பல வருடம் நாத்திகனாக இருந்த கண்ணதாசன் அவர்கள் இந்து மதத்தின் பெருமைகளை உணர்ந்து அர்த்தமுள்ள இந்து மதத்தை எழுதினார். பல வருடம் நாத்திகனாக இருந்த நான் இந்து மதத்தின் அறிவியல் பூர்வமாக கருத்துக்களை உணர்ந்து ‘அறிவியலே இந்து மதம்!’ என்று நம்புகிறேன். அதனடிப்படை இந்தக் கூறு உருவாக்கப்பட்டுள்ளது.
என்னோட ஆபீஸ்ல பௌசியான்னு ஒரு பொண்ணு பிளஸ்டு முடிச்சிட்டு வேலைக்கு வந்து சேர்ந்தாங்க. ரொம்ப அழகாகவும் அறிவாகவும் இருந்தாங்க. ரொம்ப ஆழமான கேள்விகள கேப்பாங்க.
அப்ப அவங்க என்கிட்ட சொன்னாங்க, ‘சார், விநாயகரை முழுமுதற் கடவுள்னு நீங்க சொல்லுவீங்களே. ஏன் அப்படி சொல்றீங்க? எனக்கு எடுத்து சொல்லுங்க!’ன்னு சொன்னாங்க. எனக்கு ஒரு முஸ்லீம் பொண்ணுகிட்ட இதப்பத்தி என்ன சொல்லன்னு ஒரு யோசனையா இருந்துச்சு. சரின்னு அவங்கள உட்கார வைத்து சொன்னேன்.
‘அம்மா இந்து மதம் அப்படிங்கற்து சிம்பல்ஸ வச்சி சொல்றது. சிம்பல்ஸ் மனுஷனுக்கு ஈஸியா புரியும்!’.
அதனாலத்தான் என்ன பண்றாங்க, ஒரு 10,000 ஓல்ட் எலக்ட்ரிசிட்டி இருக்கற இடத்துல, அபாயத்தை வச்சு எலும்புக்கூடுன்னு ஒரு படம் போடுவாங்க. அந்த படத்தப் பாத்த உடனே அங்க டேஞ்சர் இருக்குன்னு எல்லாருக்கும் தெரிஞ்சிடும். அவங்களுக்கு தமிழ் தெரியணும், இங்கிலீஷ் தெரியணும்னு அவசியம் கிடையாது. பக்கத்துல போனா செத்துப் போயிடுவோம்னு தெரிஞ்சிடும். அதே மாதிரி ஏர்போர்ட்ல எல்லாம் பல மொழிக்காரர்கள் வரர்தனால ரெஸ்டாரண்ட் எப்படி இருக்கும், லேடிஸ் டாய்லட் எப்படியிருக்கும், ஜென்ட்ஸ் டாய்லட் எப்படி இருக்கும்னு சிம்பள்ஸ் வெச்சிருப்பாங்க.
அந்த மாதிரி நாங்க, ‘வினைகள் தீர்க்கும் நாயகர் விநாயகர்!’ என்று ஒரு சிம்பள வச்சிருக்கோம். ஒரு மனித உருவமும், யானைத்தலையும் வச்சிருக்கோம். அதை விட குறிப்பான விஷயம் ஒன்று என்னான்னா, ஒரு யானை உடம்பு, ஒரு எலியில டிராவல் பண்ணும். அப்படி சின்ன எலிய ஒரு வாகனமாக செச்சிருக்கோம்.
இப்ப நீங்க சொல்லுங்க, ‘ஒரு எலி மேல ஒரு யானை டிராவல் பண்ண முடியுமா?’ இது மூட நம்பிக்கை இல்லியா?
‘ஆமா சார் ஒரு எலி மேல யானை டிராவல் பண்ண முடியாது! இது கொஞ்சம் நகைச்சுவையாத்தான் இருக்கு!’ன்னு அந்த பொண்ணு சொன்னாங்க.
அது தானம்மா மேட்டரு. ‘சமீப காலமாக யானைகளுக்கு ஓய்வு குடுக்கணும்னு காட்டுப் பகுதிக்குக் கூட்டிட்டுப் போனாங்க. எப்படிக் கூட்டிட்டு போனாங்க?’
ஒரு லாரில ஏத்திட்டு கூட்டிட்டு போனங்க.
சரி அந்த லாரி எப்படி இயங்குது?
நீங்க ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி சொல்லுவீங்க. டிரைவர்னால இயங்குது, டீசல்னால இயங்குது. பாடி கட்றதுனால இயங்குது. இஞ்சினியரிங்னால இயங்குது, எலக்ரிசிட்டினால இயங்குது அப்படினிட்டு.
எல்லாமே சரி, மூவ்மென்டு எது குடுக்குது? அந்த லாரில இருக்குற வீல், வீலுக்கு நடுவுல இருக்கற சின்ன வீல்பேரிங். அந்த வீல் பேரிங் மட்டும் இல்ல அப்புடின்னா, எந்த விதத்திலும் மூவ்மென்டு குடுக்க முடியாது. அந்த வீல்பேரிங் இருந்துச்சின்னா, ஒரு 50 பேர் சேர்ந்து தள்ளக்கூட செய்யலாம் மூவ்மென்டுக்கு.
அதனால ஒரு யானைய டிராவல் பண்ண வெக்கணும்னு சொல்லும் போது, ஒரு சின்ன வீல் பேரிங்க கரெக்டான இடத்துல பொருத்தி, வீல் பிட் பண்ணி, ஆக்சில் பிட் பண்ணி, இஞ்ஜின் பிட் பண்ணி, டீசலப் போட்டு, டிரைவர போட்டு, மெக்கானிசமெல்லாம் பண்ணும் போது, எடுத்துட்டுப் போக முடியுதே?
அந்த மாதிரி தான், ஒரு யானைய, ஒரு சின்ன எலி மேல டிராவல் பண்ண வெக்கறது முடியாது. இம்பாசிபல். ஆனா அது முடியும், பாசிபல். அதுதான் இந்த சிம்பளோட முக்கியத்துவம். வெறும் வீல் பேரிங்க வெச்சி மூவ் பண்ண முடியாது தான் ஒரு லாரிய! அதனால, பலபேர் செயல்பட்டு, திட்டமிட்டு, உழைத்து, உருவாக்கி வரும்போது, எந்த ஒரு செயலும் மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்கும்.
இன்னிக்கு பிளஸ்டு முடிச்சிட்டு ஏங்கிட்ட வந்துருக்க, இன்னிக்கு, நீ ரெண்டாயிரமோ, இல்ல மூவாயிரமோ, சம்பளம் வாங்குவ. ஒரு மாசத்துக்கு இருபது லட்சம் சம்பளம் வாங்க முடியுமா உன்னால? முடியும்!
அப்படின்னா இதேமாதிரிதான் நாம திட்டமிடுதல் வேணும், செயல்படுத்துதல் வேணும், எல்லாரோட தொடர்புகளும் வேணும். இதத்தான் நாங்க குறிக்கிறோம். அதனால தான் வினைகளுக்கு நாயகனா, விநாயகன யானைக்கு உருவமா கொடுத்து, ஒரு எலிமேல டிராவல் பண்ணுதுன்னு வெச்சோம்.
இதவந்து நாங்க விநாயகருன்னு சொல்லும்போது, ‘எந்தவொரு செயலையும் செய்யும் போது, நாம வந்து ஒரு தன்னம்பிக்கையோட, இந்தக் காரியத்த ஆரம்பிக்கும் போது, ஒரு மிகப்பெரிய வெற்றி வரும்!’ அப்டின்னு நினச்சி பண்ணனுங்கறதுக்காக இந்த சிம்பல வெச்சிருக்கோம்.
அதனாலத்தான் இத ‘முழு முதற் கடவுள்’னு சொன்னோம்! நான் சொல்லி முடிச்சேன். அந்தப் பொண்ணுக்கு ரொம்ப சந்தோஷம். கேட்டுக் கிட்ருந்தவங்களுக்கு சந்தோஷம்.
‘இந்த மாதிரி ஒரு பார்வையில எனக்கு யாரும் சொன்னதே இல்ல சார்!’ அப்படின்னு சொன்னாங்க.
அறிவியலே இந்துமதம், நன்றி, வணக்கம்.