THANK YOU

To the Muslim friend who sent me a book ‘Natural Religion’ to give introduction to Islam. After reading, I started believing, Hinduism is true natural religion.

James Family in Paramakudi. Attending a church wedding of their family, seeing the recitals, I realized, what they used is ‘Thiruvasagam’ a Hindu Saivite literature.

Naam Tamilar Katchi. A political party in Tamilnadu, India. When its functionary posted messages against Hinduism in WhatsApp group, I responded. That is beginning for this book.

Liberation Tigers of Tamil Eelam. Their fighting spirits and virtues created in me unending energy and Fighting spirit.

Google Software. In creating Tamil typing version.

Amazon. In simplifying book publishing.

Periyar Library Readers Circle. Helped me to read original versions of Hindu literature.

Towhith Jamath Jainulabudin. His oratorical skills are remarkable. Many aspects of Islam, I came to know, listening to his TV shows.

WhatsApp group friends for ‘Science is Hinduism’. 100s of them gave opportunities by exchanging information.

FOREWORD

அரிமா சங்க உறுப்பினராக இருந்த போது, வாட்ஸ் அப் குழுவில், ‘மனைவியை எப்படி நடத்த வேண்டும்’ என்பது பற்றி, முகமது நபி வழிகாட்டியதாக ஒருவர் நீண்ட பதிவு போட்டார். அதற்கு முன்னர் தான், தவிகித் ஜமாத் ஜெயினுலாபுதீன் என்பவர் முகமது நபியின் பல மனைவியரை பற்றிய குறிப்பை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சொல்லியிருந்தார். அமெரிக்காவில் இருந்து திரும்ப வரும் வழியில் தோஹா விமான நிலைய காத்திருப்பில் அதற்கு பதில் போட்டேன். இந்த விமான பயணத்தின் போது ஏற்கனவே, பக்கத்துக்கு இருக்கையில் இருந்த பாகிஸ்தானிய தம்பதியரிடம் நிறைய விஷயங்கள் நட்பாக பேசியிருந்தேன்.

I am member of Lions Clubs International for several years. In one Lions Club related WhatsApp group, one member made a post about, ‘How to Treat wife, as per guidance of Mohammed Nabi’. Earlier, in a TV show, the Towheeth Jamaath Jainulabudeen made a remark about 12 or 13 wives of Revered Prophet Mohammed Nabi. When I was on the way from USA to India, at Doha Airport, I made a reply to that post in WhatsApp group. In that flight journey, I befriended and made conversation on many subjects with an elderly Pakistani couple in a friendly way.

பல வருட நாத்திகனாக இருந்தேன். கிருத்துவ வழிபாடு இடத்தில், முருகன் அருளால் திருமணம் செய்து கொண்டேன். சிறு வயது முதல் விடுதலை புலிகள் ஆதரவாளனாக இருந்த என் கால்கள் பெரியார் திடல் தேடி தானே சென்றது. பெரியார் திடலில் மனித நேயம் கற்றேன். இன்று பல்லாண்டு சிறையில் இருக்கும் பேரறிவாளன் இடத்தில், நான் இருந்திருக்க வேண்டும். என்னுடைய தன்னம்பிக்கை கலந்த திமிர் தடுத்து விட்டது.

I was atheist for several years. I married in a Christian chapel, with grace of Lord Muruga. Being a supporter of Liberation Tigers of Tamil Eelam, I automatically went to Periyar Thidal, the citadel of Atheist movement in Tamilnadu founder by Periyar, also known as Ee Ve Raa, founder of Dravidar Kazhagam, a popular well rooted atheist movement in Tamilnadu. I learnt love for fellow human beings, there in that Periyar Thidal.  I should have been in the place of Perarivaalan, an LTTE activist jailed for several years for procuring a 12V battery in the claimed assassination attempt on former prime minister Rajiv Gandhi. But my arrogance added with self confidence prevented me from committing that act. 

பள்ளிப் பருவம் முதல், ‘பரம்பரை பொறியாளர்கள்’ என்று என்னால் அழைக்கப்படுகிற, ‘பட்டியல் இனம்’ என்று தாமே பெயர் சூட்டிக்கொண்ட நண்பர்களோடு நெருங்கி பழகினேன்.

From my school days, I closely befriended so called ‘Scheduled Caste’ friends, whom, I prefer to call ‘Traditional Engineers’.

உண்டென்று சொல்வார்க்கும் இல்லையென்று சொல்வார்க்கும் கண் கண்ட தெய்வமான திருப்பதி நாராயணன் 2000-07-16 அன்று என்னை ஆட்கொண்டு அருள் செய்தான். உலகின் மிகப்பெரிய தெய்வீக பேரழகியாக கனவில் வந்து, மேல்மருவத்தூர் அன்னை ஆதி பராசக்தி அருள் செய்தாள். சராசரி மக்களுக்கு தான் அடிகளார் வடிவே என்று காண்பித்தாள். ஆறுபடை வீடு தோறும் என் முன் காட்டி முருக பெருமான் அருள் செய்தான். கிருத்துவ தேவாலயத்தில் ஆசி பெரும் கனவும் கண்டேன்.

Whether you accept as ‘YES’ and agree, or you deny as ‘NO’ and disagree, the God Venkateswara Balaji, He shall remain a proven, perfectly visible God and will grace upon you, and such the God, took over mem overwhelmed  and graced upon me on 16 July 2000 at Bangalore. The most magnificent beauty on the earth, Maa Aadhi Parasakthi of Melmaruvathur graced upon me in a vivid dream. And She made it clear that for average normal human beings, She is in the form of Melmaruvathur Bangaru Adigalar. Lord Murugal, the lord of six war houses, showed His speciality six war house temples in my dream, even when I did not visit them earlier and graced upon me. I was also graced upon in a Church, by the Lord Jesus Christ the savior of mankind.

வாழ்வில் உயிருக்கு ஆபத்தான தருணங்கள் பலமுறை வந்து போயின. நாத்திகனாக இருந்த போதே தெய்வத்தின் வழிகாட்டுதல் எனக்கு கிடைத்தது.

I had many life threatening situations and circumstances in my life. Even when I was atheist, I felt and had the grace of God and Its guidance.

இந்து மதமே அறிவியல் பூர்வமானது. அறிவியலே இந்து மதமாக பரிமாணம் கொண்டுள்ளது என நான் முழுமையாக நம்புகிறேன். அதன் சிறு தொடக்கமே இந்த முயற்சி.

I firmly believe, Hinduism is most scientific. It is Science that had metamorphosed as Hinduism. It is small beginning and effort by me.

‘இன்ஷா அல்லா’ என்ற இஸ்லாமிய கூற்றுப்படி, இறை அருள் இருந்தால், இது தொடரும், வளரும்.

‘Insa Allah’ is an Islamic Verse popularly used, meaning. ‘Will of God’, With that, it will continue and grow.

அணிந்துரை

அயோத்திலே ராமர் கோயில் இருந்தது. அதை இடித்து மசூதி கட்டியதால், நாங்கள் மசூதியை இடித்து ராமனுக்கு கோயில் கட்டுகிறோம். என்று சொல்கிறீர்களே, காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் புத்த விஹாரமாக இருந்தது. அதை இடித்து புத்த விஹாரம் கட்டுவோம். என்று சொன்ன, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள்.

“Ayothya had a Ram Temple. It was destroyed and a Mosque was built. So, now we demolish the mosque and build Ram Temple.” If you say this, I say, “In the place of Kanchi Kamakshi Temple, there existed a Budhist Vihara, so, shall we demolish that temple and build a Budhdha Vihara?” roared once, Mr.Thiru Maa Valavan, a popular leader considered representing ‘Dalits’, whom I always refer as ‘Traditional Engineers’. If such a person, Mr.Thol, Thiruma Valavan, …

சூரிய கிரகண நிகழ்வின் போது உணவு சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது என்று நிரூபிக்கும், என்றும் இளமை தலைவர் திராவிட கழக பேரறிவாளர் ஐயா வீரமணி அவர்கள்.

“At the time of Solar eclipse, let us all eat, nothing will happen” declared ever youth looking respectable leader, great scholar, K.Veeramani of Dravidar Kazhakam, a popular well founded atheist movement in Tamilnadu … if he agrees ….

இஸ்லாத்தில் உள்ள இஸ்லாமியர் நம்பும் மூட பழக்கங்களை வெளி உலகுக்கு காட்டிய, எளிமை பேச்சு அறிவாளி, தவிகித் ஜமாஅத் ஜெயினுலாபுதீன் அவர்கள்.

The superstitious false beliefs of normal Indian Muslims, exposed by very knowledgeable and simple looking scholar Mr.Jainulabudeen of Towheeth Jamath, if he agrees ….

திருவாசக புகழ் பாடும் கிருஸ்தவ பாதிரியார் பங்கு தந்தை ஜகத் காஸ்பர் அவர்கள்.

Jagath Casper, the Christian Church Father, who always recites ‘Thiruvasagam’ the eight century Tamil Saivaite Hindu literature.. if he agrees ….

முதுமையிலும் இளமை கொண்ட கம்யூனிஸ்ட் இயக்க ஐயா நல்லகண்ணு அவர்கள்.

The nonagenarian communist leader, Mr.Nalla Kannu, if he agrees, …. 

என் வாழ்நாளில் நான் கண்ட மிகப்பெரும் தலைவர், வைணவர்களால் மோட்ச தீபம் ஏற்றப்பட்ட நாத்திக தலைவர், பல கோடி மக்கள் கடவுள் என நம்பிய சத்யசாய் பாபா அவர்களை தன வீட்டுக்கு வரவழைத்து, குடிநீர் திட்டத்துக்கு நன்கொடை பெற்ற நல்லவர், படிப்பறியா ஞானி கலைஞர் அவர்கள்.

More than all, the biggest of the leader I saw in my lifetime, the one who was given with Moksha Deep by Vaishnavites sect of Hindu religion, though being an ardent atheist in his entire lifetime, the one who made the Sai Baba, believe as God by many, to visit his house, and made him to donate a big money for the drinking water projects, the less educated but most talented scholar, Dr.Kalaignar, ….

இவர்கள் எல்லாம் அணிந்துரை மற்றும் கருத்துரை செய்தால் நல்லாதான் இருக்கும். ஆனால் அவர்கள் எல்லாம் தலைவர்கள். நானோ ஒரு சுண்டக்காய். சண்டைக்காய் என்று கூட சிலர் நினைக்கலாம். எனவே, முடிந்தால் பின்னாளில், கலைஞர் ஆசி பெற்ற என்றென்றும் செயல் தலைவர் ஸ்டாலின், மற்றும் மேற்கண்ட அறிவாளர்களிடம் கருத்துரை மற்றும் அணிந்துரை பெறுவோம்.

If they all read my writings and give a cover note, it would be good. But they all are great leaders. I am too small, like a Turkey Berry, Sometimes a fighting berry, … So, not possible. May be, one day, the working President of DMK, Mr.M.K.Stalin, and such others mentioned above, may give their opinion and cover note…

அதுவரை பொறுத்திருங்கள்.

Let us wait..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>