ராக்கெட்டுக்கு வந்து எலுமிச்சம் பழம் கட்டி விட்டுட்லாமா? தடையில்லாமல் போறதுக்கு. ஏன்னா? இந்துக்கள் எல்லாத்தையும் சாமியாக்கிட்றாங்க. தடை யில்லாமல் இருப்பதற்கு எல்லாத்துக்கும் எலுமிச்சம்பழம் கட்றது, கருப்புக் கயிறு கட்றது, சிவப்புக் கயிறு கட்றது, படிகாரம் கட்டுறது, திருஷ்டி பொம்மை வைக்கறதுன்னு பண்றாங்க. கம்ப்யூட்டர்ல கூட, விபூதி, சந்தனம் எல்லாத்தையும் வெச்சிட்றாங்க. அது அப்படியே படிந்து போய்க் கிடக்குது. சரி, உயரிய தொழில் நுட்பம் ராக்கெட் விட்றாங்க. சந்திரனுக்குக் கூட விட்டு இருக்காங்க. அதெல்லாம், தடையில்லாமல் போறதுக்காக, அதுல இருக்கற எரிபொருளுக்கு பதிலா எலுமிச்சம் பழத்தக் கட்டி விட்டுடலாம்ல! ஏன்னா, தடையில்லாமல் ராக்கெட் போகும்ல?
ரசிப்பதற்கு ரொம்ப நல்லா இருக்கும். நான் எலுமிச்சம் பழம் கட்றது கிடையாது. சாமி படமெல்லாம் கூட நான் ரொம்ப வெச்சிக்கறதுல்ல. சாமி படம் எதுவும் வெக்காததுனால நிறைய பேர் கன்பியூஸ் ஆயிருப்பாங்க. பண்டிகை நாட்களில் ஆயுதபூஜை, விநாயகர் சதுர்த்திக்கு மட்டும் படத்தை வைத்து கும்பிட்டு எடுத்து வெச்சிடுங்கம்மான்னு சொல்லுவேன். பிஸ்னஸ் பண்ற இடத்துல சிலபேர் பொய் சொல்லவேண்டியது வரும். இல்லன்னா, நம்மளே சிலசமயம் பொய் சொல்ல வேண்டியது வரும். சாமிய வெச்சிக்கிட்டு, சாமி முன்னாடி பொய் சொல்லக்கூடாதுன்றது என்னோட தனிப்பட்ட கருத்து. ஆனால் பலபேரின் கருத்து, தெய்வத்தின் துணையை எல்லா இடத்திலும் வைத்துக்கொள்வார்கள். கடைல வெச்சிக்குவாங்க, வீட்ல வெச்சிக்குவாங்க, வண்டில வெச்சிக்குவாங்க, பாக்கெட்ல வெச்சிக்குவாங்க, முன்னாடி வெச்சிக்குவாங்க, பின்னாடி வெச்சிக்குவாங்க. வீட்டோட கதவுல இருக்கும், சமயலறையில் இருக்கும்.
அது சிலபேரின் பழக்கவழக்கங்கள். எனக்கும் முன்னாடி இதெல்லாம் தோணும். இந்த விவேக்கோட ஜோக்கெல்லாம் நிறைய வரும். வண்டிக்கு இதக்கட்டி, அதக்கட்டி, கடைசில டீசல் போடணுங்கறதேயே மறந்திட்டீங்களேடா? எல்லாத்தையும் கட்டி டீசல் போடலன்னா, எப்படி வண்டிப் போகும்னு நகைச்சுவையா அவரு கேட்டு வெச்சிருப்பாரு. பகுத்தறிவை சொல்லக்கூடியது. நல்லாத்தான் இருக்கும் அதெல்லாம். நல்லா என்ஜாய் பண்ணலாம். இதைப்பற்றிய தெளிவு எனக்கும் கொஞ்சம் வரும்.
பக்கத்துக்கடையில ரெண்டு, மூணு முஸ்லீம் பொண்ணுங்க வேலை பாத்தாங்க. நல்ல நீட்டா அழகா டிரஸ் பண்ணிட்டு, லேடிஸ் என்பதனால், நல்லா மேக்கப்பெல்லாம் போட்டு, அழகா இருப்பாங்க. நம்ம கடைக்கும் அதுக்கும் சம்மந்தமில்லன்னு அவ்வளவா நான் பேச மாட்டேன். திடீர்னு பார்த்தா, நெத்தியில் பொட்டு வெச்சிக்கிட்டு, தலையில நல்லாப் பூ வெச்சிக்கிட்டு ஜம்முன்னு வந்தாங்க. நான் கேட்டேன், நீங்க முஸ்லீம் தானே? எப்புடி ஈவ்னிங்ல பொட்டு பூவெல்லாம் வெச்சிக்கிட்டு இருக்கீங்க? ‘இல்ல அங்கிள் எனக்குப் பிடிக்கும், எங்க பக்கத்து வீட்டு ஆண்ட்டி வீட்ல எல்லாம் இந்தூஸ் தான்.
சாயங்காலத்துல நல்லா பளிச்சின்னு முகம் கழுவி பொட்டு பூவெல்லாம் வெச்சிக்கிட்டு இருப்பாங்க. அப்பத்தான் லட்சுமி உள்ள வரும். இல்லன்னா, மூதேவி வந்து தரித்திரம் பிடிக்கும்’. எங்க வீட்ல எல்லாம் இத சொல்லிக் குடுக்க மாட்டாங்க. அப்படியாம்மா, இதுல என்னல்லாம் உங்களுக்கு பிடிக்கும்னு கேட்டேன். இல்ல, பக்கத்து வீட்டு ஆன்ட்டி காலங்காத்தல எழுந்து வீட்டை நல்லா கிளின் பண்ணி, கோலம் போடுவாங்க. அப்புறம் சாப்பாட்ட சாமிக்கு படைப்பாங்க. அதை காக்காக்கு எடுத்துட்டு போய் வெப்பாங்க. அப்படியாம்மா, அதப் பத்தியெல்லாம் கேட்ருக்கியான்னு கேட்டேன். இல்ல, அதெல்லாம் கேட்டதுல்ல, பாக்கும் போது, எங்களுக்குக் கூட ஆசையா இருக்கும். இதமாதிரி ஒரு கண்டிஷன் இருந்தா, நம்மளும் கிளீன் ஆகி, கிச்சனெல்லாம் கிளின் பண்ணி, சுத்தமா சமையல் பண்ணி, ஏதாவது ஒரு ஜீவராசிக்கு சாப்பாடு கொடுத்துட்டு இருக்கலாமேன்னு.
நான் வேற எதெல்லாம் உனக்கும் பிடிக்கும்னு கேட்டேன். ஏன்னா? எனக்கு ஆச்சர்யம் இந்து பழக்கவழக்கத்த பார்த்து, பயிற்சி செய்து, ஈவ்னிங்ல பொட்டு வெச்சிக்கிட்டு, பூவெச்சிக்கிட்டு கண்ணாடில பார்த்துக்கிட்டு உட்கார்ந்திருக்காங்க. அதுமட்டுமில்ல, வேறு என்னென்ன பிடிக்கும்? அங்கிள், அந்த பக்கத்து வீட்டு அங்கிள் காலைல பைக்க எடுப்பாரு, ஸ்கூட்டர எடுப்பதற்கு முன்னாடி அத நல்லாத் துடைப்பாரு. துடைச்சதுக்கு அப்புறம் கொஞ்சம் விபூதி எடுத்துப் பூசுவாரு. அதுக்கப்புறம் முன்னாடி நின்னு கும்பிடுவாரு. கும்பிட்டதுக்கப்புறம் தான் அந்த ஸ்கூட்டரை ஸ்டார்ட் பண்ணி எடுத்துட்டு வருவாரு. ‘‘இதுல என்னம்மா அதிசயம் இருக்கு, இதெல்லாம் மூடநம்பிக்கை தானே, ஸ்கூட்டர் எப்படி ஸ்டார்ட் பண்ணாலும் ஸ்டார்ட் ஆகும்ல. எடுத்துக்கிட்டு போயிடலாம்ல? ‘‘என்னா அங்கிள் இப்படி சொல்லிட்டீங்க?’’ அவரு ஸ்கூட்டரு எப்பவும் சுத்தமா, க்ளினா இருக்கும் தெரியுமா? எங்கப்பாவும் தான் ஸ்கூட்டர் வெச்சிருக்காரு, ஒழுங்காவே மெயின்டெயின் பண்ண மாட்டாரு. எப்பவும் லொடலொடன்னு ஆடிக்கிட்டு இருக்கும். காரணம் டெய்லி அந்த அங்கிள் செய்வதினால், அது டெய்லி பயிற்சியாகிவிட்டது. உங்களுக்குப் போய் நான் சொல்ல வேண்டிய தாயிருக்கே’. அந்தப் பொண்ணு சொன்னப்ப நான் வாயடைத்துப் போய் விட்டேன்.
ஆஹா, இதுல இவ்வளவு தத்துவம் இருக்கே. இந்த தத்துவத்தைப் பற்றி அதிகமாக கவனிக்க வேண்டிய நம்மை விட இவங்க அதிகமாக கவனிச்சி இருக்காங்களேன்னு நினைச்சேன். அதுக்குத்தான் இந்த பூஜை புனஸ்காரம் எல்லாமே. எந்த இடத்திலெல்லாம் பராமரிப்பு, மெயின்டடென்ஸ் தேவைப் படுகிறதோ, எந்த இடத்திலெல்லாம், எவ்ரிடே செக்கிங் தேவைப் படுகிறதோ, அந்த இடத்திலெல்லாம், இன்ஸ்பெக்ஷன் முடிஞ்சிடுச்சின்னு ஒரு லேபிள் ஒட்டுவது போல், அது முடிஞ்சிடுச்சின்னு ஒரு சிம்பள போட்டுட்ராங்க. அதாவது எலுமிச்சப் பழத்த கட்டுவது மூலமா போட்றாங்களோ, இல்லன்னா, விபூதிப் பட்டையப்போட்றது மூலமா, இல்லன்னா, சும்மா ஒரு லேபிள், செக்குடு ஓக்கே சொல்ற மாதிரி இருக்கு.
சோ, சிம்பள்ஸ பேஸ் பண்ணி இருக்கற இந்து மதத்துல, அதுலயும் மிக எளிதாகத் தெரியும் சிம்பள்ஸ். பிளாஸ்டிக்க யூஸ் பண்ண வேண்டாம்னு சொல்றாங்க. ஆனால், செக்குடு ஓக்னேன்னு ஒரு பிளாஸ்டிக்ல பிரிண்டிங் பண்ணி, ஒரு கம்ல ஒட்ட வேண்டியதாக இருக்கிறது. அறிவியல் பூர்வமான இந்து மதத்தில், ரொம்ப சிம்பிள சுற்று சுகாதாரத்தில், ஒரு விபூதியிலோ, ஒரு சந்தனத்திலோ, குங்குமத்திலியோ முடிச்சிட்றாங்க வேலைய. எனவே, எல்லாத்தையும் க்ளின் பண்ணி, இன்ஸ்பெக்ஷன் ஓக்கேன்ற சிம்பளாத்தான் இதக் கருத வேண்டியதாயிருக்கே தவிர, மூட நம்பிக்கையா கருதவில்லை.
அதுக்குத் தான் ராக்கெட்டுக்கு எலுமிச்ச பழம் கட்டறது. ராக்கெட்டுக்கு எலுமிச்சபழம் கட்டமாட்டங்க தான். எங்கேயோ போகப் போகுது. பூமியோட புவியீர்ப்பு விசையைத் தாண்டி போறதால ராக்கெட்ட ரெடி பண்ணிட்டு, ராக்கெட்டுக்கு சூடமெல்லாம் காட்டி, அதுல ஒரு எலுமிச்சப்பழத்த சைட்ல கட்டி தூக்கி வீச வேண்டியது தான். அந்த இடத்துல காமிக்கிறோம். ஆல் இன்ஸ்பெக்ஷன் ஓக்கே. ரெடி டூ ஸ்டார்ட். கவுண்டவுன் ஓக்கே, அப்படிங்கறதெல்லாம். அதனால வந்து, இட்டீஸ் எ மேட்டர் ஆப் பெர்பெக்ஷன். இன்ஸ்பெக்ஷன், சேடிஸ்பேக்ஷன், கிளீன்லினெஸ், பெரிய மெயின்டனன்ஸ், இதெல்லாம் குறிக்கறதுக்காக, உயரிய இந்து சமய நெறி யிலே, ஒரு ஸ்கூட்டரை, சுத்தம் பண்ணி, திருநீறு அணிந்து, ஒரு கும்புடு கும்புட்டுட்டு, உட்கார்ந்து ஸ்டார்ட் பண்ணி, ஜம்முனு போகும்போது, அது பாட்டுக்கு அது வேலைய பாக்குது. அதையும் ஒரு வாகனம்னு நெனச்சிட்டு விட்டுட்றோம். நன்றி, வணக்கம்.
Original Audio posted in WhatsApp Group ‘Science is Hinduism’ on 06 June 2018.