இல்லறம், துறவறம், பிரம்மச்சர்யம்.
வாழ்வியல் நெறிகளிலே ரொம்ப முக்கியமாக இருக்கிறது. பிரம்மச்சர்யம். துறவறம் இஸ்லாமியத்துல கிடையாது. இந்து மதத்திலே இருக்கிறது. கிறிஸ்துவ மதத்திலே இருக்கிறது. இஸ்லாமிய மதத்திலே இல்லறம் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும். பிள்ளைகள் எல்லாம் பெத்துக் கொள்ள வேண்டும். இல்லறம் அல்லது நல்லறம் அன்று என்ற முக்கியத்துவத்தை இந்து மதத்துல கொடுத்து இருக்கறாங்க.
“மழித்தலும் நீத்தலும் வேண்டா உலகம் பழித்தது ஒதுக்கி விடின்”
மொட்டை போட்டுக்கிட்டு வழித்து, முடிய வளத்துக்கிட்டு, தாடிய வளத்துக்கிட்டு ஒரு சன்னியாசியா நீ போக வேண்டாம். உலகத்துல இதுதான் தவறானது, பழியானதுன்னு சொல்லறத மட்டும் பண்ணாம இருந்தா போதும்னு இல்லறத்தோட பெருமையை திருக்குறளில் சொல்லி யிருக்கறாங்க. அதே திருக்குறளில் துறவறத்தைப் பற்றியும் சொல்லி யிருக்கறாங்க. முன்பே சொல்லியிருக்கிறேன். திருக்குறள் என்பது, அறத்துப்பால், இன்னொரு பக்கம் பொருட்பால், இன்னொரு பக்கம் இன்பத்துப்பால். இதுல ஒரு குறள், அதுல ஒரு குறள்னு படிச்சா, கன்பியூஸ் ஆயிடும். ஏன்னா பொருட்பால்ல இல்லறத்தப் பத்தி சொல்லியிருப்பாங்க. அறத்துப்பால்ல துறவறத்தப் பத்தி சொல்லியிருப்பாங்க. கருத்துக்கள் கொஞ்சம் மாறுபடுவது மாதிரி இருக்கும். உண்மை அதுவல்ல.
திருக்குறளை முழுவதும் ஆராய்ந்து பார்த்தோமானால், பாதிக்கும் மேற்பட்ட குறள்கள் பொருட்பாலைப் பற்றி இருக்கும். அதிலும் பாதிக்கும் மேற்பட்ட குறள்கள் அறத்துப்பாலைப் பற்றி இருக்கும். அதிலும் பாதி இன்பத்துப் பாலைப் பற்றி இருக்கும். அதுதான் வாழ்வியல் நெறிமுறை.
எனவே, இல்லறமா? துறவறமா? பிரம்மச்சரியமா? என்றுபார்க்கும் போது, 50%க்கு மேல இல்லறம் தான் இருந்தாகணும். பொருட்பால் சார்ந்தது, நம்முடைய கடமைகளை சொல்வது, பிள்ளைகளை பெற்றுக் கொள்வது, படிக்க வைப்பது, சொத்து சேர்ப்பது, உறவினர்களோடு நல்லா இருக்கறது. அதுல பாதி அறத்துப்பாலை சார்ந்ததாக இருக்க வேண்டும். கடவுள் பக்தியோடு இருப்பது, நல்ல விஷயங்களை செய்வது, ஆசைப்படாம இருப்பது. அதுல பாதி இன்பத்துப் பால், கொஞ்சம் சந்தோஷமா இருக்கணும். சந்தோஷத்துக்கு ஏதோ செய்யலாம். பெண்களுடன் சந்தோஷமா இருக்கலாம். அதனால் தான், இன்பத்துப்பாலை காமத்துப்பால் என்று சொல்கிறார்கள். அது தடைசெய்யப்படவில்லை. அதனுடைய அளவு, ஒண்ணுக்கு ஒண்ணு சரிசமமா கிடையாது. எட்டுல ஒரு பகுதிதான் இன்பத்துப் பாலாகவும், எட்டுல மூன்று பகுதி, அதற்கும் கொஞ்சம் கம்மி அறத்துப்பாலாகவும், ஏறத்தாழ எட்டுல ஐந்து பகுதி பொருட்பாலாகவும் இருக்கும். அதைப்போல, இல்லறம் என்பது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.
துறவறம் என்பது எதற்கு வேணும்? சமுதாயத்திலே சில சூழ்நிலைகள் ஏற்படும். அப்பொழுது வழிகாட்டுவதற்கு சிலப்பேர் தேவைப்படுகிறார்கள். அவர்கள் தாங்களாகவே உருவாகிறார்கள். அவர்களுடைய சூழ்நிலையும் சமுதாய சூழ்நிலையும் எல்லாம் சேர்த்து தான். துறவறம் என்பது இரண்டு வகைப்படும். சன்னியாசி, ரிஷி. சன்னியாசி என்பவர்கள் ஊர் ஊராப்போய் ஒரு இடத்துல இல்லாம, துறவற நெறிகளை பின்பற்றி, பிச்சையெடுத்து, சாப்பிட்டு, நல்ல நெறிகளை எல்லாருக்கும் காமிக்கக் கூடியவர்கள். ரிஷி என்பவர்கள் ஒரே இடத்தில் இருப்பார்கள். சாப்பாட்டுக்கெல்லாம் மத்தவங்கள தேடிப்போக மாட்டாங்க. ஊர்க்காரர்கள் எல்லாம் சாப்பாட்டை அவர்கள் இருக்கும் இடத்திற்கு கொண்டு செல்வார்கள். இரண்டுமே துறவறம் தான். இரண்டையும் தாண்டி பிரம்மச்சரியும் என்ற ஒன்று உண்டு. பிரம்மச்சரியம் என்பது கல்யாணம் பண்ணிக்காமல், அந்தக் காம இன்பத்தில் ஈடுபடாமல், உடலையும் உள்ளத்தையும் அடக்கி, ஒரு உன்னதமான குறிக்கோளுக்காக பாடுபடுவார்கள்.
எப்போது மதமோ, மக்களோ, சமுதாயமோ ஒரு மிகப்பெரிய துயருக்கு ஆளாகிறார்களோ, அப்போது, அந்த மதத்தை மக்களை சமுதாயத்தை காப்பாற்றுவதற்காக, பிரம்மச்சாரிகள் ஒன்று படுவார்கள். இதற்கு அவர்களுடைய உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து காப்பாற்றி வருகிறார்கள். அதனால் பிரம்மச்சரியம் என்பது ஒரு உன்னதமானதாக இருக்கும்.
பிரம்மச்சரியம், துறவறம், இல்லறம் ஆகிய மூன்று மதங்களுமே கலந்தது இந்து மதமாகத் தான் இருக்கிறது. அதனால தான் கடவுள்களையும் அந்த மாதிரி வைத்தார்கள். பிரம்மசரியத்தை நிலை நிறுத்த வேண்டும் என்பதற்காக, பிரம்மச்சரியம் சார்ந்த கடவுளாக ஐயப்பன் என்ற கடவுளை இழுத்தார்கள். அவரு ஒரு பிரம்மச்சரியக் கடவுள். ஆண்களை மட்டும் தான் பார்க்க வேண்டும். அதனால பிரம்மச்சரிய விரதம் இருந்து கொண்டு, பெண்களோடு தொடர்பு இல்லாமல் இருக்க வேண்டும்.
வாழ்க்கையில இதெல்லாம், ரொம்ப முக்கியமா இருக்கு. எப்போதும், ஒரே மாதிரியாக இல்லாமல், நம்முடைய உடலையும் உள்ளத்தையும் செப்பனிடுவதற்காக, நாற்பது நாளோ, அறுபது நாளோ விரதம் இருந்துட்டு, மலையில போய் இந்த பிரம்மச்சரியக் கடவுளை தரிசித்து வரும்போது, போய் வந்தவர்களுக்குத் தெரியும். நான் ஒரே ஒரு தடவைதான் போயிருக்கேன். அதுக்கப்புறம் போனதில்லை. உள்ளம் எந்த அளவுக்கு தூய்மை அடைகிறது என்று. அதனால தான் ஆன்மீகம் என்பது அனுபவம் சார்ந்தது. அனுபவத்தை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.
அறிவியல் என்பது அறிவு சார்ந்தது. வியாக்கியானம் எல்லாம் சொல்லிக் கொள்ளலாம். எனவே, பிரம்மச்சரியம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக, ஆனால், மிகவும் சின்ன பார்ட் தான். எல்லாரும் பிரமச்சாரியாக ஆகிவிட்டால், சமுதாயம் என்ன ஆகும். துறவறம் மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இல்லறமே மிக மிக முக்கியமானது என்பதற்காகத் தான், சிவபெருமானுக்கெல்லாம் பிள்ளைகள் கொடுத்து, நாராயணனுக்கு கல்யாணம் பண்ணி வெச்சி, கல்யாணத்துக்கு அவரை கடன் வாங்க வைத்து, இல்லறத்தில் ஈடுபடக்கூடிய நாமெல்லாம் என்னென்ன சிக்கல்களை பிரச்சனைகளை சந்தித்தோமோ, புருஷன் பொண்டாட்டி சண்டை, அப்பா- புள்ள சண்டை, அவங்களையும் நாம கதைகளில் உருவாக்கி வைத்தோம். இல்லற நெறிகள் என்று வரும்போது, இந்தக் கதைகளை பார்த்துக் கொள்ளுங்கள், படித்துக் கொள்ளுங்கள். அதன்மூலம் உங்களுக்கு வாழ்விலே வழிகாட்டுதல் கிடைக்கும் என்பதைப் போல உருவாக்கி வைத்தோம்.
எனவே, உன்னதமான வாழ்வியல் நெறிமுறைகளை, அனைத்து ஆக்கக்கூறுகளையும் உள்ளடக்கி, துறவறம், இல்லறம், பிரம்மச்சரியம், அதற்கு கட்டுக்கோப்பான வழிவகைகளை அமைத்து, ஒரு நல்ல சமுதாயத்தின் நோக்கத்திற்காக, இந்துமத நெறிகள் பின்பற்றப்பட்டு வருகின்றன என்பதனை அனைவரும் அறிய வேண்டும்.
நன்றி, வணக்கம்.
Original Audio posted in WhatsApp Group ‘Science is Hinduism’ on 08 June 2018.