நோய் நாடி, நோய் முதல் நாடி, அதன் வாய் நாடி, வாய்ப்பசெயல். – திருக்குறள்.
சமூக அவலங்களை சரி செய்யும் வழி இதுதான். இதனை முழுமையாக அறிந்து நெறிமுறைகளை வகுத்த மதம் .. அறிவியலான இந்து மதம்.
மருத்துவம் வியாபாரம் ஆனது. இந்து தர்மத்தில், மருத்துவத்துக்கு எந்த பணமும் வாங்க கூடாது. நோய் குணமானதும் தானாக முன் வந்து கொடுக்கும் காணிக்கை ஏற்றுக் கொள்ளலாம்.
கல்வி வியாபாரம் ஆனது. இந்து தர்மத்தில் குருவின் வழிகாட்டுதலில் முழு கல்வி மற்றும் பயிற்சி முடித்து பின்னர் அவர் கட்டளையை நிறைவேற்றி தனி வாழ்வை தொடங்க வேண்டும்.
உணவு வியாபாரம் ஆனது. இந்து தர்மத்தில், வெளிநாட்டினர் (பரதேசி), விருந்தினர் (அதிதி), பணியாட்கள், தம்மை சுற்றியுள்ள நாய், பூனை, காக்கை போன்ற ஜீவ ராசிகள்.. அனைத்தும் உணவு கிடைத்ததை உறுதி செய்து விட்டு, பின்னர் தான் உணவு உண்ண வேண்டும்.
வட்டி தொழில். இந்து தர்மத்தில் தன்னால் இயன்ற வட்டியை கடன் வாங்கியவர் கொடுக்க வேண்டும். அவரால் கொடுக்க முடியவில்லை என்றால், தானம் என கணக்கிட்டு தள்ளுபடி செய்ய வேண்டும்.
பெண்ணுரிமை. ஆண்களை தேர்வு செய்யும் உரிமை பெண்களுக்கு. எல்லா விஷயத்திலும் பெண்களுக்கு முன்னுரிமை.
அடுக்கிக்கொண்டே போகலாம்..
மண், பெண், பொன்.. இந்த மூன்றின் ஆசையால் குற்றம் நடக்கிறது. சமூக கட்டுப்பாடுகள் மீறல். அவற்றுக்கு சரியான வரையறை மற்றும் நெறிமுறைகளை வகுத்தது அறிவியலான இந்து மதம்.