக்டர்களே கடவுள் ஆவார்கள். அர்ச்சகர்கள் ஆவார்கள். கடவுளுக்கும் மனிதர்களுக்கும் நடுவில் இருக்கக் கூடியவர்களாக அவர்கள் இருப்பார்கள். எனவே, நான் நினைத்துப் பார்ப்பேன். இந்து மதத்திலே அறிவியல் பூர்வமாக, சொல்லப்படாத கருத்துக்கள் என்று எதுவுமே இல்லை. அறிவியலே இந்து மதம். நன்றி, வணக்கம்.
Original Audio posted in Whatsapp Group ‘Science is Hinduism’ on 12 June 2018.