இந்துமதத்துக்கும், நெசவாளர் திட்டங்களுக்கும் என்ன சம்மந்தம்? நெசவாளர்களுக்கு மட்டுமல்ல, எல்லாத் தொழிலாளர்களுக்கும், இந்துமதம் தொடர்ந்து வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்து, அவங்களோட தேவைகளை நிறைவேற்ற உதவுகிறது என்று அடிக்கடி சொல்லியிருக்கிறேன்.
இந்து மதம் இதற்காக எண்ணிலடங்கா கடவுள்களை படைத்து, ஆலயங்களைப் படைத்து, பூஜை புனஸ்காரங்களை படைத்து, உடைகளையும் படைத்தார்கள். இந்த விழாவிற்கு இந்த கடவுள் இந்த டிரஸ் பண்ணிட்டு வருவாரு. இந்த கலர்ல, இந்த மாதிரி துணியில, இந்தம்மா எப்படி டிரஸ் பண்ணிக்கிட்டு வருவாங்க. இந்தம்மா இந்த கலர்ல இந்த வருஷம் டிரஸ் பண்ணிக்கிட்டு வந்தாங்கன்னா, நாட்ல எப்படி இருக்கும்? அந்தப் புடவை கட்னாங்கன்னா எப்படி இருக்கும்? பச்சை புடவையா, மஞ்சப் புடவையா, நீலப் புடவையா, பட்டா, பீதாம்பரமா? அப்படிங்கறதெல்லாம். வழிபாட்டு முறைகளிலே தெய்வங்களுக்கு, அந்த ஆடையை சாத்துதல் என்பதும் ஒரு மரபாக இருந்தது.
கல்லு தான், கல்லுக்குத் தான் வேஷ்டியை, துண்டை கட்டி விடுவாங்க, புடவையக் கட்டி விடுவாங்க. நல்லா மடிப்பு மடிப்பா, டிசைன் டிசைனா. அதனால வேண்டுதல் பண்ணிக்கிட்டு, அம்மா நான் உனக்கு டிரஸ் எடுத்துக் கொடுக்கிறேன்னு, பெரிய, பெரிய விலை உயர்ந்த, பட்டுப்புடவைகளை வாங்கிக் கொடுப்பாங்க. விலையுயர்ந்த நகைகளை அணிவிப்பார்கள். இதெல்லாம் எதற்கு? முட்டாள் தனமா இல்லையா? அதை மனிதர்களுக்கு வாங்கி கொடுக்கலாமே?
அங்க தான் கஷ்டம், மனிதர்களுக்கு வாங்கிக் கொடுக்கும் போது, யாருக்கு என்ன வாங்கி கொடுப்பது என்பது கஷ்டம். பணக்காரர்கள் ஒரு நாளைக்கு 10 உடை போட்டுக்கலாம். 50 உடை போட்டுக்கலாம். அதையும் தாண்டி நெசவாளர்கள், நெய்து கொண்டே இருப்பார்கள். ரொம்ப சாதரணமான உடைகளையே நெய்துக் கொண்டிருந்தார்களானால், நெசவுத் தொழில் நல்ல விதமாக வராது. எக்ஸ்போர்ட் பண்ண முடியாது. அந்நிய செலாவணிக் கிடைக்காது. மத்த நாடுகளோடு வியாபாரம் பண்ணி அதனால, நமக்கு தொழில் வந்தால் தானே, நம்ம நாடு உயர்வான நாடுன்னு சொல்ல முடியும். காலங்காலமா? இப்பவும் கூட?
அப்ப, சிலைகளுக்கு, ஆடை அணிவித்து, அன்னதானம் படைத்து, விலையுயர்ந்த நகைகளை, ஆடைகளை இவங்க கொடுக்கும் போது, நெசவாளர்களுக்கு தினந்தோறும் வேலை கிடைத்துக் கொண்டே இருக்கிறது. உயரிய கலைநுட்பத்தோடு, ஆடைகளை அவர்கள் நெய்ய முடிகிறது. விலை உயர்ந்ததாக பண்ண முடிகிறது. இந்த விலை உயர்ந்ததை பணக்காரர்கள் கோவில்களுக்கு வாங்கிக் கொடுக்கிறார்கள். கோவில்ல என்ன பண்றாங்க, பிராக்டிக்கலா? உங்க முன்னாடி எல்லாத்தையும் சாத்தி எடுத்துட்டு, இவங்களுக்கெல்லாம் பிரசாதத்தை கொடுத்துட்டு இவர்களை எல்லாம் அனுப்பி விட்டுட்றாங்க. அதுக்கப்புறம் அதை ஏலம் தான் விட்றாங்க. அதுதான் உண்மை.
இந்த மாதிரி கடவுளுக்கு சாத்தப்பட்ட உடைகள், புடவைகள் எல்லாம் இன்றைக்கு ஏலம் விடப்படும்னு சொல்றாங்க. அங்க போறாங்க, ஏலத்தக்கு எடுக்குறாங்க. பத்தாயிரம், இருபதாயிரம் ரூபாய் புடவைகள் சில சமயங்களில் 500 ரூபாய், 200 ரூபாய், 300 ரூபாய்க்கு கிடைக்கிறது. ரொம்ப காஸ்ட்லியான விலை உயர்ந்த ஆடைகளெல்லாம் விலை மலிவாக எடுக்கறதுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. எவ்வளவு சுப்பீரியர் தாட்ஸ் பாருங்க.
இதை ஓசில கொடுத்தாங்கன்னா கூவிக் கொடுக்கும் வேலையா இருக்கும் அவங்களுக்கு. என்னது ஒரு டிரஸ்சுன்னா, நம்ம செலவில வாங்கிப் போடணும். இது காஸ்ட்லியா இருக்கு, 20 ஆயிரம் ரூபாய் புடவை. நம்மளால வந்து 200 ரூபாய்க்கு தான் வாங்க முடியும். ஆனால், இருபதாயிரம் ரூபாய் புடவை எப்புடி? கோயில்ல தான் அவரு சாத்திட்றரே, ஏலம் போட்டாங்க. நான் துண்டு போட்டு வாங்கினேன். ஓசி கிடையாது. அவங்க நல்லா ஜம்முன்னு கட்டிக்குவாங்க.
எனவே, விலையுயர்ந்த ஆடைகள், ஏழை எளியவர்களுக்கு, தொடர்ந்து கிடைக்க வேண்டும். விலையுயர்ந்த ஆடைகளை நெய்யக் கூடிய நெசவாளர்களுக்கு, தொடர்ந்து வேலை வாய்ப்பு இருக்க வேண்டும். எந்த ஒரு கலையும், பட்டுப்போய் விடக்கூடாது. தொடர்ந்து இருக்கணும். அதனாலத்தான், இந்து ஆலய முறைகளில் பார்த்தீர்களானால், எல்லாத் தொழில்நுட்ப கலைஞர்களின் வேலைவாய்ப்புகளும் ஏதாவது ஒரு ஃபாம்ல இருக்கும்.
கார்பெண்டர் பண்றவங்க, கோல்டு பிளேட்டிங் பண்றவங்க, நகை செய்றவங்க, பஞ்ச உலோகத்தால சிலை செய்பவர்கள், ஆடை நெய்யக் கூடியவர்கள். எது இல்ல? எல்லாத் தொழிலாளர்களுக்கும் வேலை இருக்கும். கட்டட வேலை பாக்கறவங்க, சித்தாள் வேலை பாக்கறவங்க, எலக்ட்ரிகல், அதாவது அந்தக் காலத்துல இருக்கற எலக்ட்ரிகல், கலசங்கல்ல இருந்து காப்பர் பிளேட்ட கொண்டு வந்து பூமிக்குள்ள புதைத்து, சுற்று வட்டாரத்துல எல்லாம் மின்னல் தாக்காம பாதுகாக்கும் மின்சார வேலை. சமையல் காரர்கள், துப்புறவு பணியாளர்கள், உணவு பரிமாறுகிறவர்கள், பூ அலங்காரம் செய்கிறவர்கள், பொற்கொல்லர்கள், தீப்பந்தம் பிடிப்பவர்கள், சிற்பக் கலைஞர்கள், நாடக கலைஞர்கள், நாட்டியக்காரர்கள், இசைக்கருவி வாசிக்கிறவர்கள், ஓவியர்கள், பாதுகாப்பு வீரர்கள், மண்பாண்ட கலைஞர்கள். யோசித்துப் பாருங்கள். அனைவருக்கும் ஏதாவது ஒரு வேலை இருக்கட்டும்.
அதனால, எப்போதும், எல்லோருக்கும் வேலை. எப்போதும் எல்லோருக்கும் வருமானம். எல்லாக் கலைகளையும் தூக்கி நிறுத்தக் கூடிய ஒரு விதம். அனைத்துமே, உயரிய இந்து தர்ம, ஆலய வழிபாட்டு முறைகளிலும், பண்பாட்டிலும், பழக்க வழக்கங்களிலும், ஆலய வழிபாட்டிலும் மட்டுமே இருக்கிறது.
யோசித்துப் பாருங்க. மத்த மதங்களிலெல்லாம், அது கிடையாது. ஓரளவுக்கு கொஞ்ச கொஞ்சம் இருக்கலாம். எல்லாப் பகுதி மக்களையும், எல்லா உழைப்பாளர்களையும், ஊதியம் கொடுத்து, உருவாக்கக் கூடியது, இந்து சமயம் ஒண்ணு தான். எந்த தொழில்நுட்பத்தையும் அதிகமாக பயன்படுத்துவது இந்து சமயம் ஒன்று தான்.
நன்றி, வணக்கம்
Original Audio posted in WhatsApp Group ‘Science is Hinduism’ on 07 June 2018.